சங்கைமிகு இமாம் ஷாஃஈ (ரஹ்)
அறபுத் தமிழில்: மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்
அழகு தமிழில்: கிப்லா ஹள்ரத், திருச்சி.
இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களுடையமகள் பிள்ளையாகிய அஹ்மத் இப்னு முஹம்மத் என்பவர் கூறுகிறார்கள் : இப்னு உயைனா (ரஹ்)அவர்களிடத்தில் யாராவது குர்ஆனிலிருந்தோ ஹதீதுகளிலிருந்தோ ஃபிக்ஹ் என்னும் மார்க்கவியத்திலிருந்தோ சந்தேகம்கேட்டால், அவர்கள் உடனே, இமாம்ஷாபிஈ (ரஹ்) அவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து, அன்னவர்களைச்சுட்டிக்காட்டி, “எந்தச் சந்தேகம் இருப்பினும், இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களிடத்திலே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” எனக்கூறுவார்கள்.
மேலும் இமாம்ஷாபிஈ (ரஹ்) அவர்கள், நோய்வாய்ப்பட்டுவீட்டில் இருந்த போது, இப்னு உயைனா (ரஹ்) அவர்கள். அடிக்கடிவீட்டிற்கு வந்து நலம் விசாரிப்பார்கள்.
இப்னு ஸயீத்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : ஸூஃப்யான் இப்னு உயைனா அவர்களோடு நாங்கள்இருந்தபோது, இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் அவ்விடம்வந்து, எல்லோருக்கும் ஸலாம் சொல்லி அமர்ந்தார்கள்.
அப்போது, இப்னுஉயைனா (ரஹ்), ஒரு சிறிய ஹதீதை அறிவித்தார்கள். பின்னர் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களை ஏறிட்டுப்பார்த்தார்கள். அப்போது, இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களுக்கு ஏதோ ஒரு காரணத்தால், மயக்கம் ஏற்பட்டு படுத்து விட்டார்கள். அதைப்பார்த்த மனிதர் ஒருவன், இப்னு உயைனாவிடம்,“முஹம்மத், இப்னு இத்ரீஸ் அவர்கள் மவ்த்தாகிவிட்டார்கள்” என்று சொன்னான். உடனே இப்னுஉயைனா (ரஹ்) “முஹம்மத் இப்னு இத்ரீஸ் இறந்துவிட்டார் என்றால், இந்த உலகத்தில், இந்தக் காலத்தில், எல்லாத் துறைகளைச் சேர்ந்த அறிஞர்களைவிட, மேலானசிறந்த அறிஞர் இறந்துவிட்டார் என்று வருத்தப்படுவேன் என்றார்கள்.
இப்னு உயைனாஅவர்கள், இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் மீதுஎவ்வளவு பாசமும் நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்தார்கள் என்பதற்குஇக்கூற்றும் ஓர் உதாரணமாகும்.
ரபீஃ என்பவர்கூறுகிறார் : இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களுக்கு, 15 வயது நிரம்பிய நேரத்தில், மக்காவின் முஃப்தீ முஸ்லிம் இப்னு காலித் ஜன்ஜீ (ரஹ்) அவர்கள், “இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் நெற்றியில்முத்தமிட்டு, “எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீதாணை; அல்லாஹ் உங்களுக்கு, ஃபத்வா (மார்க்க தீர்ப்பு)கொடுக்கக்கூடிய அறிவையும் ஞானத்தையும் வழங்கியிருக்கிறான். அந்தக் காலம் வெகு தூரத்தில் இல்லை” எனக்கூறினார்கள்.
முஹம்மத்இப்னுல் ஹஸனிஷ் ஷைபானி (ரஹ்) கூறுகிறார்கள் : நமது ஃபத்வாக்களுக்கு (மார்க்கத்தீர்ப்பு) மாற்றமாக யாராவது ஃபத்வா கொடுக்க இயலுமென்றால், அவர் நிச்சயமாக இமாம் ஷாஃபிஈ (ரஹ்)அவர்களாகத்தான் இருக்க முடியும். உடனேஅருகிலிருந்தவர் “தாங்கள் இவ்வாறு கூறக் காரணமென்ன?” எனக்கேட்டார். அதற்கு முஹம்மத் இப்னுல் ஹஸனிஷ்ஷைபானி (ரஹ்) அவர்கள், “இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், ஹதீதுகளை மிகுதியாக கேட்டறிந்தவர்கள். மிகுந்த அறிவும் ஞானமும் நினைவாற்றலும் உடையவர்கள். பலரால் மறந்து போன அல்லது மறைக்கப்பட்ட பலஹதீதுகளைத் தங்களின் நினைவாற்றலால் வெளிப்படுத்தியவர், இமாம்ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் தாம். எனவே தான்அவ்வாறு கூறினேன்” என விளக்கமளித்தார்கள்.
ஜஃபரானி (ரஹ்கூறுகிறார்கள் : நான் யஹ்யப்னு முயீன் (ரஹ்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவில் கலந்துகொண்டேன். அப்போது நான் அவர்களிடம் “அபாஜகரிய்யா அவர்களே! இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களைப்பற்றி என்ன கருதுகிறீர்கள்?” எனக் கேட்டேன்.
அதற்கவர்கள் “இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் சிறப்பைஎன்னவென்று உரைப்பது? ஒருகாரியத்தில் பொய் சொல்வது ஹலால் என்று வருமாகில், இமாம்ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் ரோம், அந்நபரைப்பொய் சொல்ல விடாமல் விலக்கிவிடும். இமாம்ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், மிகுந்த உண்மையாளராகத்திகழ்ந்தார்கள்” எனக் கூறினார்கள்.
உதைபா இப்னுஸயீத் (ரஹ்) கூறுகிறார்கள் : ஹள்ரத் ஸூஃப்யானுத் தவ்ரீ அவர்கள் மறைந்த போது, வரஃ என்னும் பேணுதல் இறந்து போனது. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் மறைந்தபோது, ஹதீதுடைய அறிவு இறந்துபோனது. இமாம் ஹன்(ம்)பலி (ரஹ்) அவர்கள்மறைந்த போது, பல பித்அத்துகள் (நூதனங்கள்) வெளியாகத் தொடங்கிவிட்டன.
(தொடரும்)