வெளிச்சம் முழுமையாய்....
இறைவனையே அறியாதவர்கள் - இறை நேசர்களை அறிந்து கொள்வது அவ்வளவு சுலபமான வியமல்லவே?
பாலைப் பார்த்திறியாத குருடனும் - தேனைப் பருகியறியாக முடவனும் - பாலைப்பற்றியும்- தேனைப் பற்றியும் எங்ஙனம் விமர்சிக்க இயலும்?
சூரியனைக் கண்ணால் காணும் மனிதனே - அதன் அமைப்பையும் - வனப்பையும்- வரைய முடியாமல் தத்தளித்துக் கொண்டு இருக்கின்றான். இந்நிலையில் சூரியனையே காண முடியாத சில (குருட்டு)சூன்யங்கள் - சூரியனைப் பற்றி உபன்யாசம் செய்வது எவ்வளவு பெரிய வேடிக்கை?
ஏழு வானத்திற்கப்பால் ‘இறையை வைத்து, வணங்குபவர்களாஎழுவானத்து (ஞான)சூரியனாய்த் திகழும் மகான்களை எளிதில் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்?
ஒரு விஞ்ஞானியாக இருந்து சூரியனைப் பாருங்கள்... அதன் மகத்துவம் உங்களுக்குப்புரியும்!
ஓர் உழைப்பாளியாய் இருந்து கதிரவனைப் பாருங்கள்.... அதன் கடினமான உஷ்ணம்உங்களுக்குப் புரியும்.
இரவில் அமர்ந்து - சூரியனை நினையுங்கள் - அதன் அவசியம் உங்களுக்குப்புரியும்..!
உங்களுக்கு சூரியனைப் பிடிக்கவில்லையயன்றாலும், அதன் வருகையை தடுக்கமுடியுமா? இன்னும் சொல்லப் போனால்... உலகத்தின் வாழ்வும் முடிவும்சூரியனின் வருகையினால் தான் என்பதை மறுக்க முடியுமா? ஆம்! காலத்தின் சூரியனாய்த் திகழ்பவர்கள் ஞானவான்கள்! அவர்களால் மட்டுமே ஞான ஒளியைப் பெற முடியும்!
எத்தனை கோடி விளக்குகள் எரிந்தாலும் - சூரியனின் ஒளிக்கு இணையாகுமா? அதே போல - எத்தனைஆயிரம் வணக்கங்கள் புரிந்தாலும் ஞானவான்கள் உதவியில்லாமல் இறையைக் காண முடியாது.
இறையைக் காண விழைவோரெல்லாம் இறை நேசர்களைக் காண முயலுங்கள். சூரியனை முழுமையாகக் காண வேண்டுமானாலும் சூரியனால்மட்டுமே முடியும் காரியமாகும்.