அஹ்மதுகபீர்ரிபாயீஆண்டகை (ரலி) அருள்மொழிகள்!
ஒருவன் (தான் கொடுக்கும் தருமத்திற்கோ அல்லது வணக்கத்திற்கோ தொண்டிற்கோகைமாறாக) அல்லாஹ்விடமிருந்து அவனுக்குக் கிடைக்கும் (அளவில்லாத) பாக்கியங்களை அறிந்தால்அவன் செலவிட்ட தர்மம், வணக்கம், தொண்டு, அவனுக்கு அற்பமாகவே தெரியும்.
தன்னைத்தான் சீர்படுத்தி ஒழுங்காக நடப்பவனைப் பார்த்து அவனோடு சேர்ந்தவர்களும்சீர்திருந்தி விடுவார்கள். குச்சி நேரானால் நிழலும் நேராகும்; குச்சி கோணலாய் இருக்கநிழல் நேரே விழுவது எப்படி?
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தார் அல்லாஹ்விடம்முறையிட்டு (கஷ்டநிலையை) மாற்றிக்கொள்ளவும்,பல அற்புதங்களை நடத்தவும் ஆற்றல் பெற்றிருந்துங்கூட, பரிபூரண திருப்தி யுடையவர்களாகவேஇறைபுறத்தால் நடக்கும் காரியங்களுக்குத் தலை சாய்த்தார்கள்.
இமாம் ஜைனுல் ஆபிதீன் (ரலி) அவர்களை, உமையாக் கலீபாவான அப்துல்மலிக் இப்னு மர்வான் என்பவர் கை, கால்களுக்கு கனமான பெரும் இரும்பு விலங்குகளை மாட்டிகைது செய்து, மதீனாவிலிருந்து அன்னிய இடத்திற்கு அனுப்பினார். இந்த நிலையில் அவர்களைக்கண்ட ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கோவென்று அழுது, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்குலக் கொழுந்தே! உங்களுக்குப் பதிலாக என்னைக் கைது செய்துகொண்டு போகச் சொல்லுங்கள்!என்று கதறினார்கள்.
அப்போது ஜைனுல் ஆபிதீன் (ரலி), இது என்னை மனக்கஷ்டம் அடையச் செய்கிறது என்றா நினைக்கிறீர்?நினைத்தால் இதை நீக்கிக்கொள்வது கடினமில்லை. ஆனால், இந்நிலைமை மறுமையில் அல்லாஹ்வின் வேதனைகளைப் பற்றிய சிந்தனைகளைத் தூண்டுகிறது.அதனாலேயே இதற்கிணங்கிச் சும்மா இருக்கிறேன். என்று கூறிக்கொண்டே கையிலும். காலிலும்இருந்த விலங்குகளையயல்லாம் அகற்றிவிட்டு, பின்பு முன்பிருந்தது போன்று கையிலும், காலிலும்விலங்கைத் திரும்பவும் தாங்களாகவே மாட்டிக் கொண்டார்கள். இந்நிலையில் அவர்களைக் கண்டஸுஹ்ரீ(ரஹ்) அவர்களுக்கு உண்மை விளங்கியது. இமாம் அவர்கள் திருவுளச்சித்தப் பொருத்தம்(ரிளா) என்ற தலத்தில் புகுந்து, பரிபூரணமாக ஒப்படைத்தல் (தஸ்லீம்) என்ற நிலையைப் பெற்றுமகத்தான பெரும் பாக்கியங்கள் என்ற கேந்திரஸ்தானத்தை அடைந்துள்ளார்கள் என்பதையுனர்ந்துஸுஹ்ரீ மன நிம்மதியடைந்து கவலைப்படுவதை விட்டார்கள்.