துளித் துளியாய்
- கவிஞானி, மஹ்பூபு சுப்ஹான
உயித் துளியில் உருவாகி உன்னதத் துளியானவன் மனிதன். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு துளிதான். துளியாக இருக்கும் மனிதனுள்தான் எத்தனை யயத்தனைத்துளிகள். அவனை உருவாக்கவும்; உருக்குலைக்கவும்.
அன்பு, பண்பு, பரிவு,கனிவு. கோபம், தாபம்,விருப்பு,வெறுப்பு, வீரம், சோரம்,காதல், காமம், இவை அனைத்தும்மனிதனுள் அவனை உருவாக்கக் கூடிய துளிகளே!
அண்ட கோளங்கள் இறைவனின்எண்ணக் கரத்திலிருந்து விழுந்து நிற்கும் அபாரத் துளிகள். அதனுள் உறையும் ஒவ்வொரு பொருட்களும் ஒவ்வொரு துளிகள்தாம்; இறைவனின் நாட்டத்தில் உருவான அற்புதத் துளிகள். அந்தத் துளிகளுக்குள் தாம் எத்துணைப் பெரியப் பெரியஅறிவுக் கடல்கள். தோண்டத் தோண்ட கிடைத்துக்கொண்டே இருக்கின்ற ஞானப் புதையல்கள்.
மழைத்துளிகள் ஒன்றோடுஒன்று உரசிக் கொள்ளும்போது நீர் உண்டாகிறது. நீர் நீரோடுத் தழுவிக் கொள்ளும் போது வெள்ளமாகிறது. வெள்ளம் விசாலமாய் ஒன்று கூடும்போது கடலாகிறது.
ஒருதுளிநீர் என்றைக்குமேகடலாவதில்லை. ஆனால் கடலில் எண்ணற்ற துளிகள் இருக்கின்றன. வெள்ளத்தின் - கடலின் ஆற்றலை எப்போதுமே துளிகள்பெற முடிவதில்லை. அது தனித்தே நிற்பதால். எனவேதான், “ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்” என திருக்குர்ஆன் மனிதத் துளிகளைப் பார்த்து வெள்ளமாக - கடலாக மாறிவிடுங்கள்,வியத்தகு வாழ்வை; விஸ்தீர்ணமான உலகை அடைந்து கொள்வீர்கள்என புத்திமதி சொல்கிறது.
மழைத்துளி ஒன்று, தான் தனியாக இருக்க வேண்டும் என நினைத்தாலும்மற்றத் துளிகள் அதைத் தனித்திருக்க விடுவதில்லை. அது இயலும் ஒன்றல்ல. தனியாக இருக்கும்ஒரு துளி விரைவில் அழிந்து விடும் ஆம்! சூரியனின் ஒருசிறு கதிர்த்துளியில் தன்னை இழந்துவிடும். ஆனால், கடலுக்குக் காயமும்இல்லை. காணாமல் போகும் நிலையும் இல்லை. எனவேதான்மனிதனைக் கடலாகச் சொல்கிறது குர்ஆன். அச்சுக் கோக்கப்படாத எழுத்துக்களை வாசிக்க முடியாது.எனவே தான் மனிதர்கçளைப் பார்த்து வாக்கியமாகுங்கள் என்கிறது குர்ஆன். வாக்கியங்கள் ஒற்றுமையாகும்போது அவை நூலாகிவிடும். ஆம்! மனிதன் நூலாக வேண்டுமென்று குர்ஆன் அறிவுறுத்துகிறது.
ஆணும் அரைத்துளி; பெண்ணும் அரைத்துளி. திருமணம் இவர்களை முழுத்துளியாக்கி உயர்த்துகிறது. எந்தவொரு வியமும் முழுமை பெறும் போதுதான்அதன் பலனை அது அது பெற்றுக் கொள்ளும். மனிதத் துளிக்குத்தான் எத்தனைத் துளிகள் தேவைப்படுகின்றன. மற்றத் துளிகளுக்குத்தான் மனிதன் எவ்வளவு தேவைப்படுகிறான்ஆடையைப் போல.
உணர்வு வெப்பத்தால் உருகி விழுகிறது கண்ணீர்த் துளிகள். ஏழைகளின் இதயத்தை இரக்கமே இல்லாத முரட்டுக் கரங்கள்இறுக்கிப் பிழியும் போது அங்கே வழிவது இரத்தத் துளிகள்.
கண்ணீர்த்துளிகள்! இதயத்தாளை நிறைத்து விட்ட கவலைச் சொற்களின் சுருக்கெழுத்தல்லவாஅவை! கவலைக் கடலில் அந்த இதயம் தத்தளிக்கிறதுஎன்பதைச் சுட்டிக் காட்டும் குறியீடல்லவா! சொட்டுச் சொட்டாய் வடியும் அந்த துளிகளிலேயே தனது வாழ்வும் வீழ்ந்து போவதாகஉணருகிறான் மனிதன். சோகங்களும் துன்பங்களும் மனிதனுள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தி விடுகின்றன.
தடைகள் பல அவனைத் தடுத்து நிறுத்தும் போதெல்லாம் அவற்றிற்கான விடைகளைக்கண்டு வெற்றிபெறும் போதுதான் மனிதன் அவனது பயனை அடைகிறான். இவ்வாறான இக்கட்டான நேரங்களில்அவனது தன்னம்பிக்கையை மட்டுமே தனக்கான கலங்கரை விளக்கமாக அவன் விளங்கிக் கொள்ளும் போதுஅவனது வாழ்வில் வெளிச்சக் கதிர்களைப் பெறுகிறான். இன்னும், ஆனந்தத்தில் ஐக்கியமாகும்போது அந்த இன்ப அதிர்ச்சி தாளாமல் கண்ணீர் வடிகிறது. இல்லை. கண்ணில் நீர் பூக்கிறது.
மனிதன் துன்பத்திலும் அழுகிறான்; இன்பத்திலும் அழுகிறான். கண்ணீர்த் துளிகளில்தாம் இறைவன் எத்தனை வகையான அர்த்தங்களைப்பொதிந்து வைத்துள்ளான். ஊடுருவும் நோக்குடையவர்களுக்கல்லவாஅவையயல்லாம் விளங்கும்.
காலம் மனிதனுக்கு வள்ளலாகும் போது அவனுள் ஆனந்தத் துளிகள் நிறைகின்றன. அது கருமியாகும் போது கவலைத் துளிகள் குவிகின்றன. மனிதன் தான் எத்தனைத் துளிகளுக்குள் அவ்வப்போதுமூழ்கிப் போகிறான். அவனுக்கு ஏணியாகும் துளிகள்தாம்எத்தனை? அவனைப் புதைக்கின்றதுளிகள்தாம் எத்தனை? மனிதனுக்குத்தான் எத்தனை யயத்தனை ஆசைத் துளிகள்?அவனை அழகாக்கவும்; அழிக்கவும்!
போதைத் துளியினில் செத்து மிதக்க மதுத்துளிகளை வேண்டுகிறான். காமத் துளியினில் காணாமல் போக கலவி செய்கிறான்; பணத் துளியினில்தன்னைப் பறிகொடுக்க பாடுபடுகிறான். அதற்காகஅவனது சிந்தனையில் துளிர்க்கும் எண்ணத் துளிகள்தாம் எத்துணை விகாரமானவையாக இருக்கின்றன.
மனிதன் தன்னில் உருவாக்கும் ஒவ்வொருதுளிகளும் அமுதாகவும்,விமாகவும் விசுபரூபம் எடுப்பதை அறியாதவனாக அல்லாடுகிறான். அவை அமுதாக இருந்தால் அழகாக வாழ்கிறான். அவை விமாக இருந்தால் அதனாலேயே அவன் அழிவுக்குஆளாகிறான்.
ஆசைத் துளிகளும் அகம்பாவத் துளிகளுமே மனிதனை வெகுவாக அழிக்கின்றன. அவனை அடையாளம் தெரியாமல் ஆக்குவதும் அவைகளே!
அறிவுத் துளிகளைச் சேகரித்து கடலாகி இருக்கும் ஒவ்வொரு நூலும் ஒவ்வொருதுளிகள்தாம். மனிதனைச் செதுக்கி அவனையே அவனுக்குக் காட்டும் உளிகள்.
எண்ணும் எழுத்தும் மனிதனை ஏற்றமுறச் செய்து கண்ணெனத் திகழும் ஒப்பற்றதுளிகள். கல்வித் துளிகளைச் சேகரிக்காத மனிதன்வறண்ட நிலமாகிக் காய்ந்து போகிறான்; பசுமையைப் பெறாத கரிசல் நிலமாகிறான்.
மனிதன் ஒருவன் எவ்வளவு உழைத்தான்என்பதற்கு அவனது வியர்வைத் துளிகளே சாட்சிகளாகின்றன.
வெப்பத்தால் அவனது மேனி வேதனைப் பட்டதையும் வியர்வைத் துளிகளே விளம்புகின்றன.
பனித்துளி,மழைத்துளி, கண்ணீர்த்துளி இவையயல்லாம் தூய்மைக்குஉத்திரவாதம். இவற்றைப்போல் நம் இதயமெல்லாம் இருந்து விட்டால் தேன் துளியைப்போல் அவைஎத்துணை இனிப்பாக இருக்கும்; பால் துளியைப் போல
தூய்மையுடன் இலங்கும். அதில் வித்துளி கலந்துவிட்டால் அதன்நிலைஎத்துணை தலைகீழாக மாறிவிடும். எனவே, பன்னீர்த் துளியைப்போலஅதைப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மரமும் நிலப் பெண்ணுக்கு இறைவன் வழங்கிய ஆபரணத் துளிகள். அவற்றில் தான் மொட்டு, பூ, காய், கனி, இலை, கிளை என எத்தனையோ துளிகள். சிந்தனைக்குவிருந்தாகும் அறிவுத்துளிகள்; இறைவனின் ஆற்றலில் துளித் துளியாய்வெளிப்படும் அலங்காரத் துளிகள்!
அப்படி யயன்றால், எல்லாம் ஆக்கி ஆளுகின்ற ஆண்டவனும் ஒரு மாபெரும் துளிதானே என்றுயாரும் கருதிவிட வேண்டாம்.
புரிந்து கொள்ளுங்கள். இறைவன்துளியும் அல்ல; கடலும் அல்ல, வானமே துளியானால் அதுவும் அல்ல!
அளவீடுகளுக்குள் அடங்கிப் போகாத மகாப் பெரிய அற்புத விரிவு அவனுக்குமட்டுமே சொந்தமானது. என்பதைப் புரிந்து கெண்டால் மனிதத் துளிகளில் நாமும் மகத்தான துளிகளாகிவிடுவோம்.