• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jul 2012   »  ஜம்இய்யதுல் உலமா சிறப்புக் கூட்டம்!

                                            சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் தலைமையில்

                                                  ஜம்இய்யதுல் உலமா

சிறப்புக் கூட்டம்

      உரைத் தொகுப்பு : ஆஷிகுல் கலீல் B.Com., திருச்சி

 

      ம்இய்யதுல்  உலமாவின் சிறப்புக் கூட்டம் அதன் நிறுவனர் குத்புஸ்ஸமான் ­ஷம்ஷுல் வுஜூது ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகமவர்கள் தலைமையில், சென்ற 28.06.12 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.


      திருச்சி.கலீபா. எம். சிராஜுத்தீன் ஹக்கிய்யுல் காதிரி B.Sc., அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தைத் தொடங்கி வைக்கும் முகமாக சென்னை கோவளம் பள்ளி இமாம் மெளலவி, பக்கீர் முஹம்மத் ஆலிம் கிராஅத் (இறை மறை வசனங்கள்) ஓதினார்.


      இராமநாதபுரம் நகர் ஈஸாப்பள்ளி இமாம் மெளலவி ஹாஃபிள்  V.M. முஹம்மது ஹஸன் ஹக்கிய்யுல் காதிரி யாஸீனிய் வஹ்ததுல் வுஜூது அறபுப்பா பாடினார்.


      திண்டுக்கல் மறை ஞானப்பேழை ஆசிரியர். கலீபா ஆலிம் புலவர்  S. ஹூஸைன் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பஈ கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். திருச்சி  கிப்லா மாத இதழ்ஆசிரியர் கிப்லா ஹள்ரத் தமிழ் மாமணி மெளலவி.

N. அப்துஸ்ஸலாம் ஆலிம்  ஹக்கிய்யுல் காதிரி B.Com.,  வரவேற்புரை நிகழ்த்தினார்.பின்னர் ஜம்இய்யதுல்  உலமாவின் நிறுவனர் குத்புஸ்ஸமான் ஷ ­ம்ஸுல் வுஜூத் ஜமாலிய்யா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் அருளிய சத்தியப் பிரகடனங்கள்!


      ஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ். வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ். வ அலா ஆலிஹி வஅஸ்ஹாபிஹி ஹிஸ்பில்லாஹ்.


      இங்கு குழுமியுள்ள கலீபாக்களே! முரீத்களே! ஆலிம்களே! உங்கள் அனைவருக்கும் ஸலாத்தினை உரித்தாக்குகின்றோம்.


      ஜம்இய்யத்துல் உலமா என்னும் இந்த அமைப்பை நாம் உருவாக்கியதன் நோக்கம் நல்ல ஃபத்வாக்களை- உண்மையான  ஃபத்வாக்களை- உயர்வான  ஃபத்துவாக்களை வெளியிட வேண்டும் என்பதற்காகத்தான்.  அத்தோடு பொய்யான - கொஞ்சமும்  உண்மையில்லாத -அற்பமான  ஃபத்துவாக்களுக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டும்; மறுப்பு தெரிவிக்க வேண்டும்.  இதுவும் மிகவும் முக்கியமானது. அந்தக்காலத்தில்  நல்ல நல்ல உஸ்தாதுமார்களும் நன்கு கற்றுத் தேர்ந்த ஆலிம்களும் நீதமான முறையில் நல்ல ஒழுங்கு முறையில் ஃபத்துவாக்கள் வழங்கி வந்தனர். ஆனால் இன்றோ நினைத்தவர்களெல்லாம் - நினைத்த மாதிரியெல்லாம் ஃபத்வா கொடுக்கத் தொடங்கி விட்டனர்; துணிந்துவிட்டனர்!


      கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல மவர்கள்) ஷிர்க் - இணை வைத்து விட்டார்கள் (நஊதுபில்லாஹ்) என்றுபகிரங்கமாகக் கூறிவருவோருக்கு எதிராக யாராவது ஃபத்வா கொடுத்தார்களா?


      ரசூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே ஷிர்க் செய்தவர்கள் எனக் கூறுவது எவ்வளவு பெரிய பாபமான செயல்?


      இவ்வாறெல்லாம் கூறுவதற்குக் காரணம் இஸ்லாத்தை இழிவுபடுத்துவ தற்காகத்தான்.  முஸ்லிம்களை இழிவு படுத்துவதற்காகத்தான்!


      ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களே ஷிர்க் செய்தார்கள் என்றால் முஸ்லிம்களனைவரும் ஷிர்க் செய்தார்கள் என்று தானே பொருள்?


      இவ்வாறு படுமோசமான வழிகேடுகளுக்கு பதில் கொடுக்காமலிருப்பதற்கு என்ன காரணம்? ஆலிம்களுக்கிருக்கின்ற பயம்தான்!


      உண்மையைச் சொல்வதற்கு ஏன் பயப்பட வேண்டும்? ஒரு மிருகத்தை சாப்பிடுவது கூடும் என்பதாகக் கூறக்கூடியவர்கள், நாளை யானையைச் சாப்பிடலாம் என்பதாகவும் கூறுவார்கள்! அதையும் உலமாக்கள் கேட்டுக் கொண்டு மெளனமாக இருக்கப் போகின்றார்களா?


      ஒரு ஹதீஸைக்கூறினால்.  அது தங்களுக்கு விருப்பமில்லை என்னும் பட்சத்தில் உடனே அதனை “மவ்ளூஉ”  என்பதாகக் கூறிவிடுகின்றனர். பல நூறுஆண்டுகளுக்கு முன் ஹதீஸ்களைப் பற்றி முழுமையாக புகாரீயிலும் முஸ்லிமிலும் ஒழுங்கு செய்யப்பட்டுவிட்டன.  அவ்வாறிருக்க...புதிதாக ஏன் குழப்பத்தை உண்டு பண்ண வேண்டும்?


      ஒன்று....இஸ்லாத்தையும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் தொடர்ந்து இழிவுபடுத்திவருபவர்களை எதிர்த்து உரிய  ஃபத்வாக்கள் வருவதில்லை. அல்லது ஃபத்வா   கொடுக்கத்தகுதியே இல்லாதவர்கள் - யுனிவர்ஸிடியில் பட்டம்  எடுத்தவர்கள் ஃபத்வாகொடுக்கத் தொடங்கிவிட்டனர்! இவைதாமே இன்று நடைபெறுகின்றன? யார் ஃபத்வா கொடுக்க இயலும்? யார் ஃபத்வா கொடுக்கத் தகுதி பெற்றவர்கள்? என்பவற்றிற்கு சில ஒழுங்கு முறைகளும் அழகிய முன்னுதாரணங்களும் இருக்கின்றன! அவைகளெல்லாம் இன்று மீறப்படுகின்றன! மாற்றப்படுகின்றன!


      புகையிலை மக்ரூஹ் என்பதாகத்தான் இஸ்லாம் கால காலமாகக் கூறிவருகின்றது! அதனை ஹராம் என்பதாகக் கூறுவதற்கு - ஃபத்வா கொடுப்பதற்கு அதிகாரம் யார் வழங்கினார்? புகையிலை ஹராம் என்பதாக எந்த கிதாபில் கூறப்பட்டுள்ளது?  

காட்டிடவியலுமா?.  இஸ்லாம் சிலவற்றை ஹலால் என்றும் சிலவற்றை ஹராம் என்றும் பகிரங்கப்படுத்திவிட்டது!


      ஹலாலை ஹராமென்றும் ஹராமை ஹலால் என்றும் மாற்றுவதற்கு யாருக்கும் எவ்வித அதிகாரமோ அருகதையோ இல்லை!

 

      மேலும், ஃபத்வாகொடுப்பது தமாஷான வி­ஷயமுமில்லை!


      திருக்குர்ஆன் ஷரீஃபைப்  பற்றிய தெளிவான ஞான விளக்கமும் நாஸிக் மன்சூக் பற்றிய விளக்கமும் -  ஹதீஸ்களைப்பற்றிய தெளிவான விளக்கமும், ராவிகள் யார்?என்பதன் அறிவும், உசூலுல்  ஃபிக்ஹ், உசூல் ஹதீஸ் போன்றவற்றின் தெளிவான அறிவும் பெற்றவர்கள் தாம் ஃபத்வாக்கள் வழங்க முடியும்!


      மேலும் இன்னார் இன்னார் தாம் ஃபத்வா கொடுக்க வேண்டும் எனும் ஒழுங்குமுறையே இருக்கின்றது!ஒவ்வொரு  மதுஹபுகளிலும்  ஃபத்வாக்களுக்கென கிதாபுகள் உள்ளன.


      (எங்கள்) ஷாபிஈ மத்ஹபில் ஃபத்ஹுல் முஈன் மற்றும் உம்தா போன்ற கிதாபுகள் ஃபத்வாக்களுக்கான கிதாபுகளாக உள்ளன.


      ஃபத்வாகொடுப்பவர்கள் இம்மாதிரியான கிதாபுகளைப் படித்துப் பார்க்க வேண்டும்.


      அவ்வாறில்லாமல் யுனிவர்சிடியில் படித்துவிட்டு வந்தவர்க ளெல்லாம் ஃபத்வா கொடுக்க இயலாது; அவ்வாறான ஃபத்வாக்களையும் ஏற்றுக்கொள்ளவியலாது! ஒழுங்கு முறையற்ற ஃபத்வாக்களால் யாரும் யாரையும் காஃபிராக்க இயலுமே!அதற்குப் பெயர் ஃபத்வாவா? முஃமினான ஒருவரை அவரிடம் ஈமானுடைய தன்மைகளிருப்பின் அவரை காஃபிர் எனக் கூறவியலாது என்பதுதான் ஃபத்வாவின் அடித்தளம்!அவ்வாறிருக்க தமக்குப் 

 பிடிக்காதவர்களையயல்லாம் காபிர்கள் எனக் கூறிவிட்டால் முஸ்லிம்கள் அனைவரும் காபிர்களாகி விடுவார்களே? இதுதான் ஃபத்வாவின் இலட்சணமா


      ஷாபிஈ மதுஹபின்படி ஒருவர் மூன்று நேர தொழுகைகளை மனமுரணாக (வேண்டுமென்றே) விட்டுவிட்டால், அவர் காஃபிராகிவிட்டார் எனக் கூறப்பட்டுள்ளது! அவ்வாறு தொழாதவர் களையெல்லாம் ஃகாபிர்கள் என ஃபத்வா கொடுத்துவிட்டீர்களா? கொடுக்கவில்லை யென்றால் ஏன் கொடுக்கவில்லை?


      குடிப்பழக்கமுள்ளவர்களுக்கு- பெரும் பாபங்கள் செய்பவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி கஃபனிடுவதோ ஜனாஸா தொழவைப்பதோ அடக்கஞ் செய்வதோ கூடாது என்பதாக இதுவரை ஃபத்வாக்களை யாராவதுஅளித்திருக் கின்றார்களா? அவ்வாறுஅளிக்கவில்லை யென்றால் அதற்கு என்ன காரணம்?


      ஹராமை செய்பவர்களை ஆதரிப்பது தான் உங்கள் நோக்கமா?


      மேலும் ஃபத்வாகொடுக்கப் புறப்பட்டுள்ளவர்களிடம் கேட்கின்றோம் :


      “அல்லாஹுதஆலா திருக்குர்ஆனில் நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லமவர்கள் மீது நான் ஸலவாத்துச்சொல்கின்றேன்; நீங்களும் ஸலவாத்துக் கூறுங்கள் என்பதாகக் கூறுகின்றான்!”


      இவற்றை நன்குதெரிந்து கொண்டே சிலர் தாமும் ஸலவாத்துக் கூறாமலிருப்பதுடன் ஸலவாத்து கூறாதீர்கள் என பகிரங்கமாகக் கூறி வருகின்றார்களே.. அவர்கள் ஃகாபிர்கள் இல்லையா? அல்லாஹுதஆலா கூறுவதை பகிரங்கமாக மறுக்கக்கூடியவர்களை காஃபிர்கள் என ஏன் இதுவரை ஃபத்வா கொடுக்க உங்களால் முடியவில்லை?காரணம், பணமா? பயமா?


      ஃபத்வா என்பது நேர்மை யானதாக இருக்க வேண்டும்.  காகிதமும் பேனாவும் மையும் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஃபத்வா கொடுத்து விடுவதா? அது தான் ஃபத்வாவின் இலட்சணமா?


      “ஒருவரின் நகத்தினுள் அழுக்கோ தூசியோ இருந்தால் அவருடைய ஒளு கூடாது; அதனால் தொழுகையும் கூடாது!” என்பதாக ஒரு ஃபத்வாவில் கூறப்பட்டிருந்தது!


      ஆனால், உடலை தண்ணீரில் கழுவ வேண்டும் என்பது தான் சட்டம்; அது நிறைவேற்றப்பட்டு விட்டால் ஒளு கூடும் என்பதாக இமாம் கஸ்ஸாலி ரஹிம ஹூல்லாஹ் அவர்கள் அன்றே தங்கள் கிதாபில் கூறிவிட்டார்கள்!அதுதான் ஃபத்வா! அது முடிந்து விட்டது! அதற்கு மேல் அதனைப் பற்றி சிந்திக்க என்ன இருக்கின்றது? ஒரு ஃபத்வா அடுத்த ஃபத்வாவால் நீக்கப்பட்டுவிடும்! மேலும் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு விடும்! மேலும் அனைத்தும் நிறைவு  செய்யப் பட்டு விட்ட மார்க்கத்தில் புதிதாக ஒன்றை ஃபத்வா என்னும் பெயரால் புகுத்துவது தவறு! அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது!  பிறர் மேல் உள்ள கோபத்தாலோ பொறாமை யாலோ  ஃகாபிர் பட்டம் கொடுப்பதை ஃபத்வா என எப்படிக்

 கூறவியலும்? அதனை ஒருக்காலும் ஏற்கவியலாது


      இவ்வாறு வி­ஷமத்தனமாக கொடுக்கப்படும் ஃபத்வாக்களுக்கு எதிர்ப்புக்காட்ட வேண்டும்! எவர் எங்கிருந்து ஒரு புதிய ஃபத்வாவை தெரிவித்தால் அதற்குத் தகுதி படைத்த ஆலிம்கள் ஒன்றிணைந்து கிதாபுகளின் ஆதாரங்களுடன் உடனே மறுப்பு தெரிவிக்க வேண்டும்! அஹ்மதிய்யாக்களை காஃபிர்கள் என ஃபத்வா கொடுக்கப்பட்டுவிட்டது!


      ஆனால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களையும் இஸ்லாத்தையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் வஹ்ஹாபிகளை காஃபிர்கள் என ஏன் இதுவரை யாரும் ஃபத்வா கொடுக்கவில்லை?


      அல்லாஹ் இல்லை என்பவனும் காஃபிர்தான்! அல்லாஹ்விற்கு மாறு செய்பவனும் காஃபிர்தான்.  அதுபோல் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களுக்கு மாறு செய்பவனும் காஃபிர்தான்!


      எனவே, ஒழுங்குமுறையான ஃபத்வாக்கள் வெளிவரவேண்டும்! அவை உடனுக்குடன் வெளிப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு நிறைவுசெய்கின்றோம் (வலில்லாஹில் ஹம்து)


     ஜம்இய்யத்துல் உலமா சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட உயரிய தீர்மானங்கள் : -

      1.  ஜம்இய்யதுல் உலமாவின் சிறப்புக் கூட்டத்திற்கு புனித விஜயம் செய்து அருளுரை வழங்கிய எமது சபையின் நிறுவனர் சங்கைமிகு ஷைகு நாயகம் குத்புஸ்ஸமான் ­ஷம்ஷில் வுஜூது ஜமாலியா ஸய்யித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகமவர்களுக்கு நன்றியை உரித்தாக்குகின்றோம்.


      2.  சுன்னத் வல் ஜமாஅத் அகீதாக்களை (கொள்கைகள்)முழுமையாக ஒன்றிணைத்து ஒரு நூல் வடிவில் வெளியிடுவது.


      3.  இஸ்லாமிய சிறப்பு தினங்கள் பற்றிய செய்திகளை அவ்வப்போது சிறு சிறு பிரசுரங்களாக வெளியீடு செய்வது. 


      4.  சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளைப் பரிபூரணமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆலிம்களை ஜம்இய்யத்துல் உலமா சபையில் உறுப்பினர்களாகச் சேர்த்திடப் பாடுபடுவது!                                                                                                                                                                    - இவண் -


      ஆலிம் புலவர்.கலீபா. மெளலவி. S.ஹூஸைன் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பஈ (தலைவர்- ஜம்இய்யதுல் உலமா) Cell : 9944576165


      கிப்லா ஹள்ரத் மெளலவி. N.அப்துஸ்ஸலாம் ஆலிம் ஹெளதிய்யி ஹக்கிய்யுல் காதிரி B.Com., (பொதுச் செயலாளர் - ஜம்இய்யதுல் உலமா)  Cell : 99438 59758


      மெளலவி. H.அப்துல் கறீம் ஆலிம்ஹெளதிய்யி ஹக்கிய்யுல் காதிரி B.A; (பொருளாளர் - ஜம்இய்யதுல் உலமா)   Cell: 94435 68063