உமர் (ரலி) புராணம்
ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
சிறந்தவனென்று கூற
சீர்நபிஆணை யிட்டார்
அறந்தனைவாழ்வ தாக
அமைத்ததோழர்க ளெல்லாம்
திறலுடனுரத்துச் சொன்னார்
தீயவர்கேட்டி டற்கு
மிறலுறுமிறைய வன்றான்
மேலினன்னுயர்வு ளானே.
கொண்டுகூட்டு:
(புற்கதிலாத அல்லாஹ்
பூரணனுயர்ந்தா னென்று,)
சிறந்தவன் என்று கூற சீர்நபி ஆணை இட்டார். அறம் தனை வாழ்வு அதாக அமைத்த தோழர்கள் எல்லாம் திறல்உடன் தீயவர் கேட்டிடற்கு உரத்துச் சொன்னார். மிறல் உறும் இறையவன் தான் மேலினன், உயர்வு உள்ளான். ஏ
பொருள் :
சிறுமையற்ற அல்லாஹ் பூரணன், உயர்ந்தவன், சிறந்தவன் என்று கூற சீருடையநபியவர்கள் ஆணையிட்டார்கள். அறத்தினையே வாழ்வாக அமைத்துக்கொண்ட தோழர்கள் எல்லாரும்வீரத்துடன் தீயவர்களாகிய பகைவர்கள் காதிற் கேட்குமாறு பலமாகச் சொன்னார்கள். பெருமை மிக்க இறைவன் தான் மேன்மையுற்றவன் உயர்வுள்ளவன்.
குறிப்பு :
திறல் : வலிமை. உரம் : பலம். மிறல் : பெருமை. இப்பாட்டு இதன் முதற்பாட்டோடுதொடர்புடையது காண்க.
நோயற்ற சுகவாழ்வும் அருள்வாயாக!ஆமீன்யாரப்பல் ஆலமீன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில்ஆலமீன்.