தொடர்... தொடர் எண்-25
வஹாபிகள் சஹாபிய வேடங்களில்
கராமத்து உண்டா?
“மனிதர்களுடையநாட்ட தேட்டங்களை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக அல்லாஹு தஆலா வலிமார்களுடைய கபுரில்ஒரு மலக்கைச் சாட்டுவான்; மற்றொருவிதமாக, வலிமார்களைக் கபுரைவிட்டும் வெளிப்படுத்திமனிதர்களது நாட்ட தேட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்கவும் செய்வான்” என்பதாக அப்துல்வஹ்ஹாபுஷ் ஃறானீ (ரஹ்) அவர்கள்“ யவாக்கீத்துல் ஜவாஹிரி”ல் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபிமார்களில் அநேகரின் முஃஜிஸாத்துகளைப்பற்றி குர்ஆன் ரீபிலும், ஹதீது ஷரீபிலும், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது முஃஜிஸாத்துகள் பற்றியும், ஸஹாபாக்கள் அநேகம் பேர்களுடைய கராமத்துகள் பற்றியும் ஹதீதுரீபிலும் வந்துள்ளன.
அவுலியாக்களுடையகராமத்துகளைப்பற்றி சரித்திரங்களில் எண்ணிக்கையிலடங்கா வண்ணம் உள்ளன. அவையனைத்தையும் இங்கு எடுத்தோதுவதென்றால்சாத்தியமில்லை. எனினும், அவற்றிலிருந்து ஒரு சிலவற்றைக்குறிப்பிடுகிறோம்.
“ஹயாத்திலும், வபாத்திற்கப்பாலும் அவுலியாக்கள் கறாமத்துசெய்வதற்கு சக்தி பெற்றிருக்கின்றார்களா? மவுத்தாகிப்போனவைகளை அவர்களால் ஹயாத்தாக்க முடியுமா”!? என்று இமாம் ஷைகுமுஹம்மது கலீலீ (ரஹ்) அவர்களிடம் வினவப்பட்டதற்கு, “அவர்கள்கறாமத்துச் செய்ய சக்தி பெற்றிருக்கிறார்கள்; மவுத்தாகிப் போனவைகளைஹயாத்தாக்கவும் அவர்களால் முடியும்” என்று அவர்கள் பதில்கூறியிருக்கிறார்கள். இவ்விபரம் ‘பத்தாவாகலீலீ’, 1-வது பாகம், 79-வதுபக்கத்தில் காணப்படுகின்றது.
உவமைக்குச் சிலநிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டுகின்றோம்.
அமீருல்மூமினீன் ஹள்ரத் உமர் பாரூக் (ரலி) அவர்களுடைய கிலாபத்தின் காலத்தில், ஸஹாபிகளில் ஒருவராகிய ஸாரியா (ரலி) அவர்களது தலைமையின்கீழ் நஹாவந்து என்னும் ஊருக்கு ஒரு பட்டாளம் அனுப்பப்பட்டது. குஃப்பார்களை எதிர்த்துக் கடுமையாகப் போர்செய்து கொண்டே முஸ்லிம்கள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் மலையின் கணவாய் வழியேபின்பக்கமாகப் பதுங்கிச் சென்று இஸ்லாமியப் படையைச் சூழ்ந்து திடீர் தாக்குதல்செய்ய குஃப்பார்கள் இரகசிய திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.|
அன்றுவெள்ளிக்கிழமை. அந்நேரத்தில் கலீபா உமர் பாரூக் (ரலி) அவர்கள் மதீனாவில் மஸ்ஜிதுன்னபவிய்யின் மிம்பர்மீது நின்று குத்பா ஓதிக்கொண்டிருந்தார்கள். அவ்வமயம் அங்கிருந்துகொண்டே, வெகுதொலை தூரத்திலுள்ள நஹாவந்துயுத்தகளத்தை கஷ்பு (அகக்கண்) கொண்டு நோக்கினார்கள்.
எதிரிகளின்சதித்திட்டத்தை கஷ்பு மூலம் உணர்ந்த அவர்கள், “ஸாரியாவே! மலைக் கணவாயைப் பாதுகாப்பீர்!” (ஸாரியா-அல்-ஜபல்) என்று சப்தங்கொடுத்தார்கள்.
கலீபாவின்இந்த எச்சரிக்கை யுத்தகளத்தில் இருந்தஸாரியா (ரலி) அவர்களது காதுக்கு எட்டிற்று, உடனே அவர்கள் மலைக்கணவாயில் முன்னேறி பாதுகாப்புச் செய்துகொண்டார்கள். எதிரிகளின் இரகசிய சதித்திட்டம்முறியடிக்கப்பட்டது. முஸ்லிம்கள் வெற்றிபெற்றனர். இவ்வற்புதச் சம்பவம் அவர்களுடைய மனாகிபு (சரித்திரச் சிறப்பு நூல்) களில்வரையப்பட்டிருக்கின்றது.
”ஹளரத் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களதுசமூகத்திற்கு, அஸீதுப்னு ஹூளைர் (ரலி) அவர்களும்,உப்பாதுப்னு பர் (ரலி) அவர்களும் இருள் சூழ்ந்த ஓர் இரவில்சென்றிருந்தார்கள். பிறகு, அவ்விருவரும் ஒன்றாகத் திரும்பி வரும்போதுஅவர்களுக்கு முன்பாக இரு ஜோதிப் பிரகாசங்கள் போய்க் கொண்டிருந்தன. அவர்கள் பிரிந்து தனித்தனியே செல்லமுற்பட்டபோது அந்த இரு ஜோதிகளும் தனித்தனியே பிரிந்து அவரவருடன் போய்க்கொண்டிருந்தன” என்பதாக அனஸ் (ரலி) ரிவாயத்துச் செய்திருக்கிறார்கள். இந்த ஹதீது ஸஹீஹுல் புகாரியில்கூறப்பட்டுள்ளளது.
நாயகம்ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விருந்தளிக்க ஜாபிர் (ரலி)அவர்கள் தமது வீட்டில் ஓர் ஆட்டுக்குட்டியை அறுத்து சமையலுக்கு ஏற்பாடு செய்தார்கள். ஆட்டுக் குட்டியைத் தந்தை அறுப்பதைப்பார்த்துக் கொண்டிருந்த அவர்களது மூத்தபுதல்வன் தன்னுடைய தம்பியைப் பிடித்து அவ்வாறே அறுத்துவிட்டான். இதைக்கண்ட அவனுடைய தாய் விரட்டிப் பிடிக்க ஓடவேமூத்த மகனாகிய அவன் மாடியிலேறி கால் தவறி கீழே விழுந்து இறந்தான்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விருந்துண்ணவந்த சந்தர்ப்பத்தில் மூத்த மகனுடையவும், இளைய மகனுடையவும் மரண சேதியையறிந்து துஆச் செய்தார்கள். இறைவனருளால் அவ்விருவரும் உயிர் பெற்றெழுந்தார்கள்.
இவ்வரலாறு வாஹிதுன் னுபுவ்வத்தில் வருவதாக அன்வாரே-ஆப்த்தாபே-ஸதாகத், 2-வது பாகம், 207-வது பக்கத்தில் கூறப்படுகின்றது மேலும் இஹ்யாஉல்குலூப்-பீ-மவுலிதில்மஹ்பூப், 94-வது பக்கத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
(தொடரும்)