புரட்சி மார்க்கம் தந்த பூமான் நபி
ஹாஜி கே.பி.எம். பஷி ர் அஹ்மது ஹக்கிய்யுல் காதிரிய்
அவ்வலுத்தீனி மஃரிஃபத்துள்ளாஹ்” - இது திருநபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் திருமொழி.
இம்மாபெரும்அரிய வாக்கியம் தான் மனித சமுதாயத்துக்குக் கிடைத்த உயரிய பொக்கிம். இப்பொக்கிம் கிடைக்கப் பெற்றவன்மட்டுமே மாபெரும் செல்வந்தன் - பாக்கியவான்.
இது அகிலஉலகிற்கும் - அனைத்துப் பிரச்சினைக்கும் கிடைத்த அருமருந்து. ஆண்டான் - அடிமை, செல்வந்தன் - ஏழை, அறிஞன் - அறிவிலி, பெரியோர் - சிறியோர் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைத்த கிடைத்தற்கரிய புதையல்.
முத்திராங்கமாகஏகதெய்வக் கொள்கையோருக்கும், இணைவைப்போருக்கும் இன்னும் ஆத்திகருக்கும் இறையுண்டுஎன்போருக்கும், நாத்திகருக்கும் இறையில்லை என்போருக்கும் இடைநிலவும் சச்சரவுகளைக் களையும்நீதி மொழி இது மட்டுமே.
இறைத் தூதர்கள்முதல் இறைநேசர்கள் - குத்புமார், வலீமார்கள்வரையில் வரிசையாய் வந்தவர்களை, வருபவர்களை தரம் தாழ்த்திஉளறும் தரங்கெட்ட கயவர்கள் இத்திருமொழியை ஆராயாமல் - ஆராயும் ஆர்வம் இல்லாமல் இருப்பதால்தான் நரகின்கரிக்கட்டைகளாக ஆனார்கள். இச்செம்மொழியையேஆதாரமற்ற மொழி என்கின்றனர் ஆதரவில்லாமல் தவிக்கும் இந்த அனாதைகள்.
காரணம்என்னவெனில், குழப்பம் விளைவித்த குதர்க்கவாதிகளின் குழியில் முளைத்த பூச்சைக் காளான்கள் இவர்கள். இந்நிலையில் இவர்கள் பூமான் நபியவர்களின் இப்பூமொழியிலுள்ள தேனை எவ்வாறு அருந்த முடியும்?
இப்பூந்தேனைப்பிழிந்து தருபவர்கள் தங்கத்திருநபியவர்களின் வழிவந்த குத்புமார், வலீமார்கள் அல்லவா? இம்மகான்களையடையத்தேவையான பாதையின் பக்கம் கூட இக்கொடியவர்கள் வருபவர்களில்லையே. பிறகெப்படிஇத்தேனமுதம் இவர்களுக்குக் கிடைக்கும்?
கிடைப்பவர்களுக்குக்கிடைக்கும், கிடைத்துக் கொண்டிருக்கிறது. இம்மாபெரும் பாக்கியமும் வல்லோன் அல்லாஹ்வின் நாட்டப்படியே கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.
“இறைவனை அறிவதேமார்க்கத்தின் தொடக்கம்”. இங்கு உன்னிப்பாக கவனித்தால் தீனின் - மார்க்கத்தின்முதற்கடமையான கலிமா தய்யிபாவின் அதிமுக்கியத்தை இங்கு உணர்த்துகிறார்கள் வேந்தர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள்.
அதாவது: லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் எனும் கலிமா தய்யிபாவைவிளங்கி உணர்ந்த பின்தான் தொழுகை, நோன்பு,ஜகாத், ஹஜ் ஆகிய நான்கு கடமைகளையும் செவ்வனேசெய்ய முடியும். எனவே, செயல் வடிவிலுள்ள இந்நான்கு கடமைகளும் உணர்வுப் பூர்வமாக நிறைவேற்றுவதற்குஆணிவேர் உணர்வாலும் நினைவாலும் நிறைவேற்றக்கூடிய கலிமா தய்யிபாதான் முதற்கடமை.
இம்முதற்கடமையை உணர்ந்து அறிந்தால் எப்பிரச்சினையும் இல்லை.
முழுமுதற்கடமையை நிறைவேற்றாததால்தான் - இறைவனை அறியாததால்தான் இணையில்லா இறைவனுக்கு மாபெரும் பாவமான உருவம் உண்டு எனபிதற்றித் திரிகின்றனர் ஒரு கூட்டத்தார்.
அறியாமையின்அரவணைப்பில் இன்பம் கண்ட இக்கூட்டத்தார் இறைவனுக்கு அசைவும் உண்டு எனவாதிடுகின்றனர்.
தன்ஸீஹ் -இறைவனுக்கு உருவம் கிடையாது என்பது இஸ்லாமியக் கொள்கையின் ஆணிவேர். தன்ஸீஹ் என்றால் தூய்மைப் படுத்துதல் என்றுபொருள். எவ்வித கட்டுப்பாட்டுக்கும்எல்லைக்கும் - உருவம், உடல், தோற்றம், முதலியஎந்தக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாதவன். சுருங்கக் கூறின் மனிதனின் எவ்வித கற்பனா சக்திக்கும் அணுவளவேனும்அகப்படாதவன். இதுவே தன்ஸீஹ் என்போம். இதையே எம்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எடுத்துக் கூறினார்கள். இதில் எள்ளளவேனும் சந்தேகமில்லை.
தஷ்பீஹ் - உருவமைப்பில் மட்டும் கட்டுப்பட்டவன் வல்லஇறைவன். அறியாமையின் எடுத்துக்காட்டாகத்திரியும் கூட்டத்தாரின் கொள்கை இதுவேயாகும். இஸ்லாம் மறுத்து ஒதுக்கும் கோட்பாடு இதுவாகும்.
சரி, இறைவனை அறிவதே ஆரம்பம் எனில் எப்படி அறிவது?விழிபிதுங்க வேண்டியதில்லை. இவ்வரிய வியத்திற்கு அண்ணலாரவர்களேவழிகாட்டுகிறார்கள். “மன் அரஃப நஃப்ஸஹு ஃபகத் அரஃப ரப்பஹு” யார் தன் ஆன்மாவைஅறிவாரோ அவரே அவரின் இரட்சகனாகிய இறைவனை அறிவார்கள் என்பதாக நவின்றுள்ளார்கள்.
மக்களின் மீதுமாறாக் காதல் கொண்ட மாநபியவர்கள் மேலும் இறைவனை அறிய வேண்டும். ஆனால் எங்குள்ளான்அவ்விறையவன் எனத் தேடும் மெய் விசுவாசிகளுக்கு “குலூபுல் முஃமினீன அர்ஷிள்ளாஹ்”மெய் விசுவாசிகளின் இதயம் இறைவனின் சிம்மாசனம் என்பதாக இறைவன் வசிக்கும் -வெளியாகும் இடத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இங்கு முஸ்லிமின் இதயம் என பொத்தாம் பொதுவாகச்செல்லிவிடவில்லை.
அதாவது நூறுசதவீத உண்மை முஃமின் - விசுவாசி யார்? குத்புமார், வலீமார்கள்தாம் அம்மெய்விசுவாசிகள்.
இந்நாதாக்களின் இதயம் தான் இறைவன் வசிக்கும் இல்லம் -இறைவெளியாகும் தளம். முழு அறிவும்இருக்கும் இடம். எனவே இவர்களிடம்சென்றால்தான் இறையை அறிந்து அடையவும் முடியும்.
“ஒருமுஃமினுடைய எச்சில் மற்றொரு முஃமினுக்கு மருந்து” எனும் திருநபிமொழியையும் இங்குகவனிக்க வேண்டும். மேற்சொன்ன குத்புமார், வலீமாரின் எச்சில்தான் நம்மைப் போன்றசாதாரண முஃமினுக்கு மருந்து. அல்ஹம்துலில்லாஹ்.
இதுவரைசொல்லப்பட்ட விஷயங்கள் ஒரு சதவீதமேனும்அறியாத அறிவிலிகள் தான் இவற்றை ஷிர்க், பித்அத்”என பிதற்றித் திரிகின்றனர்.
ஷிர்க், பித்அத் என்னவென்றே விளங்காத இம்மூடர்கள் இஸ்லாமிய அகீதாவான தவ்ஹீதை -ஏகத்துவத்தைப் பற்றி அணுவளவேனும் பேசத் தகுதியற்றவர்கள் என்பதில் கிஞ்சிற்றும்சந்தேகமில்லை. இணையற்ற சமுத்திரமானஏகத்துவத்தில் ஒரு துளியளவும் இவர்கள் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. பின்னர் எப்படி அதன் சுவையறிய முடியும்?
முக்கியமாககவனிக்க வேண்டியது. அரபி மிகச்சிறந்தஇலக்கிய மொழி. மேலும் திருக்குர்ஆனோஅதியற்புத இலக்கிய நடையில் இறங்கியுள்ளது. நடைமுறை அரபு மொழிக்கும் வேறு மொழிக்கும் மிகவும் வித்தியாசமுள்ளது. ஒருவாக்கியத்தில் முன்னுள்ளதைப் பின்னாலும்பின்னாலுள்ளதை முன்னாலும் எழுதினால் அர்த்தம் முற்றிலும் பேதலித்துவிடும். உதாரணமாக “குர்ஆனை எடுத்து வந்தான் என்பதைகுர்ஆனை வந்து எடுத்தான்” என்று எழுதினாலும் சொன்னாலும் அர்த்தம் மாறிஒன்றுக்கொன்று வித்தியாசமாகி விடும்.
ஆகவே, மவ்லவி ஸனது பெற்ற அனைவரும் இறைவன்அருள்பெற்ற வியாக்கியானியாகிவிட முடியாது. அரபி அறிந்த சாதாரண எவரும் முழுவிளக்கமும் சரியாக கொடுத்து விடமுடியாது. அப்படி தன் இஷ்டப்படி அர்த்தவியாக்கியானம் கொடுக்கக் கூடியவர்களைப் பற்றி வல்ல இறையோன் திருமறையில் இவ்வாறுகூறுகிறான்.
“அல்லாஹ்வின் மீது பொய்யை கற்பனை செய்கிறவனைவிட அல்லது அவனுடையவசனங்களை பொய்யாக்குகிறவனைவிட அநியாயக்காரன் யார் ? நிச்சயமாகஅநியாயக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள் - (6 : 21.)
அல்லாஹ்எவருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவர் நேர்வழி அடைந்தவர் ஆவார். யாரைத் தவறானவழியில் விட்டு விட்டானோ அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே -(7 : 178)
எந்தக்குளறுபடியும் இன்றி தெளிவாய் வாழ அகிலத்தின் அருட்கொடை எம்பெருமானார் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களும்,, அவர்களின்புனிதத் தோழர்களும், அவர்கள் வழிவந்த நாதாக்களின்அடிச்சுவட்டை நாம் பின்பற்றி விட்டோமானால் போதும். தர்க்க ரீதியாகவும் மார்க்க ரீதியாகவும் இதுவேசாலச் சிறந்தவழி. இதுவே இறைவன் காட்டிய நேர்வழி. இந்தவழி முன்னுண்டான எந்த நபிமாரும் கூடதெளிவாக்காத தெளிவாக்க முடியாத வழி. ஆகவேஈடியணையற்ற இந்த வழியே நமக்கு அருள் வழி. அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். இவ்வழியடைய விலாயத்தின் தலைவாயில் ஸய்யிதுனாஅலீ (ரலி) அவர்கள் வழி வந்த இறை தோன்று துறையான குத்புமாரிடம் தஞ்சமடைவோமாக ஆமீன்.
யாரப்பல் ஆலமீன்.
ஸல்லல்லாஹு அலாமுஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.