• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Mar 2012   »  மவ்லா!

மவ்லா!


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸவ்லம் அவர்களை மவ்லானா எனக் கூறக் கூடாதுஎன்னும் ஊனக் குருடர்களின் கவனத்திற்கு!

 

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “யாராவது கடனையோ வீணாகிப்போகும் பொருளையோ விட்டுச் சென்றுவிட்டால் நான் அவனுக்கு வலியாக இருக்கிறேன்” என்றும்“ஒரு சமூகத்தாரின் மவ்லா அவர்கள் இனத்தைச் சேர்ந்தவனாய் இருப்பான்” என்றும் கூறியிருக்கின்றனர்.  இவைகளைக் கவனிக்கும் போது “மவ்லா, வலி” என்னும் இரு வார்த்தைகளை அல்லாஹு தஆலாவின்மீது சொல்வது போலவே மனிதர் மீதும் சொல்லலாம் எனத் தெரிய வருகிறது.

ரு தடவை நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜைது இப்னு ஹாரிதா (ரலி) அவர்களை நேக்கி “நீர் எங்களதுசகோதரரும் மவ்லாவும் ஆவீர்” என்று கூறியிருக்கின்றனர்!

ஒரு தடவை உசாமாஇப்னு ஜைது (ரலி) அவர்கள் ஸய்யிதுனா அலீ (ரலி) அவர்களை நேக்கி “நீர் எனது மவ்லா அல்ல; நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனதுமவ்லா” எனக் கூறினார்கள்.  அதைச் செவியேற்றநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நான் எவருக்கு மவ்லாவாகஇருக்கின்றேனோ அவருக்கு அலீயும் மவ்லாவாய் இருக்கின்றார்” என்று கூறலாயினர். இவைகளை எல்லாம் கவனிக்கும்போது, அல்லாஹுதஆலா  அல்லாதவர்கள் மீதும் ‘மவ்லா’ என்னும் சொல்லை உபயோகிக்கலாம்என்றே தெரிகிறது.  மேலும் ‘மவ்லா’ என்ற சொல்லிற்குரப்பு, மாலிக்கு, ஸய்யிது என்னும் பொருட்களும்உபகாரி, உரிமை பெற்ற அடிமை, உதவியாளன்,நண்பன், பின்பற்றுபவன், அண்டைவீட்டுக்காரன், சிறிய தந்தையின் புதல்வன் போன்ற பல பொருட்களும்இருக்கின்றன.  அந்தச் சொல்  அல்லாஹ்வின் மீது உபயோகிக்கும் போது அதற்கு ‘ரப்பு’என்று பொருள் கொள்ளப்படும்.  ஏனையோர் மீது உபயோகிக்கும்போது, அவரவர்களுக்குப் பொருத்தமான பொருள் கொள்ளப்படும்.  ஆதலால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்திருநாமங்களோடு அச்சொல்லை இணைத்துக் கூறுவது குற்றமாகாது.  மேலும் அல்லாமா ஸகாவீயும் குஸ்தலானியும் அச்சொல்லைநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருநாமங்களில் ஒன்றாகக் கருதுகிறார்கள்.

ரிபாஹு (ரலி) கூறுவதாவது: ‘ஸய்யிதுனா அலீ (ரலி) அவர்கள் ‘கூபா’ நகரிலிருக்கும்போது ஒரு கூட்டத்தார் அவர்களிடம்வந்து, அஸ்ஸலாமு அலைக்க யா மவ்லானா! என்று கூறினார்கள்.  அதற்கு அன்னார், நீங்கள் அரபு மக்கள் (சுதந்திர மக்கள்) ஆயிற்றே; உங்களுக்குநான் எவ்வாறு மவ்லாவாக முடியும்? என்றனர்.  அதற்கு அவர்கள் “நான் எவருக்கு  மவ்லாவாக இருக்கிறேனோ அவருக்கு அலியும் மவ்லாவாயிருக்கிறார்” என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற நாங்கள் கேட்டிருக்கிறோம்.  ஆதலாலேயே உங்களை மவ்லா என்று அழைத்தோம் என்றனர்.  அவர்கள் திரும்பிச் சென்ற பின்னர் அவர்கள் யாரெனநான் விசாரித்தபோது, அவர்கள் மதீனாவிலுள்ள அன்சாரிகளைச் சேர்ந்தவர்கள் என எனக்குச் சொல்லப்பட்டது.  அவர்களில் ஸய்யிதுனா அபூ அய்யூபு அன்சாரி (ரலி)அவர்களும் இருந்தார்கள் என்பதாம்.

ய்யிது என்னும்சொல் உயர்தர மக்கள் மீது மட்டுமே சொல்லப்படுகிறது.  ‘மவ்லா’ என்பதோ உயர்ந்தோர் தாழ்ந்தோர் ஆகிய  யாவர் மீதும் சொல்லப்படும்.  ஆதலால் ஸய்யிது என்பதை விட மவ்லா என்ற சொல்லை மக்கள்மீது உபயோகிப்பது மிக உத்தமம் என இப்னு ஹஜர் (ரஹ்) கூறியிக்கிறார்கள்.

தகவல் : என்.ஏ.எஸ்., திருச்சி