துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மீலாது விழா
விமர்சகர் : கலையன்பன் (முஹம்மது ரபீக், நிறுவனர் சங்கமம் தெலைக்காட்சி, துபாய்)
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மீலாதுன்னபி பெருவிழா கடந்த16.02.2012 அன்று துபாய் லேண்ட்மார்க் விடுதி மண்டபத்தில் ஜனத்திரள் மத்தியில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சபையின்தலைவர், கலீபா பு.p. சஹாப்தீன்(ய.சி., னி.ய.பு.)அவர்கள் தலைமை வகித்தார். ஒரு தலைவருக்குரியஅத்தனை சிறப்பம்சங்களும் அவருள் அடங்கியிருப்பதை அவர் நிகழ்ச்சியை நடத்திய சாமர்த்தியஒழுங்குமுறையில் தெரிந்து கொண்டேன்.
‘ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை’ எனும் வாக்கியத்தை உச்சரித்தாலே கண்கள் அகல விரிய, கேள்விக்குறியோடு ஏதோவோர் ‘குதர்க்கமானகூட்டமே!’ என்ற ஐயப்பாடோடு இருந்த ஒருசாரார்க்கு அன்று நடந்த மாநபியின் ஜனன தின விழாவும்,தலைவர் கலீபா பு.p. சஹாப்தீன் அவர்களின் விபரமிகு விளக்கவுரையும்வியக்கவைக்கும் விடையாக அமைந்தது.
நிகழ்ச்சி மாலை 6.45க்கு தொடங்கி நிறைவுபெற நள்ளிரவு 12 மணியையும்தாண்டிச் சென்றது. வியக்கத்தரும் வியம் மண்டபத்தை ஜனத்திரள்ஆக்கிரமித்துக் கொண்டது மட்டுமல்லாமல் நின்று பார்க்கவும் இடமில்லாமலிருந்ததுதான்.
துபாயில் இவ்வாண்டு நடந்த மீலாது விழாக்களில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் விழா சரித்திரம் படைத்து விட்டது. இது ஒரு மைல் கல்!
மீலாது விழா என்ற மகுடத்தில் இஸ்லாமியக் கலாச்சாரத்தையும் தாண்டி இன்னோரன்னநிகழ்வுகள் சில மடைகளை மாசுபடுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், முழுக்க முழுக்கஉம்மி நபியின் உயரிய வாழ்வையும் அவர்தம் சிறப்பையுமே நிகழ்வாக்கிய இந்த சபையின் செயல்திறனைமெச்சுகிறேன்.
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் மதரஸா, மற்றும் செயல்பாடுகளை காணொளி மூலம் காட்டியதுஅவர்களின் செயல் திறமைக்கு தத்ரூபமூட்டியது. காணொளிக் காட்சிகளை கச்சிதமாக மெச்சும் வண்ணம் படைத்த மூவேந்தர்கள் திண்டுக்கல்நூருல் ஹக், மதுக்கூர் ஆதம் அப்துல் குத்தூஸ், கிளியனூர் இஸ்மத் ஆகியோர்.
சிறப்புரையாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது கெளரவக் காட்சியானது. துணைப் பொதுச் செயலாளர் அதிரைர்புதீன், மீரான் மொஹிதீன்,இளையாங்குடி அபூதாஹிர் அக்காட்சிக்கு களம் கொடுத்தார்கள்.
கூட்டம் கலையவேயில்லை. நேரம்செல்லச் செல்ல மக்கள் வந்த வண்ணமேயிருந்தார்கள்.
ரசூலுல்லாஹ்வின் சிறப்புகளைக் கேட்டுக்கொண்டிருந்த எவருக்குமே பசியோ தூக்கமோ எட்டியும் பார்க்கவில்லை. ஆனாலும் அங்கே சிற்றுண்டியும், தேநீரும் பரிமாறப்பட்டன.
நிகழ்ச்சி நிறைவைத் தேடிப் போகும் நேரம் நெருங்க, ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் அமீரகம் தழுவிய 33 ஆவது வருட மீலாது விழா சிறப்பு கேள்வி பதில் போட்டியில்வெற்றி பெற்றோருக்கான பரிசு வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது. சுமார் 300 பேர் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள30 பேருக்கு ஆறுதல் பரிசும் 3 பேருக்கு தங்க நாணயப் பரிசும் வழங்கப்பட்டது.
முதல், இரண்டாம்,மூன்றாம் பரிசு பெற்றோர் முறையே...
1. அஹமது ரஸீக்கா (காயல்பட்டணம்) 8 கிராம் தங்க நாணயம்
2. செய்யது அஹ்மத் நஸீர் (வேதாளை) 4 கிராம் தங்க நாணயம்
3. க்ஷி. ரபீக் அஹமது (நாகர்கோயில்) 2 கிராம் தங்கநாணயம்
விழாவின் முழுப் படப்பிடிப்பையும் சங்கமம் தொலைக்காட்சி பதிவு செய்துதொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஆவண செய்தது.
முஹம்மது தாவூத் குழுவினர் வழங்கிய நபி பெருமானாரின் புகழ்பாடும் யாநபிய்யள்ளாஹ்பைத்தோடு நிகழ்வு ஆரம்பமானது. வரவேற்புரையைஇணைப் பொதுச் செயலாளர்கவிஞர் கிளியனூர் இஸ்மத் வழங்கினார். அண்ணலாரின் பிறப்பு முதல்இறப்பு
வரை உம்மத்திகளாகிய நமக்கு அவர்களாற்றியசேவைகள், அவர்பட்டதுன்பங்கள், சந்தித்த சோதனைகள், மாக்களைமக்களாக மாற்றியமை போன்ற உணர்வுமிக்க உரைகளை உள்ளடக்கியது நிகழ்வு.
ஜனாப்களான செய்யிது அலி மெளலானா, கீழக்கரை முஹிப்புல் உலமா அல்ஹாஜ் முஹம்மதுமஹ்ரூப், காயல்பட்டிணம் மெளலவி ஹி.றீ.பு. இஸ்ஹாக் லெப்பை மஹ்லரி,ஆகியோர் அண்ணலாரைப் பற்றிய நெஞ்சை நெகிழ வைக்கும் பேருரை வழங்கினார்கள். காயல்பட்டிணம் ஹி.ய்.பு. இஷாக் லெப்பை மஹ்லரி வாழ்த்துரைவழங்கினார்.
கண்மணிநாயகத்தின் கனிவு வாழ்வு பற்றிய கவிதைகளை கோட்டை குப்பம் முஹையத்தீன்மற்றும் முஹம்மது இத்ரீஸ் ஆகியோர் படித்து மகிழ்ந்தார்கள்.
சாகுல் ஹமீதின் கவிதைப்பாடல் காதுகளை ரீங்காரமிடச் செய்தது. ஏகத்துவஅரபிப் பாடலைப்பாடி சிராஜுதீன் சொக்கவைத்தார். இஸ்லாமிய இன்னிசைப் பாடகர் சிம்மக்குரலோன்தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களின் கனீர் குரல் மண்டபத்தை அதிர வைத்தது. நபி பெருமானாரைப் பற்றி கண்ணீர் மல்க பாடியது எல்லாஉள்ளங்களையும் ஒருகணம் உருக வைத்துவிட்டது.
அன்று நடந்த முழு நிகழ்ச்சியையும் உலகம் முழுதும் பார்க்கும் வண்ணம்ஆன்லைன் நேரடி ஒளிபரப்பை தயார் செய்து பிற நாட்டிலிருப்பவர் களையும் பரவசத்தில் ஆழ்த்தியவர்கவிஞர் கிளியனூர் இஸ்மத் அவர்கள். பார்க்க அழகான பதாகையை அபுல் பர் தயார் செய்திருந்தார், புகைப்படங்கள்க்ளிக் செய்வதில், செய்க் முஹைய்யத்தீன் முந்திக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு இலங்கை எழுத்தாளர், காப்பியக்கோ, காவியநாயகன் டாக்டர் ஜின்னாஹ் ரிபுத்தீனும் வருகைத்தந்திருந்தார்.
நிகழ்ச்சியின் நன்றியுரையை மிகச் சிறப்பாகச் செய்து நன்றிக்குரியவரானார்சபையின் பொதுச் செயலாளர் ஜனாப் பு.ஹி.னி. முஹம்மது யூசூப் னி.பு., அவர்கள். ஸலவாத்தோடும் பைத்தோடும் விழா இனிதே நிறைவு கண்டது.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொய்வின்றி, திறமையாகவும்,அழகாகவும், ஆக்கப் பூர்வமாகவும் ஏகத்துவம் அடங்கியதாகவும்,மெய்ஞ்ஞானம் மிளிர்ந்ததாகவும் நடத்திய துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின்தலைவர், செயலாளர் உட்பட அனைத்து அங்கத்தவர்களையும் நெஞ்சாரப்பாராட்டுகிறேன். இனி, அடுத்து வரும் மீலாது விழாவுக்காக காத்திருக்கிறேன்.
வாழட்டும்!
வளரட்டும்!!
அஞ்ஞானத்தை மறைத்து!
விஞ்ஞானத்தை மிகைத்து!!
மெய்ஞ்ஞானத்தை அரவணைத்து!!