• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jun 2012   »  ஞானத் துளிகள்

ஞானத் துளிகள்


தொகுத்தவர்: -                                                                          திருமதி G.R.J. திவ்யா பிரபு  I.F.S, சென்னை

 


பறவையின் கண்ணை இலக்காகக்கொண்டு அர்ஜுனன் அம்பைக் குறிவைத்தபொழுது அவன் மனதிலிருந்து ஏனைய எண்ணங்களெல்லாம் அகன்று போயின.  குறியும் குறி வைத்தவனும் ஒன்றுபட்டுவிட்டார்கள்.  ஆதலால் அந்த இலக்கைஅடிக்க அவனுக்கு இயன்றது.  யார் ஒருவனுக்குஇறைவன் இலக்கு ஆகின்றானோ அவன் உள்ளத்தினின்று ஏனைய எண்ணங்களெல்லாம்மறைந்துபோகின்றன. 

எமது குருநாதர்கூறுகிறார் :

எனக்குப்பாரமார்த்திக அனுபவங்கள் வெவ்வேறு விதங்களில் வாய்த்ததுண்டு.  ஒருவேளையில் எறும்பு ஊறி மேலே போவதுபோன்றுஉணருகிறேன்.  மற்றொரு வேளையில் குரங்குஒன்று ஒரு கிளையினின்னு மற்றொருகிளைக்குத்தாவிப் போவதுபோன்று உணருகிறேன்.  மீன்ஒன்று நீரினுள் நீந்திப்போவது போன்று உணர்வதுண்டு.

ஞானி ஒருவர், தான் உணவு அருந்துவதைத் தன் சரீரத்திலிருக்கும் சக்திக்கும் ஆகுதியாகப்படைக்கிறான்.  எனவே அவன் எதைவேண்டுமானாலும் உண்ணலாம்.  ஆனால் பக்தனுடைய   நிலை வேறுபட்டது. அவன் ஆகார விவேகம் மிகச் செய்ய வேண்டும். தூய உணவையே அருந்த பக்தன் ஒருவன் கடமைப்பட்டிருக்கிறான்.

நேர்மையானவழியில் சம்பாதித்த பணத்தைக் கொண்டே சாது மகாத்மாக்களுக்கு கனி முதலியவைகளைவாங்கிக் கொண்டு போகவேண்டும்.  தூயதல்லாதஉணவுகளை அவர்களுக்குப் படைக்கலாகாது.

தீயோர் தந்தஉணவை அருந்த குரு முயன்ற பொழுது அவ்வுணவானது ரத்தத்தில் தோய்ந்திருப்பதாகக்கண்டார்.  ஆதலால் அதை அருந்த அவருக்குஇயலவில்லை.

எமது குருநாதர் கூறினார் :

கண்காட்சிச்சாலையில் காட்சி ஒன்று எனக்குக் காண்பிக்கப்பட்டது.  பூமியில் புதையுண்ட விலங்கின் கூடு கல்லாகமாறிவிட்டது.  சூழ்நிலை அதை அப்படிச்செய்துவிட்டது.  தெய்வீகச் சூழ்நிலையில்மனிதன் தெய்வத் தன்மையைப் பெறமுடியும். ஆத்ம சாதகன் ஒருவன் தன் குருவின் படங்களை, தான் இருக்குமிடத்தில் வைத்திருப்பதுநலம்.  அவைகளைப் பார்க்கும்பொழுது அருள்உணர்வு உள்ளத்தில் உதிக்கிறது. கொடிய தீங்கும் காலக்கிரமத்தில் நலனாகமாறியமைகிறது. நோய்வாய்ப் பட்டிருக்கும் ஒருவன் குணமடைந்திடும் தருணத்தில் அவனுக்குவைத்தியன் மருந்தை வழங்குகிறான்.  நோய்குணமடைந்தது மருந்தினாலா அல்லது தற்செயலாகவா? காலத்துக்கு நிகரான மருந்து இல்லை.

பழங்காலத்து ரி´கள் வனத்தில் கரடி புலி மிருகங்களுக்கிடையில்வசித்திருந்தார்கள்.  அவர்கள் பண்ணியபரம்பொருள் தியானம் அக்கொடிய விலங்குகளை முன்னிட்டுப் பாதிக்கப்படவில்லை. உலகில்கரடி புலியின் சுபாவங்களையுடைய மக்களுக்கிடையில் நீ வாழ்ந்து வருகின்றாய்.  இவர்களுடைய புல்லிய போக்கைப் பொருள்படுத்தாதுநீ இறை சிந்தனையிலேயே ஊறியிருக்க வேண்டும்.

மனிதன் ஒருவன்தனக்கு வாய்த்துள்ள  உலகக்கிருத்தியங்களையும் முறையாகச் செய்யவேண்டும்; இறை பக்தியையும் ஆழ்ந்து பண்ணவேண்டும். அவன் தனித்திருக்கும்பொழுது பக்தி புகட்டும் நூல்களை வாசிக்க வேண்டும்.

புதிதாகப்பட்டணத்துக்கு வருகிற ஒருவன் தங்கியிருக்க முதலில் இடந்தேடிக்கொள்ளவேண்டும்.  பிறகு வேண்டியவாறு அவன் ஊர் சுற்றிப்பார்க்கலாம்.  பகலிலேயே தங்குமிடம்தேடிக்கொள்ளாவிட்டால் இரவில் இருக்க இடமில்லாது அவன் தவிப்பான்.  இவ்வுலகு என்னும் பட்டணத்துக்குள் வந்துள்ள நீஇறைவனுடைய அருள் என்னும் தங்குமிடத்தை முதலில் தேடிக்கொள். பிறகு வேண்டியவாறு உலகவாழ்வை நடாத்து.  அருளைத்தேடிக் கொண்டால் அந்திய காலத்தில் நீ அல்லல் படமாட்டாய்.


கரிபிடித்துள்ள அறையில் நடமாடுகிறவர்கள் எவ்வளவு எச்சரிக்கையாக  இருந்தாலும் அவர்கள்மீது கொஞ்சம் கரிபடிந்துவிடும்.  அதேவிதத்தில் ஆத்மசாதனங்கள் புரிகிற ஒருவன் எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் குடும்ப வாழ்வின் விளைவாக அவனிடத்து ஏதேனும் ஒருகுறைபாடு வந்துவிடும்.

உலகசுகபோகங்களை முறையாக ஓரளவு அனுபவித்துப் பார்த்து அவை யாவும் நித்தியமானவைகள் அல்லஎன்பதையும், அவை மனிதனுக்குப் பெருங்கேடுவிளைவிக்கின்றன என்பதையும் அனுபவித்து அறிந்த பிறகு மனதை இறையிடத்துத் திருப்புவதுஎளிது.

உலகப்பற்றுடையஒருவன் அகத்துறவு பூண்டு பழகவேண்டும். அதாவது பற்றற்ற நிலையை மனதினுள் வருவித்துப் பழகவேண்டும். 

ஒரு பெரியஜனக்கூட்டத்தைப் பார்க்கும் பொழுது என் உள்ளத்தில் பரபோதம் தானாகப் பொங்கித்ததும்பி எழுகிறது.