• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jun 2012   »  கலீபா பெருந்தகைகள்

தரீகத்துல் ஹக்கிய்யத்துல்காதிரிய்யாவின் கண்ணியமிகு கலீபா பெருந்தகைகள்

 

ஒரு சிறப்புப் பார்வை!

 

மெளலவி என்.எஸ்.என். ஆலிம்.பி.காம்.திருச்சி

 

வலிய்யுல் அஹ்ஸன்

 

மகத்துவம் பொருந்திய மஹானந்தபாபா நாயகம் (ரலி) அவர்களின் மறைவும் - பாபு ஹள்ரத் (ரஹ்) அவர்களின் மறைவும் மனதை ஆட்டிப்படைத்ததால் பெரும் கவலைக்குள்ளான வலிய்யுல் அஹ்ஸன் அவர்களின் வாஞ்சைமிகு நெஞ்சை, தவ்ஹீதின் பிரகாசத்தைக் கொண்டு நிரப்பிட, ஹக்கின் நாட்டப்படி திண்டுக்கல்கலீபா S.A. அப்துஸ்ஸலாம் அவர்களின் வருகை அமைந்தது! ஆம்! வலிய்யுல் அஹ்ஸன் அவர்களைசந்திப்பதற்காக வந்த கலீபா S.A. அப்துஸ் ஸலாம் அவர்கள் ஒரு சுபச் செய்தியைக் கூறினார்கள்.  “ஹள்ரத்! நீங்கள் உங்களூர் தேரடியில் இரண்டு முறைசந்தித்தீர்களே.... மெளலானா... அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் 32 ஆவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். 

அன்னவர்கள் பேராவூரணி அருகில் உள்ள சம்பைப் பட்டினம்என்னும் ஊரில் அடக்கம் பெற்றுள்ளார்கள்.  மெளலானாஅவர்கள் மிகுந்த கராமத்தையுடையவர்கள்! யார் அன்னவர்களிடம் என்ன நேர்ச்சை வைத்தாலும்இறையருளால் அதனை நிறைவேற்றியருள்வார்கள். அவர்களை 
சம்பைப் பகுதி மக்கள் பாம்புமெளலானா என்றே அழைக்கின்றார்கள்.

மெளலானா அவர்களின் சன்னதியில் பாம்புகள் வலம் வருதல்வாடிக்கை.  பாம்புகள் மெளலானா அவர்கள் முன்னர்சரணடைந்து விடும்! உயர்ந்த ஞானமும் சிறந்த மகோன்னதமுமடைந்த ஜமாலிய்யா மெளலானா (ரலி)அவர்களைத் தாம் நீங்கள் கண்டிருக்கின்றீர்கள். அவர்களின் திருமகனாரான ஜமாலிய்யா யாஸீன் மெளலானா (ரலி) அவர்கள் சமீபத்தில் திண்டுக்கலுக்கு  புனித விஜயம் செய்தருள உள்ளார்கள்
; தாங்கள் அவசியம்வருகை தாருங்கள் எனக் கூறினார். 

அதன்படி
,கண்மணி ஜமாலிய்யா யாஸீன் மெளலானா (ரலி) அவர்களின் தரிசனத்தைப்  பெற்ற வலிய்யுல் அஹ்ஸன் அவர்களுக்கு இழந்துபோன தெம்பும்திராணியும் மீண்டும் உயிர் பெற்றதைப் போல் உணர்ந்தார்களாம்!

குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா யாஸீன் (ரலி) அவர்களைக் குறித்து கலீபாவலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் என்னிடம் கூறிய ஓரிரு முக்கிய தகவல்கள் :-

குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா யாஸீன் மெளலானா (ரலி) அவர்கள்

 

திண்டுக்கல் வரும்போது பேகம்பூர்பெரிய பள்ளியில் ஓர் அறையில் தங்குவார்களாம். நாயகம் திண்டுக்கல் வந்துவிட்டால், அப்போதிருந்த நன்மக்களெல்லோரும் உற்சாகமடைந்துஉத்வேகம் அடைவார்களாம்! குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் நாயகம்  (ரலி) அவர்கள் தங்கியிருக்கும் காலகட்டத்தில் பேகம்பூர்பெரியபள்ளியில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துவார்கள்!

அக்கூட்டத்தில் பங்கேற்க திண்டுக்கல்மாநகரின் பற்பல பகுதிகளிலிருந்தும் ம.மு. கோவிலூர்
, சித்துவார்பட்டி,சித்தையன்கோட்டை, ஆத்தூர் போன்ற கிராமங்களிலிருந்தும்பொது மக்களோடு ஆலிம்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்வது வழக்கம்! எவ்வளவு பெரிய கூட்டமாயிருப்பினும்கம்பீரமாக அரிய கருத்துக்களை யாஸீன் நாயகம் (ரலி) அவர்கள் எடுத்துரைப்பது அழகுக்குஅழகு சேர்த்தாற் போலிருக்கும்!

அந்தக் கால கட்டத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பவியலுமா? என ஆராய்ந்துகொண்டிருப்பதாகப் பத்திரிகைகளில் பரபரப்பாகச் செய்திகள் வந்து கொண்டிருந்த நேரம்.....அச்சமயம் புனித விஜயம் செய்திருந்த யாஸீன் நாயகம் (ரலி) அவர்கள், மனிதன் சந்திரனுக்குப் போகவியலுமா? என்றெல்லாம் விஞ்ஞானிகள்வினாக்களை எழுப்பி வருகின்றனர்!. 

மனிதனால்நிச்சயமாக சந்திரனுக்குச் சென்றிட முடியும்! இச்செய்தி விஞ்ஞானிகளுக்கு வியப்பாக இருக்கலாம்
;ஆனால் முஸ்லிம்களுக்கு இது நம்பிக்கை(ஈமான்) சம்பந்தப்பட்ட 
செய்தி! ஏனெனில் திருக்குர்ஆனில்இறைவன்; மனிதர்களுக்குசூரியனையும்  சந்திரனையும் வசப்படுத்தித் தந்திருப்பதாகக்கூறுகிறான்!. எனவே மனிதனுக்கு வசப்பட்டிருக்கும் சந்திரனுக்கு மனிதன் செல்வது சாத்தியமே!அவ்வாறு மனிதன் சந்திரனுக்குச் செல்வானாகில் அச்செய்தி திருமறைக்கு மகுடம் சூட்டும்வி­யமே!

திருக்குர்ஆனில்சொல்லப்பட்ட வி
­யம் அரங்கேறுவதால்அதனைக் கொண்டு முஸ்லிம்களும் பெருமைப்படலாம்!.... என்னும் கருத்தில் ஜமாலிய்யாயாஸீன் (ரலி) அவர்கள் அற்புதமாக ஆற்றிய அறிவியல் பூர்வாங்கமான உரை மிகவும்பிரபலமாம்!

ஏனென்றால்அக்காலகட்டத்தில் திருமறையை அறிவியலோடு இணைத்துப் பேசக் கூடிய ஆலிம்கள் எவரும் இருந்ததில்லை!

மேலும், நாயகம் அவர்களின் அதிஅற்புதமான உரைக்குப்பின்னர், ஆம்ஸ்ட்ராங், ஆல்டிரின்சந்திரனுக்குச் சென்று வந்ததை உலகமே வியந்து பேசிக் கொண்டிருந்தபோது.... யாஸீன்மெளலானா (ரலி) அவர்கள் மனிதன் சந்திரனுக்குச் செல்வது சாத்தியமே.... என்று கூறியதுஇப்போது உண்மையாகி விட்டது பார்த்தீர்களா? என்பதாகதிண்டுக்கல் நகரப்பகுதி மக்கள் நீண்ட காலமாகப் பேசி வந்ததாகக் கூறுவார்கள்  கலீபா வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள்                        



(அதிசயங்கள் தொடரும்)