ஜமாலிய்யா தோட்டத்தில்
அஷ்ஷைகுல் காமில் குத்புஸ்ஸமான் ஷம்ஸுல் வுஜூத் ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
மனிதனோ சிந்திக்கக் கூடியவனாயிருக்க அவனுக்கு உலக ஆசைகளும் அவற்றின் சிந்தனைகளுமே அகத்தேயும் புறத்தேயும் நிறைந்து அவனைஅவை திரைகளென மறைத்துத் தனது ஆதி நிலையான ஏக நிலையைச் சற்றேனும் சிந்திக்க இடமளிப்பதில்லை. “உங்கள் பிள்ளைகளும் பொருட்களும் (உங்களுக்குச்) சோதனையாகும் எனவும் உலக சீவியம் வீணும் விளையாட்டுமாகும்” எனவும் இறை திருமறையிற் கூறியவற்றைச் சிந்தையிற் கொள்ளல் வேண்டற்பாலது.
பேரின்பப்பாதை நூலில்.....
குத்புஸ்ஸமான் ம்ஸுல் வுஜுத் ஜமாலிய்யாஅஸ்ஸையித் கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்
வேண்டாமே!
ரஸூல் நாயகமவர்கள் ஒரு (மக்ரூஹை)பொருத்தக்கேட்டைக்கூட விரும்ப மாட்டார்கள்.
ஆனால்,நாம்பெரியவர்கள், நாம் ஸஹாபாக்கள், நாம் மலக்குகள் செய்யும் அல்லாஹ்வின் வேலைகளைச் செய்து வருகிறோம். எம்மைச் சூழ மலக்குகள் சூழ்ந்து வருகிறார்கள் எனவெல்லாம்தம்பட்டம் அடிக்கிறவர்கள்கூட வெள்ளைச் சுருட்டுப் (சிகரெட்) புகை தலைப்பாகையைப் புடைசூழ துர்க்கந்தம் கமழச் சாரிசாரியாய்ப் பவனி போகும் காட்சியை நாம் கண்ணாரக் காண்கிறோம்அன்றோ.
முரீதின்கள் இவ்வாறான சிறு பொருத்தக் குறைவுகள் எனக்கருதி, நினைவிலும் நனவிலும், உண்டாலும் குடித்தாலும், ஓய்வெடுத்தாலும் ஆய்வில்அமர்ந்தாலும், எழுதினாலும், வாசித்தாலும்,நற்சிந்தனை வரவும், கால்கழுவி வரச் சென்றாலும்இந்த ஒளடதத்தையயடுத்து ஓரிழுப்பு உள்ளேயிழுத்துக் கண்ணாலும், மூக்காலும்,காதாலும், வாயாலும்,அருமருந்தன்னப் புகையை விட்டுப் பெருமை கொள்ளும், அநேகமாக, உயிரையே பறிகொடுக்கும் இத்தகையவற்றைச் செய்யாதிருத்தல்வேண்டற்பாலது