என்றும்வழிகாட்டும்இயற்க்கைநெறிஇஸலாம்
(இங்கு இரு நிகழ்ச்சிகள் பதிவுசெய்யப்படுகின்றன. நடந்த இந்த இரு நிகழ்வுகளும் சிந்தனை செய்வோர்க்கு இஸ்லாம் என்றும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது என்பதை நினைவூட்டுகின்றன.)
ஜா ர் இன கொடுங்கோல் ஆட்சி அஸ்தமனமானபின் ரஷ்யாவின் அதிபரானார்லெனின்; கம்யூனிஸ ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார். அப்போது தன்னுடைய நெருங்கிய சகாக்களின்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின் முக்கியப்பகுதிகள்:
“நாம் நம்முடைய ஆட்சியை நிறுவுவதில் வெற்றி பெற்று விட்டோம். இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமானால் மானிட இயலுக்குஒத்துவருகிற ஒரு வாழ்வியலைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. மானிடத் தன்மைகள் பூர்த்தி அடைய வெறும் ரொட்டி மட்டும்போதாது. அவன் ஆத்மாவைத் திருப்திப் படுத்தஒரு மதமும் தேவைப்படுகிறது.”
நான் எல்லா மதங்களையும் மிக ஆழமாக அலசி ஆராய்ந்து பார்த்தேன். கம்யூனிஸ சித்தாத்தங்களுடன் ஒத்துவருகிற எந்த மதமும்என் கண்களுக்குப் படவில்லை; ஒரே ஒரு மார்க்கத்தைத் தவிர!
தற்சமயம் அந்த மார்க்கத்தின் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. இதைப்பற்றி நீங்கள் நன்கு சிந்திக்கவும், ஆலோசிக்கவும்உங்களுக்கு கால அவகாசம் தருகிறேன். அவசரப்படாமல்ஆற, அமர நன்றாக யோசியுங்கள்.
இந்தக் கேள்வி கம்யூனிஸத்துக்கு வாழ்வா சாவா என்ற கேள்வி. எந்த அளவுக்கு நேரம் வேண்டுமோ அந்த அளவு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நான் கொண்டுள்ள கருத்துதவறாக இருக்கலாம். ஆனாலும் நாம் நிதானமாக பொறுமையாக யோசிக்க வேண்டும்.
கம்யூனிஸ கோட்பாட்டின் உலகவியல் கொள்கைக்கு ஒத்து வருகிற மார்க்கம்இஸ்லாம் ஒன்றே என நினைக்கிறேன்...... என்றார் லெனின்.
லெனினின் இந்தப் பேச்சைக் கேட்ட கூட்டத்தினர் மத்தியில் சலசலப்பு. லெனின் குறுக்கிட்டுக் கூறினார். ஓராண்டு கழித்து இதே இடத்தில் நாம் கூடுவோம். அதுவரை எந்த மதத்தை ஏற்றுக் கொள்வது என்பது பற்றிசிந்தித்து ஒரு முடிவுக்கு வருவோம்..... என்று கூட்டத்தை முடித்தார்.
பிரிட்டிஷ் அரசின் உளவுப் பிரிவுக்கு இந்த செய்தி எட்டியது. கம்யூனிஸசக்திகளும் இஸ்லாமிய சக்திகளும் ஒன்றிணைந்தால்பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அதோ கதிதான் என அது அஞ்சியது.
இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த “கடவுள் மறுப்புக் கொள்கையான மார்க்ஸ்கொள்கை”இஸ்லாத்திற்கு ஏற்புடையதுதானா? எனக் கேள்வி கேட்டு எகிப்திலுள்ள அல் அஜ்ஹர் பல்கலையில்பணியாற்றிய மார்க்கப் பெரியவர்களுக்கு சேதி அனுப்பி விளக்கம் கேட்டது பிரிட்டிஷ் அரசு!சூழ்ச்சியைப் புரிந்துகொள்ளாத மார்க்கப் பெரியவர்கள் கம்யூனிஸமும் இஸ்லாமும் ஒரு போதும்இணையமுடியாது என்ற ஃபத்வாவை ஆலிம்கள் வழங்கினர். இதைத்தான் பிரிட்டிஷ் அரசு விரும்பியது.
உடனடியாக அந்த ஃபத்வாவை லட்சக்கணக்கில் அச்சிட்டு இஸ்லாமிய நாடுகளில்வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தது பிரிட்டிஷ் அரசு. இதை அறிந்த லெனின் அதிர்ச்சி அடைந்தார்; செய்வதுஅறியாமல் தவித்தார்!
(மே 27 தினமலர் வார இதழில், முஸ்லிம் முரசு பழைய இதழில் வெளியான செய்தி என மேற்கோள் காட்டி அந்துமணி பகுதியிலிருந்து..........)