• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jun 2012   »  ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா நாயகம் அவர்கள்

அஷ்ஷைகுல் காமில் குத்புஸ்ஸமான் ­ம்ஸுல் வுஜூத்

ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானாஅல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்


 

எம்மைப்பற்றி நாம் பூரணமாகச் சிந்தித்தால் அல்லாஹ்வைப்பற்றிநாங்கள் பூரணமாக அறிய எங்களுக்கு வழி ஏற்படுகிறது. ஆகவே பூரணமாக நாம் எம்மைப்பற்றிச்சிந்திக்கும்போது, சிந்தித்துஅந்த அறிவை நாம் பெற்றுக் கொள்ளும்பொழுது அந்த அறிவினால் உலக வாழ்வு சம்மந்தப்பட்டமற்ற எல்லா அறிவுகளுக்கும் அதிலிருந்து உரிய பதில் கிடைத்துக்கொண்டேஇருக்கும்.  நாங்கள் பூரணமாய் ஒற்றுமையாய்வாழவேண்டுமாயினும் கூட தெளஹீதுடைய முக்கியத்துவம் அதில் தென்படுகிறது. ஆகவேமனிதர்களாகிய நாங்கள் சிந்திக்கும் தன்மையுடையவர்களாக இருக்கும்பொழுது தெளஹீதைஒருபோதும் புறக்கணிப்பதில் நன்மையில்லை.

 

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களிடம் வினவப்பட்ட வினாக்களும்,  அவர்கள்அளித்த விளக்கங்களும்.


மனம் எப்போதும் சந்தோ­மாக இருப்பதற்கு என்ன செய்யவேண்டும்?


எந்த ஒரு நேரத்திலேயும் மனம் சந்தோ­மாகத்தான் இருக்கவேண்டும். சந்தோ­மாக இருந்தால்தான் அவனுடைய வாழ்வும் சந்தோ­மாகும்.  ஒருசிறு வி­யத்திற்குக் கடைசிவரைகவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அவனுடைய மனோநிலைகள் பாதிக்கப்பட்டு கஷ்டமே அவனைவந்தடைந்து கொண்டிருக்கும்.  ஆதலால் எந்தஒரு கஷ்ட நிலையிலும் சந்தோ­ப்பட்டால் அவனுக்குஅந்தக் கஷ்டம் நீங்கி சந்தோ­ நிலை உண்டாகும். இது இயற்கை.  கவலை வருமாயின் அவற்றைமறந்து வேறொன்றில் தன்னைச் செயல்படச் செய்தல் கவலை நீங்க ஒரு வழியாகும்.

நமது உடலை மறப்பது எப்படி?

 

 வெட்டவெளிப்பயிற்சி செய்துவரும்போது தானே தன்னை மறக்கும்தன்மை உண்டாகிவிடும்.

ஏகமாகவே இருப்பதாக நினைத்துவிட்டால் ஏகமாகிவிடுவோமா?

எல்லாமே ஒன்றான, பரிபூரண ஒன்றை பரிபூரணமாக நினைத்து எங்களுடைய உடலை  அதில் அழித்துவிட்டதாக நினைத்துக் கொண்டால்ஏகமெனும் நிலை உண்டாகிவிடும். (அது எவ்வாறெனில்) குதம்பைச்சித்தர்

             வெட்டவெளிதன்னைமெய்யயன்றிருப்பார்க்கு

            பட்டயமேதுக்கடி - குதம்பாய்

            பட்டயமேதுக்கடி  என்று பாடினார்.

வெட்டவெளியை மெய்யாக வைத்துக் கொண்டால் அவனுக்குஎதைப்பற்றிய பிரச்சினையும் இருக்காது. வெட்டவெளியாகவே தன்னை நினைத்துக் கொள்ள வேண்டும்.  அவ்வாறு தன்னை நினைத்து வருபவன் சில காலங்களில்சித்தியடைந்து மெய்மறக்கும் தன்மை உண்டாகிவிடும்.

               - அவ்ன் நாயகரின் அருள்மொழிக் கோவைநூலிலிருந்து.....

 

சிறுவயதிலிருந்தே அல்லாஹ் வானத்தில் இருக்கின்றான் என்பதைஎம் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.

      - சங்கைமிகுசெய்கு நாயகம் அவர்கள் -