சங்கைமிகுஷைகுநாயகம் அவர்களின் அமுத மொழிகள்
(சங்கைமிகுசெய்குநாயகம் அவர்கள் 12.08.2009 அன்று துபையில் நடைபெற்ற மஜ்லிஸில் முரீதுகள் விடுத்த வினாவிற்கு அளித்தவிளக்கம் )
கேள்வி : இறை எல்லாப் புறமும் இடத்திலும் சூழ்ந்துள்ளது என்கிறோம்.... மனிதனிலும் இறையுள்ளதுஎன்பதை எப்படி உணர்ந்து கொள்வது....?
பதில் : மனிதனில் இறையிருப்பதை உணர்வதற்கு பயிற்சியே சரி. (மஜ்லிஸில் அமர்ந்திருக்கக் கூடியவர்களைக் காண்பித்து)அதாவது எங்களைச் சூழ மனிதர்கள்தானே இருக்கிறார்கள் வேறொன்றும் இல்லை(யா)யே...?
எங்களைச் சூழ மனிதர்கள் மட்டுமல்ல; எங்களைச் சூழ ஆகாயமும் இருக்கிறது. நான் இருக்கிறேன். நான் இருக்கக்கூடிய இடத்தில் ஆகாயம் இல்லை. என்னுடைய உடல்தான் இருக்கிறது. எங்களைச் சுற்றியிருப்பது எல்லாமே ஆகாயம்தான். நாங்கள் கொஞ்சம் (ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு)மாறிவிட்டோம் என்றால் அந்த இடத்தை ஆகாயம் வந்து பூரணமாக்கிவிடும்.
இன்னோர் இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தில் குறைந்திருக்கும். ஆக எங்களைச் (நம்மை) சுற்றிவரயிருப்பது எல்லாமேஆகாயம்தான். எங்களின் (நம்) உள்ளுக்குள்ளும்ஆகாயம்தான் உள்ளது. நாங்கள் (நாம்) மூச்சைஇழுக்கிறோம் போகிறோம்; வருகிறோம். இப்படி எல்லாம் நடைபெறுகின்றன. நாங்கள் (நாம்) தனியாக இருக்கவில்லை.
எல்லாப் பரிபூரணத்திலும் நாங்களும் ஒரு பகுதியாக எங்களுக்குத் தெரிகிறது. அதாவது ஒரு ஜுஸ்வு. ஜுஸ்வு. என்றால் ஒரு பகுதி. ஒரு தாள் உள்ளது. அதில் ஒரு துண்டை எடுத்தால் அதுவொரு தாளின் பகுதிதான்.
(அதுபோல்) கண்ணைக்கொண்டு நாங்கள் (நாம்) பார்க்கிறோம்.
எப்போது பார்க்கமுடியும்?
வெளிச்சம் இருந்தால்தான்பார்க்க முடியும்.
சரி! எதைப் பார்க்கப்போகிறீர்கள்?
ஒரு படத்தை நீங்கள்பார்க்க வேண்டுமென்றால் கண்பார்வையும் சரியாக இருக்க வேண்டும். வெளிச்சமும் இருக்க வேண்டும்.
படம் இல்லாவிட்டால் அதைப் பார்க்க முடியுமா?
வெளிச்சம் இல்லாவிட்டால் பார்க்க முடியுமா?
கண்பார்வை சரியில்லாமல் பார்க்க முடியுமா?
எல்லாச் சக்திகளும் ஒன்று சேர்ந்து வருகிற சக்தி எங்களுக்குள்(நமக்குள்) உள்ளது.
அது அல்லாஹ்வுடைய சக்தி. இதைக் கொண்டு எங்களுக்குள் (நமக்குள்) அல்லாஹ்வுடைய சக்தி இருக்கிறது என்பதைவிளங்கிக் கொள்ளவேண்டும். எல்லாமே அல்லாஹு தஆலாவுடைய சக்திதான். வெளிச்சமும் அதுதான்,அணுக்களும், ஆகாயமும் அதுதான், தண்ணீரும் அதுதான். அந்தச் சக்தியைக் கொண்டுதான் நாங்கள்(நாம்) இன்றைக்கு வாழ்கிறோம். இல்லாவிட்டால் வாழ முடியாது.
அல்லாஹு தஆலாவின் சக்தி எங்களுக்குள் இருக்கிறது என்பதை நாங்கள்(நாம்) உணரவேண்டும். ஆனால் (அது) ஒரு பகுதிதான்.
ஒரு தாள் இருக்கிறது அதில் நிறைய எழுதலாம். ஒரு கடிதமே எழுத முடியும். அதில் ஒரு துண்டைக் கிழித்துஎடுத்தால் அதில் அந்தக் கடிதத்தை எழுத முடியுமா?
ஆக ஒரு தாளின் (துண்டின்) அளவு சக்திதான் எங்களுக்கு (நமக்கு) இருக்கிறது.....(என்பதைவிளங்கிக் கொள்ளவேண்டும்).
சீடர்களின் ஒழுக்கங்கள்
அந்தக் காலத்தில் ஒருவர் பைஅத் (தீட்சை) பெறுவதென்றால், மிகவும்கவனத்தோடும் சிரத்தையுடனும் நடந்து, பல்லாயிரக்கணக்கான மைல்களும் கடந்து சென்று, எவ்வளவோபணமும் பொருளும் செலவழித்து தேடிப்போய் தீட்சை பெற விரும்பினால் அந்த குருவோ, “உனக்குபைஅத் பெறத் தகுதி இல்லை”எனக்கூறி திருப்பி அனுப்பி விடுவார்.
மறுபடியும் அன்னாரிடம் சென்று, வீட்டு வேலைகள் செய்து அந்த குருவிற்குஎன்னென்ன கித்மத்கள் (சேவைகள்) செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து, அவர் பக்குவம் பெற்றபிறகுதான் தீட்சை அளிக்கப்படும். அவர் (முரீத்)எவ்வளவு பெரிய ஆலிமாயிருப்பினும் இதே நிலைதான்.
ஆனால் இந்தக் காலத்தில் அப்படியில்லை. மிகவும் இலகுவாகக் கொடுத்து விடுகிறோம். அந்தக்காலத்தில் சீடரின் மனோநிலையை அறிந்த பிறகுதான் தீட்சை கொடுக்கப்படடது. அதுபோல, அந்த சீடர் சிறந்த காதிமாக (சேவகராக) மாறியபின்னர்தான் நன்றியுள்ள சீடனுக்குக் கொடுப்பதை குருமார்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஆனால், இப்போது நாம் கடல் கடந்து வந்து பிள்ளைகளின் வீடுகளுக்குப்போய்முரீது கொடுத்துவிட்டு, கிலாபத் கொடுத்துவிட்டு வருகிறோம். ஆகவே, அந்தக் காலத்தில்தீட்சை கொடுத்தற்கும் இக்காலத்தில் இவ்வாறு தீட்சை கொடுப்பதற்கும் மிக்க வேறுபாடுகள்உள்ளன. இக்காலத்தில் மாணவர்கள் இருக்கும் இடத்திற்குஆசிரியர்கள் சென்று பாடம் கற்பித்து வருகின்றனர். ஆனால், அக்காலத்தில் ஆசிரியர் இருக்கும் இடம் தேடிச் (குருகுலம்) சென்று மாணவர்கல்வி கற்பது வழக்கமாக இருந்தது.
வீடு தேடி வந்து பைஅத் கிடைக்கப் பெற்றதால் தான் சிலர் அதனை இலகுவாகநினைத்து வருகின்றனர். தமது குருவின் தரத்தைக்கூடஅறியாத நிலையில் சிலர் உள்ளனர். இந்நிலை மோசமாகும்போதுபைஅத் முறிந்து விடுகிறது. நமது தரீக்காவில்உள்ள வன்னெஞ்சர்களை இப்போது ஒவ்வொருவராகக் களைபிடுங்கி வருகிறோம். இத்தகையோரின் நிலையோ - கதிகலங்கிய நிலையாகும். பொலிவிழந்து அழிவுறுவர். அறியாப் புறத்திலிருந்து அல்லாஹ்வின் கடும் தண்டனைகள்இறங்கிக் கொண்டேயிருக்கும்.
பயனனுள்ள கல்விதான் உண்மையான கல்வியாகும்