• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jun 2012   »  இஸ்லாமிய தலைமை நூலகம்

இஸ்லாமிய தலைமை நூலகம்

 

இஸ்லாமிய வரலாற்றில் இப்படிஒரு குறிப்பு உண்டு!

முன்னர் பக்தாதில் எதிரிகள் படையயடுத்து வந்தபோது அங்கிருந்த நூல்நிலையங்களை யயல்லாம் தீக்கிரையாக்கி, மீதமிருந்த நூல்களை டைக்ரீஸ் நதியில் மலை மலையாககொண்டுபோய் வீசி எறிந்தார்களாம்.  நதியில் கொட்டியகிதாபுகள் அந்த நதியையே நிறைத்து, இக்கரைக்கும் அக்கரைக்கும்பாலம் போன்று ஆகிவிட குதிரை வீரர்கள் அதன் மீது ஏறி நதியைக் கடந்தார்களாம்.

என்ன கொடுமை இது!

எத்தனையோ அரிய கிதாபுகள். பெரிய பெரிய இமாம்களின் பொக்கி­ங்களெல்லாம் அதில் அமிழ்ந்து அழிந்து போயின!

ஒரு நதியையேநிறைக்குமளவு - மறைக்குமளவு நூற்கள் இருந்ததென்றால் எத்தனை ஆயிரம் நூற்கள் அந்தநூலகத்தில் சேகரிக்கப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தால் வியப்பாகஇருக்கிறது!

முஸ்லிம்கள்  அறிவில் - கல்வியில் முன்னிலை வகித்தார்கள்என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

ஆனால் இன்று!

முஸ்லிம்களிடம்படிப்பறிவு குறைவு என்பதோடு நூற்களைப் படிக்கும் அறிவும் ஆர்வமும்குறைந்துபோனது  என்பது அனைவரும்அறிந்ததே!  இருப்பினும் தமிழகத்தில்தற்போதுள்ள நிலை மகிழ்வாக இருக்கிறது. புதிய புதிய நூற்கள் - தர்ஜுமாக்கள் -மொழி பெயர்ப்புகள் அறிஞர்களின்நூற்களின் மறுபதிப்புகள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன.

இப்போதுவெளிவரும் நூற்கள் - முன்னர் வெளிவந்தவை - அங்காங்கே மறைந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் சந்ததிகளிடம் இருக்கும்அரிய நூற்கள் அனைத்தையும் திரட்டி சென்னையில் இஸ்லாமிய தலைமை நூலகம் ஒன்றைஏற்படுத்த வேண்டும். தமிழ் மட்டுமின்றி உர்தூ. அறபி நூற்களும்சேகரிக்கப்படவேண்டும்.  தமிழகத்தின் பொதுநூலகத்துறை ஆண்டு தோறும் நூல்களைத் தேர்வு செய்து வாங்குவது போல இஸ்லாமியநூற்களையும் தேர்வு செய்து வாங்கி வைக்க வேண்டும்.                           

 

ஆராய்ச்சியாளர்கள் - கல்வியாளர்கள் - மாற்று சமய அறிஞர்கள்-ஆலிம்கள் - மாணவர்கள் அனைவருக்கும் பயன்தரும் வண்ணம் அதுதோற்றுவிக்கப்படவேண்டும்.

இஸ்லாமியர்கள்சிந்தனைப் பெருக்கோடு  வாழும் சிலநகரங்களில் இஸ்லாமிய நூலகங்கள் இருக்கின்றன. இருப்பினும் கன்னிமாரா போல விரிவான ஒரு நூலகம் அவசியம் வேண்டும். இதனால்இஸ்லாமிய எழுத்தாளர்கள் ஊக்கம் பெறுவார்கள். இதை யார் செய்வது?

     
இந்தப்பொறுப்பான பணியை வக்பு போர்டு ஏற்றுச் செய்ய வேண்டும்.

லகோடி ரூபாய்மதிப்புள்ள சொத்துக்களை உடைய வக்பு போர்டுக்குத்தான் இதற்கான சக்திஇருக்கிறது.  எழுத்தாளர்கள் -கல்வியாளர்கள் - மார்க்க அறிஞர்களை இணைத்து இதனை வக்பு போர்டு உருவாக்க வேண்டும்.

இன்றையபதிவுகள்தாம் நாளைய வரலாறாகின்றன! இஸ்லாமிய அறிஞர்களின் எழுத்துகள், காட்டில் பெய்த மழை போல காணாமல் போய்விடாமல் அடுத்த தலைமுறைக்கு சென்றுசேர, இந்நூலகம் - தலைமை நூலகம் அமைக்கப்பட வேண்டும்.