• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Mar 2012   »  மெய்யொளி


மெய்யொளி பதில்கள்


படைப்புகளில் மனிதன் தான் சிறந்த படைப்பு எனக் கூறப்படுவதேன்?

தாழ்வு மனப்பான்மையை ஒழிக்கத்தான்

மனோதிடம் பெற என்ன செய்ய வேண்டும்?

சந்தேகம் நீங்க வேண்டும்.

“இணை” என்பது உண்டா? இல்லையா?
 பூரணத்தை பின்னப்படுத்தி எண்ணத்தில் கொள்வது “இணை”.“

கரு” உருவானதா? உரு கருவானதா?“
அரு”வின் மாயையே கரு.

‘மறைவானவை’ என்பதென்னென்ன?
அவரவர் அறியாதவைகள் அவரவர்க்கு மறைவானவை.

‘லாஃபாயில இல்லல்லாஹ்’ என்பதன் தாற்பரியக் கருத்து என்ன?
பிரபஞ்சம் ஒரே செயலின் லயம்.

எல்லாமானவன் தனித்திருப்பது எப்படி?
தனித்தவன் எல்லாமாயிருப்பதைப் போலத்தான்.

அனைத்தும் ஏட்டில் எழுதப்பட்டிருக்கின்றன..... எனத் திருமறை கூறுவதன் மெய்ப்பொருள் என்ன?
பிரபஞ்சமே ஏடு.

“மெய்யயாளி ” என்றால் என்ன பொருள்?
உள்ளதை உள்ளபடி தெள்ளென விளக்கும் ஒளி.

உங்கள் ஷைகு நாயகமவர்களை காலத்தின் ரசூல் எனக் கூறுகிறீர்களாமே... அப்படியா?

ரசூலுல்லாஹ் (அல்லாஹுடைய ரசூல்) என்று சொன்னால் தவறு.

அல்லாஹ்வை இவ்வுலகில் காண முடியாது எனக் கூறுகிறார்கள்... உண்மையா?
அல்லாஹ்வை, அல்லாஹ் இவ்வுலகிலும் அறிவான். எவ்வுலகிலும் அறிவான்.

யாரைப் பார்த்தால் தங்களுக்குப் பொறாமையாக இருக்கும்? ஏன்?
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இறையை நேசிப்பவர்களை.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிவுப்பட்டணம் எனக் கூறுவதேன்?
“முழுமதி” முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

தஜ்ஜால் வந்து விட்டானா? யார் அவன்?
தஜ்ஜாலைப்பற்றி யோசிக்கும் நேரத்தில் இறைவனைப் பற்றிச் சிந்தியுங்கள். நன்மை விளையும்.

மூளும் பவங்கள் என்பன யாவை?
தன்னை அறியாது தான் செய்யும் செயல்கள் யாவும் மூளும் பவங்கள் தாம்.

தானத்தில் சிறந்தது எது?
“ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்றார் பாரதியார்.

தவம் - என்பதென்ன?
தன் குரு (ய­ய்கு) வினுடைய நெறிமாறாமை. குரு அர்ப்பணம்.இணையை இறை மன்னிக்கமாட்டேன் எனக் கூறுவதேன்?
தன்னைப் பின்னப்படுத்துவதை யார் தான் மன்னிப்பார்கள்.

“இறைவண்ணங்களில் தோய்வீராக” என்னும் திருமறை வசனத்தின் உட்கருத்து?
இறையின் குணம் கொண்டு குணம் பெறுங்கள் என்பதுதான்.

அல்லாஹ்விற்கு உதவி செய்யுங்கள்.. எனத் திருமறையில் கூறப்படுகின்றது! அல்லாஹ்விற்கு எப்படி உதவுவது?
இறைவனோடு போரிடாதீர்கள்.

அவனுக்கு நிகர்“அவனா”?
எவனுக்கு?

சான்றோர்கள் எனப் போற்றப்பட வேண்டியவர்கள் யாவர்?
இவ்வுலகம் யாரைக் கொண்டு நிலைத்து நிற்கிறதோ அவர்கள்.

மவ்லித் கிதாபில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வரம்பிற்கு மீறி புகழப்படுவதால் தான் எதிர்க்கின்றோம் எனச் சிலர் கூறுகின்றனர் - தங்களின் பதில்?
மவ்லிது எந்த இடத்திலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ் என்று கூறவில்லையே

அச்சத்தை வெல்ல என்னதான் வழி?
மரணத்தை வெல்ல வேண்டும்.

இறைக் காதலைப் பெறுவது எப்படி?
இறைவனுக்காக வாழுங்கள்.

நாம் “கிப்லாவை” முன்னோக்குவது ஏன்?
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டியதால்

(நபிவழி).இரும்பு - நெருப்பு; தங்கம் நெருப்பு என்ன ஒற்றுமை? என்ன வேற்றுமை? வேற்றுமை விலைவாசியில்தான்.

தானே தன்னில் தானாகி விட்டானா? தானாகி விடுவானா?
“தானே தன்னில் தானான்

”.‘ஃபனா’ என்பதென்ன? ஃபகா என்தென்ன?
மறையக் கூடியது (நிலையாமை) ஃபனா. (படைப்பு) நிலைப்பது ஃபகா. தாற்பரியம்.

சங்கைமிகு ஷைகு நாயகமவர்களின் நபி நேசத்தின் உச்சகட்டம் என்ன?
அவர்களை அவர்களாய் நிலை நிறுத்தியது.

‘இல்லை’ என்பது உண்டா? உண்டு என்பது இல்லையா?
இல்லை என்பது இல்லை இல்லை. இருப்பது என்பதும் இல்லை. இல்லாதிருந்தது, இருப்பதும் இல்லை என்பதே உண்மை.

“யகீன் உண்டாகும் வரை வணங்கு” என்றால் என்ன விளக்கம்?
இறைவன் மட்டுமே உள்ளான் நானில்லை என்ற உறுதி வரும் வரை வணங்கு என்று பொருள்.

‘தோன்றுதுறை’ என்பது என்ன?
வித்தின் வெளிப்பாடு.

உலகம் எப்போது அழியும்?
அதற்கு இப்ப என்ன அவசரம்?