• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  Jun 2012   »  ​உமர் (ரலி) புராணம்​

உமர் (ரலி) புராணம்

 

ஆசிரியர்

ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா  அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்

 

                        சிறந்தவனென்று கூற

                                    சீர்நபிஆணை யிட்டார்

                        அறந்தனைவாழ்வ தாக

                                    அமைத்ததோழர்க ளெல்லாம்

                        திறலுடனுரத்துச் சொன்னார்

                                    தீயவர்கேட்டி டற்கு

                        மிறலுறுமிறைய வன்றான்

                                    மேலினன்னுயர்வு ளானே.

 

கொண்டுகூட்டு:

 

                        (புற்கதிலாத அல்லாஹ்

                        பூரணனுயர்ந்தா னென்று,)

 

சிறந்தவன் என்று கூற சீர்நபி ஆணை இட்டார்.  அறம் தனை வாழ்வு அதாக அமைத்த தோழர்கள் எல்லாம் திறல்உடன் தீயவர் கேட்டிடற்கு உரத்துச் சொன்னார். மிறல் உறும் இறையவன் தான் மேலினன், உயர்வு உள்ளான். ஏ

 

பொருள் :

 

சிறுமையற்ற அல்லாஹ் பூரணன், உயர்ந்தவன், சிறந்தவன் என்று கூற சீருடையநபியவர்கள் ஆணையிட்டார்கள். அறத்தினையே வாழ்வாக அமைத்துக்கொண்ட தோழர்கள் எல்லாரும்வீரத்துடன் தீயவர்களாகிய பகைவர்கள் காதிற் கேட்குமாறு பலமாகச் சொன்னார்கள்.  பெருமை மிக்க இறைவன் தான் மேன்மையுற்றவன் உயர்வுள்ளவன்.

 

குறிப்பு :

 

 திறல் : வலிமை.  உரம் : பலம். மிறல் : பெருமை.  இப்பாட்டு இதன் முதற்பாட்டோடுதொடர்புடையது காண்க. 

 

 

நோயற்ற சுகவாழ்வும் அருள்வாயாக!ஆமீன்யாரப்பல் ஆலமீன்.  வல்ஹம்து லில்லாஹி ரப்பில்ஆலமீன்.