• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jun 2012   »  அண்ணலார் அருளினார்கள்

அண்ணலார்அருளினார்கள்

 

ஆரிஃபீன்கள்

 

ஹராமானதை உண்ணாதவரை  மார்க்கத்தின்உச்சத்திலேயே இருப்பான்.  ஆரிஃபீன்களை வெறுத்தால்அவனது உள்ளம் இறந்துவிடும்.

ஆரிஃபீன்களின் சன்னிதானத்தில் அமராமல், நாற்பது நாட்கள் கழிந்தால்,அவனின் உள்ளம் பாவகாரியத்தைத் தூண்டும்.  பெரும்பாவம் செய்வதில் நிரந்தரமாக இருப்பான்.  ஏனெனில்இல்முல் இர்பானே (இறைஞானம்) உள்ளத்தின் உயிர். உயிர் இன்றி இபாதத் இல்லை.


பேணுதல்

ஒருவனிடம் பேணுதல் இருந்தால், அல்லாஹ்விற்கு மாறுசெய்வதிலிருந்துஅவனை அது காப்பாற்றும்.  பேணுதல்இல்லாத மனிதனிடம்,இறை விசுவாசம் இருக்காது.  அதன் காரணமாக அவன்வாழ்வதை விட இறப்பது மேல்.

வேகவைத்து..
.

வேகவைத்தால் நன்றாக வேகவையுங்கள்.  சாப்பிட்டால், கவளத்தை சிறிதாக்குங்கள்.  வயிறு புடைக்க உண்பவனது  உள்ளம் இறந்துவிடும்.  உடல் நலக்குறைவு உண்டாகும்.

           

என் சமூகத்தினர் 15 செயல்களில் ஈடுபட்டுவிட்டால் அதன்பின் சோதனைஏற்பட்டுவிடும் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நாயகமே!அவை யாவை? என்று கேட்கப்பட்டதற்கு அவர்கள்

1. யுத்தத்தில் கிடைத்த பொருள் (அதாவது பொதுப் பொருள்) சொந்தப்பொருளாகி (பங்கீட்டுக்குஇல்லாமலாகி)விடுவது.
2.அமானிதப் பொருள் கொள்ளை யடித்த பொருளாகி விடுவது.                
3. ஜக்காத்து விடுவிக்கப் பட்டுவிட்டது என எண்ணிக் கொள்வது.
4. கணவன் தன் மனைவிக்கு அடங்கி நடப்பது.
5. தன் நண்பனுக்கு நன்மை புரிந்து தன் தாய்க்கு தீங்கு செய்வது. தன் தந்தைக்கு அநீதம்செய்வது.
6. பள்ளிவாசல்களில் இரைச்சல் போடுவது.

7. மக்கள் தலைவன் அவர்களில் கெட்டவனாக இருப்பது.
8. மனிதனை அவன் தீமைக்கு பயந்து கண்ணியப் படுத்துவது.
9. மது குடித்தல்
10. (ஆண்கள்) பட்டு அணிதல்
11. பாடகிகள் உருவாதல்
12. மேளதாளம் வாசிப்பது.
13. இந்தச் சமூகத்தில் பிந்தியவர்கள்முன்னோர்களைச் சபிப்பது.
14, 15 ஆகியவை 5 ல் அடங்கிவிட்டன. 

இத்தகைய சமயத்தில் சிவப்பு நிறமான புயல் பூமியில் அடிப்பதும் பூமி செருகிவிடுவதும்தோற்றம் மாறுபட்டு விடுவதும் கல்மாரி பொழிவதும் ஆகிய அடையாளங்களை எதிர்பாருங்கள்.

 

 

அறிவிப்பாளர்:

ஹள்ரத் அலிய்(ரலி)  

ஆதாரம்: திர்மிதீ