• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jun 2012   »  எழுத்தாய் மலர்ந்த  இறை ஞானம்

எழுத்தாய்மலர்ந்த  இறை ஞானம்

 

(சங்கைமிகுசெய்கு நாயகம் அவர்கள், மறைந்த கலீபா நாகூர் யாஸீன் ஆலிம் ஸாஹிப் அவர்களுக்கு எழுதியனுப்பியபட்டோலைகளிலிருந்து.......

                                                                         தொகுத்தவர்: ஆலிம் புலவர்)

 

 

நம்மை எவர் உண்மை மனதோடு பற்றிக்கொண்டாரோ அவர் நமது பாட்டனார் ரஸூலுல்லாஹ்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் நமது பாட்டனார் முஹிய்யுத்தீன் ஆண்டவர்களையும்நமது தகப்பனார் நாயகம் குத்புல் ஃபரீத் அவர்களையும் பற்றியவராவார். அவர் துன்யா ஆகிராவில்ஜயம் கொண்டவராவார். 

அல்ஹம்து லில்லாஹ்.  (28.7.1968)

ஹக்கு தெரிந்தெடுத்த  கல்குஹக்கோடு அதிகம் தொடர்பு கொள்ளும்போது மற்ற கல்குகள், இன்ஸானான ஹக்கின் தொடர்புள்ள கல்கோடுநெருங்க முடியாது தூரச் செல்கின்றன.  இது அந்தமாசக்தியோடு நெருங்கும் சக்தி அவைகளுக்கு இல்லாமையே காரணமாகும்.  எனவே நாம் நீங்கள் எழுதியதுபோல் எவர் எம்மை விரும்புவாரோஅவரையே நாம் விரும்பவேண்டி வரும் . (25.7.1967)

 

ஹக்கு எவருக்கு எதைச் சுமக்க முடியுமோ அதையே ஹக்கு அவருக்குச் சுமக்கக்கொடுக்கும்.  மலை மலையான சுமைகளெல்லாம் எமக்குஅணுஅணுவான சுமைகளேயாம்.           (2.6.1967)

நிச்சயமாக இந்த கலீலின் வாழ்க்கையே மெளத்தாகும்.  மெளத்தே வாழ்க்கையாகும்.  நாம் ஜடரூபமாக விருந்தாலும் போக்கு வாக்குப் பலவாறிருந்தாலும்நாம் நாமாகவே உள்ளோம். (26.5.69)

ஹக்கில் ஹக்கையறிந்து ஹக்கான சமுத்திரத்தில் முங்கி ஹக்கையே அடைந்துஹக்கில் இரண்டறக் கலந்து ஹக்காவோமாக! யா ஹக். இத்தகையோரே அனல்லாஹ், அனல்ஹக் என்றார்கள்; என்பார்; என்கிறார்கள். யாஹக். ஹக்குஉங்களைக் காக்குமாக!        (21.10.1966)

ரூஹுத்தபஇய்யா, ரூஹுல் குத்ஸிய்யா, ரூஹுன்னஃப்ஸானிய்யா, ரூஹுஸ்ஸுல்தானிய்யா,ரூஹுல் அக்லிய்யா, ரூஹுர் ருவ்வானிய்யா ஆகிய இவைகள் ஆறையும் குத்ஸ் ஒன்றிலே ஃபானியாக்கியமகான்களின் ஸிர்ரோ மிக மிக இரகசியமானதாகும். (11.10.1966)

எம் வாழ்க்கை ஆத்மீக வாழ்க்கையாகவே உள்ளது.  (22.1.67)

எப்படியிருப்பினும்  எமதுதாற்பரியத்தைக் கண்டு ஒரு நிமிட நேரமேனும் தொடர்பு கொள்வோர் சுவர்க்கத்தைக் கொள்ளை கொண்டவர்களாவர். இதற்கு மாற்றமாய் பலநீண்ட மாதங்கள் நம் தாற்பரியத்தை அறியாது நம்மோடு தொடர்பு கொள்பவர்கள் எந்த நன்மையையும்அடைந்துகொள்ள மாட்டார்கள்.    (26.5.69)