• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jun 2012   »  ஓர் ஆய்வு

குர்ஆன்மதரஸாபாடத்திட்டங்கள்ஓர் ஆய்வு

 

இக்ரஃ! ஓதுங்கள்! என்ற சொல்லிலிருந்து இஸ்லாம் தொடங்குகிறது.  ஓதினால்தான் குர்ஆன் விளங்கும் - இஸ்லாம் புரியும்.

எந்த  வயதில் ஓதத்தொடங்குவது?

முன்பெல்லாம் நம் வீடுகளில் குழந்தைகளுக்கு 4 வயது, 4 மாதம், 4ஆம்நாள் ஆகும்போது மதரஸாக்களுக்கு அழைத்துச் சென்று பிள்ளைகளுக்கு “அலிப், பே”  என ஹஸ்ரத்மார் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்வார்கள்.

முறையே காயிதா பகுதாதிய்யா - அதன்பின் - அல்ஹம்து ஜுஸ்வு - அதன்பின்குர்ஆன் ­ஷரீப் தொடங்க வைப்பார்கள்.

குர்ஆன் ­ஷரீப்தொடங்குவது குழந்தைகள் வாழ்வில் முக்கிய விஷே­ நாளாகக் கருதப்படும்.  புதுஉடை உடுத்தி, ஒரு தாம்பாளத்தில் பத்தி, சர்க்கரை, அல்லது சாக்லேட் , பழம் சகிதம் தகப்பனார்வாங்கிக் கொடுத்த புத்தம் புது குர்ஆன் ­ஷரீஃப் - ரேஹாலியுடன் பெருமிதமாக குழந்தைகள் அன்று மதுரஸாவிற்குவருவார்கள்.  உஸ்தாதுமார்களுக்கும் அன்று  மகிழ்ச்சிதான்.  ஏனென்றால் அந்தத் தாம்பாளத்தில் ஹஸ்ரத்துக்கான காணிக்கையும்இருக்கும்!

இன்று இந்தப் பழக்கமெல்லாம் அருகிப் போய்விட்டது.  ஏனெனில் L.K.G, Pre K.G மோகத்தில் பாரம்பரிய - அத்தியாவசிய இஸ்லாமியப் பழக்கங்கள்மூழ்கிப் போய்விட்டன. 

வலிமார்கள் சாலிஹீன்களின் வரலாறுகளைப் படித்தால் அவர்களெல்லாம்நான்கிலிருந்து ஆறுவயதுக்குள் குர்ஆன்ஷ­ரீஃபை மனனமிட்டு ஹாபிழ்களாக ஆகிவிட்ட ஆச்சரியமான உண்மைகளைப் பார்க்கமுடியும். ஏன்?  இன்றும் கூட நம் அருமை செய்குநாயகம் அவர்களின் இல்லக் குழந்தைகள் ஆறுவயதுக்குள் குர்ஆன்ஷ­ரீஃபை முடித்து சரளமாக ஓதுவதை அவதானிக்கமுடியும்!


இன்று சமுதாயத்தில், பெரியவர்களைத் தொழுகைக்கு அழைப்பதற்காக ஊருக்கு ஊர் சென்று நேரம்- காசுகளைச் செலவழித்து கடும் முயற்சி செய்கிறார்களே தவிர அதே உழைப்பை குர்ஆன் மதரஸாக்களைஏற்படுத்தி ஒவ்வொரு குழந்தையும் ஓத வேண்டும் எனும் உணர்வு  சமுதாயப் புள்ளிகளிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

அக்காலத்தில் குர்ஆன் மதரஸாவின் முக்கியத்துவத்தை உணர்ந்த  கொழும்பு ஆலிம் (ரஹ்) போன்றவர்கள் தங்கள் வாழ்வையேஅதற்காக அர்ப்பணித்து ஊருக்கு ஊர் குர்ஆன் மதரஸாக்களை எற்படுத்த முனைந்து வெற்றியும்பெற்றார்கள். கொழும்பு ஆலிம் அவர்கள் மதரஸாக்களை ஏற்படுத்தியது மட்டுமின்றி அதற்கான  பாடங்களை, உரைநடையிலும், பாடல்வடிவிலும் அறபுத்தமிழில்எழுதி வெளியிட்டிருந்தார்கள். அவர்களின் “துஹ்பத்துல் அத்பால்” கிதாபை ஓதாதவர்கள் இருக்கமுடியாது.

அப்போதெல்லாம் “காயிதா பகுதாதிய்யா” எனும் பாடநூலே தொடக்க நூலாகஇருந்தது. “அல்லா பல்லா - தல்லா” என்றும், “ஆனக்கும் - அவ்னக்கும் அய்னக்கும்” எனவும், குழந்தைகள் இராகமாக ஓதுவது காதுகளுக்குஇனிமையாக இருக்கும்.

குழந்தைகள் அலிப் ஜுஸ்உவை மனனமாக-குருட்டுப்பாடமாக எழுத்து விளங்காமல்ஓதி விடுகிறார்கள் என உணர்ந்த உஸ்தாது ஒருவர் “யஸ்ஸர்னல் குர்ஆன்” என்ற பாடநூலைத் தயாரித்துவெளியிட்டார். அது நல்ல பயன்தருவதாக அமைந்தது. குர்ஆன் ஷ­ரீஃபில் வரும் எல்லா விதமான சொற்றொடர்களும்அதில் வருமாறு செய்து முறையான பயிற்சிகளும் அமைத்திருந்தார்.  இதனை  மாணவர்களுக்குக்கற்பிப்பது எப்படி என்ற வழிகாட்டிக் குறிப்புகளும் அதில் இருந்தன. ஆனால்  குறிப்புகள் உருது மொழியில் இருந்ததால் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் பயன் பெறும் வண்ணம் தமிழில்குறிப்புகளைப் பதிப்பித்து, திண்டுக்கல் தெளஃபீக் புக்டிப்போ - சென்னை பஷாரத் பதிப்பகம்போன்ற வெளியீட்டாளர்கள் யஸ்ஸர்னல் குர்ஆனை தமிழ்க் குறிப்புகளுடன் வெளியிட்டார்கள்.யஸ்ஸர்னல் குர்ஆனை தற்போது 5 விசிடிகளில் பதிவுசெய்து அதன்மூலம் திருமறையை கற்பித்துவருகிறார் திருச்சி கிப்லா மாதஇதழ் ஆசிரியர் H. அப்துஸ்ஸலாம் ஆலிம் B.Com. அவர்கள்.

குர்ஆன் ஓதும் பயிற்சி ஒரு புறமிருக்க, மார்க்க அறிவுகளை அறிந்துகொள்ள தீனிய்யாத் பாடங்களும் வெளியிட வேண்டிய அவசியத்தை உணர்ந்த கோவை மாவட்ட ஜமாஅத்துல்உலமா அமைப்பினர் அறபுத் தமிழில் எளிய வாக்கியங்களில் பல பாகங்களில்  பாட நூலை வெளியிட்டிருந்தார்கள்.

இதற்கு முன்னர்  “ஸிம்துஸ்ஸிப்யான்”  என்ற அறபுத்தமிழ்க் கிதாபு பழைய காலத் தமிழ் நடையில்,  “பிக்ஹ் மஸ் அலாக்கள் - துஆக்கள்” மார்க்கச் சட்டங்களைஅடக்கியதாக - ஒரு பூரணமான கிதாபாக குர்ஆன் மதரஸாவில் அங்கம் வகித்து வந்தது.  இது தமிழக மக்களின் இல்லந்தோறும் இன்றியமையாத  மார்க்க நூலாக இருந்து வந்தது.  பெண்கள் இதை ஓதியே  மதரஸாக்களில் ஓதிப் பட்டம் பெறும் ஆலிமாக்களைப்போலத் திகழ்ந்தார்கள். சிம்துஸ்ஸிப்யானின் பழந்தமிழ் நடை விளங்குவதற்கு சிரமமாக இருப்பதைஉணர்ந்த பள்ளபட்டி அப்துல்லாஹ் பாஷா ஹள்ரத் இக்கால நடை வழக்கில் எழுதி ஒருகிதாபு வெளியிட்டார்.இதற்கிடையே சிறுவர்களது மார்க்கக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த மார்க்க அறிஞர்கள்பலவடிவங்களில், பல மாதிரிகளில் பல்வேறு  காலகட்டங்களில்பாடல்களையும் தீனிய்யாத் நூற்களையும் வெளியிட்டு வந்தார்கள்.    பின்னர் மாறிவரும் காலத்திற்கேற்ப ஒலிநாடா வடிவிலும்- எழுத்து வடிவிலும் இணைந்து சில வெளியீடுகள் வெளிவந்தன.  குறிப்பாக ஹி. அப்துஸ்ஸலாம் ய.ளீலிது இல்முல் குர்ஆன்எனும் ஒலி நாடா இணைந்த நூலை வெளியிட்டிருந்தார். தமிழகத்தில் இந்த முயற்சிகள் சிறிதுசிறிதாய் நடந்து கொண்டிருக்க, கேரளாவில் இஸ்லாமியப் பாடத்திட்டம் அழகிய முறையில் வெளிவந்துமுழுமையாக பயன் தந்த வண்ணம் இருந்தது. இஸ்லாமியப் பாடத்திட்டம் முழுமையாக வெளிவர வேண்டும்என ஆர்வம் கொண்டிருந்தவர்களுக்கு கேரளப் பாடத்திட்டங்கள் ஒரு முன்மாதிரியாக அமைந்தன.  தமிழகத்திலும் இதுபோன்ற முயற்சிகள் தொடங்கப்பட்டன.

சென்னை அல்ஹரமைன் டிரஸ்ட் என்ற நிறுவனம் பள்ளிக் கூடங்களின் பாடத்திட்டத்தைப் போல தனது நூலை வடிவமைத்திருந்தது. இதில் என்ன ஒரு பிரச்சனை என்றால், முஸ்லிம் குழந்தைகளுக்கு நடத்தப்பட வேண்டியமுக்கியமான பாடத்திட்டத்தை, ஆயிரக்கணக்கான மார்க்க அறிஞர்களின் அங்கமாகிய ஜமாஅத்துல்உலமாவோ- பல்லாயிரம் கோடி சொத்துக்களை கையாளும் வக்பு போர்டோ  தமிழகம் முழுவதற்குமான ஒரே சீரான பாடத்திட்டத்தைஇதுவரை தயாரித்துத் தரவில்லை என்பது வேதனையான வி­யம்.        வக்பு போர்டுநினைத்தால் தரமான ஆலிம்களை நியமித்து பாடத்திட்டம் தயாரித்து - அல்லது வெளிவந்திருக்கும்தரமான தீனிய்யாத் நூல்களை அங்கீகரித்து மதரஸா மாணவர்களுக்கு இலவசமாக வழங்கலாம்.  அதற்கான தெம்பும் திராணியும் வக்பு போர்டுக்கு இருக்கவேசெய்கிறது.

ஊர்கூடி தேர் இழுக்க வேண்டிய இப்பணியை ஒரு சில தனிமனிதர்களும்- அறக்கட்டளைகளும் செவ்வனே செய்து வருகின்றன. இதன் பயன் என்ன வென்றால், குர்ஆன் மதரஸாவில்ஸ்கூல் பாடத்திட்டம் போல பாடங்கள் போதிக்கப்படுகின்றன. மாணவர்களும் ஆர்வமாக கல்வி கற்கின்றனர்.ஆசிரியர்களும் ஆர்வமாக கற்பிக்கின்றனர்.

இந்த வெளயீடுகளில் சில முக்கியமான வெளியீடுகளை இங்கே காணலாம்.


1.  சென்னை அல்ஹரமைன் டிரஸ்ட்டின் வெளியீடு.

2. சென்னை ஸயீதா பதிப்பகத்தாரின் “இர்ஷாதுல் மகாதிப்”

3. சென்னை “அன்வாருஸ்ஸுஃப்பா மக்தப் வழிகாட்டி” ( சென்னை அல்ஹரமைன்டிரஸ்ட் வெளியிட்ட பாடத்திட்டத்தையே இப்போது இவர்கள் வெளியிடுகின்றார்கள்)

4. வேலூர் தாருல் கதீப் நிறுவனத்தின் “தல்கீன்”.

மற்றும் பலரது வெளியீடுகள் வந்துள்ளன.

இவற்றில் அன்வாருஸ்ஸுஃப்பா, ஸயீதா பதிப்பகத்தாரின் இர்ஷாதுல் மகாதிப்ஆகியவை  குர்ஆன் மதுரஸாக்கள், முஸ்லிம்கள் நடத்தும்ஓரியண்ட் பள்ளிகள், கான்வென்ட்டுகளில் பாடத்திட்டங்களாக வைக்குமளவு முழுமை பெற்று விளங்குகின்றன.அன்வாருஸ்ஸுஃப்பா பாடநூலில் உருதுவும் அறபு மொழியும் பயிற்றுவிக்கப்படுவது இதன் தனிச்சிறப்பாகும். வேலூரிலிருந்து வெளிவந்த தல்கீன் எனும் நூல், கேள்வி பதில் வடிவில் வி­யங்களை விரிவாக விளக்குகிறது.  இது 100 ஆண்டுகளுக்குமுன் ஷைக் முஹம்மது அப்துல்மஜீத் வேலூரி அவர்களால் உருதுவில் எழுதப்பட்டு இப்போது தமிழில் வெளிவந்திருக்கிறது.

சமுதாய இளஞ்சிறார்களின் நிலையை யோசித்து அவர்களுக்காக இலகுவாக பாடநூல்ஆக்கித் தந்த இந்த வெளியீட்டாளர்கள்  சமுதாயத்தின்பாராட்டுக்குரியவர்கள். இவர்களின்  அக்கறைமிக்கமுயற்சியை சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

மேலும் இந்நூல்களின் வெளியீட்டாளர்கள்,  ஜமாஅத்துல் உலமா, வக்பு போர்டு இணைந்து  எதிர்காலத்தில் கீழ்வரும் அமைப்பில் செயல்படவேண்டும்.

1.         குர்ஆன் மதரஸாவில்சென்று ஓதுவதற்கான வாய்ப்பை இழந்தவர்களுக்காக அஞ்சல் வழிக்கல்வி முறையினை ஏற்பாடு செய்தல்.

2.         இத்திட்டத்தில்இணைந்தவர்களுக்கு நேர்முகப்பயிற்சிக்காக செமினார் வகுப்புகளை நடத்துதல்.

3.         இதில் கற்பிக்கஅந்தந்த மஹல்லா இமாம்களை ஒருங்கிணைத்துப் பயன்படுத்துதல்.

4.         இதற்கான செலவுகளைவக்ஃப் வாரியம் ஏற்றுக் கொள்ளுதல்.

            சமுதாயம் தன்னிறைவைஅடைய உலமாக்களும் உமராக்களும் (அறிஞர்களும் - செல்வர்களும்) இணைந்து செயல்பட வேண்டும்என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புக் கட்டளை. இங்கே வக்புபோர்டுதான் உமராக்களின் இடத்தை வகிக்கிறது.

            இருவரும் இணைந்துபணியாற்றினால்  மார்க்க அறிவில் முழுமைபெற்ற  ஓர் இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்க முடியுமென்பதில்எந்தவிதமான சந்தேகமுமில்லை.