• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jun 2012   »  பிளாக் டீ

பிளாக்டீ குடித்தால் நீரிழிவை கட்டுப்படுத்தலாம்

 

(சங்கைமிகுசெய்கு நாயகம் அவர்கள் 10.08.2012 அன்று திருச்சிக்கு வருகை தந்து கலீபா எம். சிராஜுதீன்அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்த போது கூடியிருந்த முரீதுகளிடையே.....   )

 

ஜெர்மனியில் உள்ளது யஹயின்ரிச் யஹயின் பல்கலைக்கழகம் மற்றும் லிப்னிஸ்சென்டர் ஃபார் டயாபடிக் ரிசர்ச் நிறுவனம். இரண்டும் இணைந்து க்ரிஸ்டியன் யஹர்பர் தலைமையில் நீரிழிவு நோய் குறித்து ஆய்வுநடத்தினர்.

ஆய்வு முடிவில் தினமும் 4கப் பிளாக் டீ குடித்தால் நீரிழிவு நோய்கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.  பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம்ஆய்வு நடத்தி உள்ளார்கள்.

தினமும் அவர்களுக்கு பிளாக் டீ கொடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டதில்டைப் 2 வகை நீரிழிவு நோய் கட்டுக்குள் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.  டீ குடிக்காத மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இவர்களுக்கு20 சதவீதம் அதிக பாதுகாப்பு கிடைப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.  ஆனால், பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கடும்டீ மட்டுமே அருந்த வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

டைப் 2 நீரிழிவு நோய்க்கு நார்ச் சத்துள்ள உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.  உணவு, உடற்பயிற்சி, மருந்துகள்இணைந்தே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும். இவற்றுடன் தினசரி 4 கப் டீ, டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது உறுதியாகிஉள்ளது.

இதனால் பக்க விளைவுகளும் பாதிப்புகளும் இருக்காது என்று ஆராய்ச்சியாளர்கள்கூறியுள்ளனர்.

நன்றி : தினகரன்

 

இச்செய்தியைப் படித்துப் பார்த்து விட்டு, சங்கைமிகு ஷைகு நாயகமவர்கள் கூறினார்கள் :

            நாளொன்றுக்குநான்கு முறை சீனி இல்லாமல் பால் இல்லாமல் பிளாக் டீ சாப்பிடுவதால் கொழுப்புச் சத்துநீங்கி விடும்; இதய நோய் தடுக்கப்படும்!

            பிளாக் டீயில்எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்துவதும் நலம் தரும்!

            ப்ளாக் டீ பயன்படுத்துவதால்,பால் செலவும் மிச்சப்படும்!

            (இவ்வாறு அருளியவண்ணம் எனது மகன் புஹினி.  அன்சாரியை ஏறிட்டுப்பார்த்து, இவர்... இனிமேல்  பிளாக் டீ பயன்படுத்தப்போவதாக நிய்யத்துச் செய்கின்றார் போலும் எனக் கூறினார்கள்.  எனது மகன் நாளொன்றிற்கு பலமுறை பால் டீ குடித்துவருகின்றார்; அதனைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நாயகம் அவர்கள் இவ்வாறுசுட்டிக் காட்டியிருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.