ஞானி சொன்ன ரகசியம்
என்.ஏ.ஸலாம், திருச்சி
ஞானி சொன்னார், “ஒரு நிமிடம், இதோ இந்த ஸ்பூனை உங்கள் வாயால் பிடித்துக்கொள்ளுங்கள்..அதில் இருக்கிற எண்ணெய் சிந்திவிடாமல் மாளிகையைச் சுற்றிப் பாருங்கள்!”
மாளிகையைச் சுற்றிப்பார்த்துவிட்டுஇரண்டு மணி நேரம் கழித்து ஞானியிடம் வந்தார் அந்த மனிதர். இப்போது ஞானி அவரிடம், “என் படுக்கை அறையில் கஃபாவின் நவீன படங்கள்இருந்தனவே, அவை எப்படி இருந்தன?” என்றுகேட்டார்.
“மன்னியுங்கள்!நான் கவனிக்கவில்லை” என்றார் அந்த மனிதர்.
"அது போகட்டும், மாடிக்குச் செல்லும் வழியில் இருந்த திருமறைவாசகங்கள்? கிரேக்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒளி விளக்குகள்?” நூலக ஜன்னல் வழியே தெரியும் பர்மா பஜார் பள்ளிவாசல்?
எல்லாவற்றுக்கும்ஒரே பதில்தான்.... “மன்னியுங்கள், நான் அதைக்கவனிக்கவில்லை.”
இரண்டு மணி நேரம்என்னதான் செய்தீர்கள்?” என்றார் ஞானி.
இதோ இந்த ஸ்பூனில்இருக்கிற எண்ணெய் சிதறாமல் பார்த்துக்கொண்டேன்” என்றார் அந்த மனிதர்.
"போகட்டும்.. இப்போதும்அதே ஸ்பூனோடு எல்லாவற்றையும் சுற்றிப்பாருங்கள்... அனைத்தையும் ரசித்துப் பாருங்கள்”என்று ஞானி அவரை அனுப்பிவைத்தார்.
இந்த முறை ஞானியிடம்வந்த அவர், கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னார். “அது சரி, ஸ்பூனில் இருந்தஎண்ணெய் எங்கே?” என்றார் ஞானி, “மாளிகையைச்சுற்றிப் பார்க்கிற சுவாரஸ்யத்தில் எண்ணெய் சிந்திவிட்டது” என்றார் அந்த மனிதர்.
“எண்ணெய் சிந்தாமல், சுற்றி இருப்பதை ரசிக்கவும் அனுபவிக்கவும் கற்றுக்கொள்ளுங்கள். மாறாக, ரசிப்பதில் கவனம் செலுத்தினால்எண்ணெய் சிதறும் என்று தர்க்கம் செய்யாதீர்கள். அதுதான் சந்தோத்தின் ரகசியம்” என்றார் ஞானி.