அடையாளங்கள்
முஃமின்கள் நிச்சயமாக வெற்றிபெற்றார்கள்
(அல்குர்ஆன்)
உலகில் பார்ப்பதற்கு எல்லோரும்ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறார்கள். பழகிப்பார்த்தால்தான்அவர்களில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? எனும் வித்தியாசம் புரிகிறது!
ஒன்று போல் தோற்றமளிக்கும்பொருள்களை சில வித்தியாசங்களை வைத்து நுணுக்கமானவர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.
இளநீர், நீர் நிறைந்ததா?பருப்பு உள்ளதா? என்பதையும், தேங்காய் வழுக்கையா முற்றியதா? என்பதையும் சில அடையாளங்களைவைத்து வியாபாரி கண்டு கொள்வார்.
பானை தரமானதா? தரமற்றதா?என்பதை தட்டிப்பார்த்தால் அதிலிருந்து வரும் ஒலியின் வேற்றுமையைக் கொண்டு அறிந்து கொள்வர்.
இதேபோல, முஃமின் எனும் இறைநம்பிக்கையாளர் யார்? என்பதையும் நம்பிக்கையாளர்களைப் போல்நடிக்கும் முனாபிக், (நயவஞ்சகர்) யார்? என்பதையும் இறைவனும் அவன் திருத்தூதரும் சில அடையாளங்களால் தெரிந்து கொள்ளுமாறு செய்திருக்கிறார்கள்.
முஃமினின் பதவி உயர்ந்தது. முனாஃபிக்கின் நிலையோ மிகமிகத்தாழ்ந்தது.
“முஃமின்கள் நிச்சயமாக வெற்றிபெற்றார்கள்” என அல்லாஹ் தன் அருள்மறையில் அறிவிக்கின்றான்.
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் “முஃமினின் நாட்டமெல்லாம் தொழுகை, நோன்பு, வணக்கமாகும்!முனாபிக்கின் நாட்டமோ மிருகத்தின் நாட்டம் போல உண்பது, குடிப்பது,அனுபவிப்பதுமாகும்” என்று திருவாய் மலர்ந்தார்கள்.
மகான் ஹாத்திமுல் அஸம்மு(ரலி) அவர்கள், முஃமின்- முனாஃபிக்கின் அடையாளங்களை இவ்வாறு வகைப்படுத்தினார்கள்
முஃமின்
1. எதையும் யோசித்து இறைபயத்தில் இருப்பான். மக்களுக்கு பயப்படமாட்டான். அல்லாஹ்வுக்கு மட்டுமே அஞ்சுவான்.
2. மக்களுக்கு பயப்படமாட்டான்: அல்லாஹ்வுக்கு மட்டுமேஅஞ்சுவான்.
3. மக்களிடம் அதரவு வைக்காமல், அல்லாஹ்விடம்மட்டுமே ஆதரவு வைப்பான்.
4. மார்க்கத்துக்காக பொருளைஇழப்பான்.
5. வணங்கிக் கொண்டும் அழுதுகொண்டுமிருப்பான்.
6. தனிமையையும் ஒதுங்கி இருத்தலையும் விரும்புவான்.
முனாஃபிக்
1. ஆசையில் திளைத்து கற்பனையில் மூழ்கியிருப்பான்.
2. அல்லாஹ்வுக்கு அஞ்சமாட்டான். ஆனால் மக்கள் அனைவருக்கும் அச்சப்படுவான்.
3. எல்லோரிடத்திலும் ஆதரவு வைப்பான். அல்லாஹ்விடம்ஆதரவு வைக்கமாட்டான்.
4. பொருளுக்காக தீனை இழப்பான்.
5. சிரித்துக் கொண்டும், பாபம் செய்துகொண்டுமிருப்பான்.
6. கும்பலையும், கூட்டம் கூடலையும் விரும்புவான்.
மேலும் முஃமினை அடையாளப்படுத்தும்நற்குணங்கள் இவையாகும்!
7. நாணம், பேச்சு குறைந்திருத்தல், பிறருக்கு துன்பம் தராமை, உண்மை உரைத்தல், திருந்துவதை விரும்புதல், அதிக வணக்கம், தவறு குறைந்திருத்தல், பகட்டு இல்லாமை, எல்லோருக்கும் நலம் நல்குதல், எல்லோருக்கும் நன்மை செய்தல்,கண்ணியம், அன்பு, இரக்கம்,சாந்தம், பொறுமை, உள்ளதைக்கொண்டு திருப்தி அடைதல், நன்றி கூரும் இதயம், இளகியமனம், இரக்கம், அடக்கம்,பிறரிடம் பெறுவதில் கைச்சுருக்கம், ஆவல் குறைந்திருத்தல்,வசை மொழி கூறாமை, சபிக்காமை, கோள் சொல்லாமை, புறம் கூறாமை, தீயவார்த்தைகள் பேசாமை, அவசரமின்மை, மலர்ந்தமுகம் - மதுரவார்த்தை, அல்லாஹ்வுக்காவே ஒருவரை நேசித்தல்,அல்லாஹ்வுக்காகவே ஒருவனை பகைத்தல், அல்லாஹ்வுக்காகவேகோபித்தல், அல்லாஹ்வுக்காகவே மகிழ்தல் ஆகியனவாகும்.