• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Mar 2012   »  சங்கைமிகு இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள்


தொடர்.......

சங்கைமிகு இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்கள்


அறபுத் தமிழில்:  மராகிபுல்மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகு தமிழில்:  கிப்லாஹள்ரத், திருச்சி


ஹள்ரத் உபைதுல்லாஹ் அல்ஹஜவிய் (ரஹ்) அவர்கள், ஒருமுறை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களிடம்,ஹா´மிய் கிளையார்களில் தாங்கள் தாம் ஹள்ரத் அலீ (ரலி) அவர்களைவிட ஹள்ரத் அபூபக்ரு(ரலி), ஹள்ரத் உமர்(ரலி), ஹள்ரத் உதுமான் (ரலி) ஆகியோரை முற்படுத்துகின்றீர் என்றேன்.  அதற்கு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் என் அத்தை - மாமா மகன்.  நான் அப்து முனாஃபின் சந்ததியிலுள்ளவன்.  நீயோ அப்துத்தாரினுடைய சந்ததியிலுள்ளவர்.  வம்சத்தைக் கொண்டு உயர்த்திப் பேசுவது சங்கையயன்றுவருமாகில் அலீயாருடைய சங்கைக்கு உரித்து யானேயன்றி நீரல்ல - நீர் நினைப்பது போல் நானும்இல்லை என்று கூறி கீழ்வரும் பைத்து(பாக்)களைப் பாடினார்கள் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்.   

 

அலியாருடைய வரிசையை எடுத்துப் பேசுவோமேயானால் மடமையாளர்களான கவாரிஜுகள்நம்மை ராஃபிளீ என்கின்றனர்.  ஹள்ரத் அபூபக்ரு(ரலி) அவர்களின் சிறப்பைச் சொன்னால் ராஃபிள்கள் நம்மை தங்கடம் செய்ய முனைவார்கள்.  எங்கிலும் நான் இறக்கும் வரை என்னை மண்ணில் அடக்கஞ்செய்யப்படும் வரை அவ்விருவரை (மாணிக்கங்களை) உகந்து கொண்டும் வரிசையாக்கிக் கொண்டும்இருப்பேன். அதனால் வரும் தங்கடத்தையும் ஒப்புக் கொண்டேயிருப்பேன்.

ஏறு வாகனக்காரனே! நீ மினா பஜாரில் கல்லெறியும் தளத்தில் நின்று ஸஹருநேரத்தில் பெரும் வெள்ளங்கள் இரைச்சல் போட்டு அலைகள் ஒன்றுக்கு மேலாலே ஒன்று தத்தித்தத்தி ஓடுவதுபோல் ஹஜ்ஜாஜிகள் வரும் போது அவ்விடத்தில் நடக்கின்றவர், இருக்கின்றவர்சகலரிடத்தும் சப்தமிட்டுச் சொல்!

 

முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் கிளையாரை உவப்பது (பிரியங்கொள்வது) ராஃபிள் எனச் சொல்வாராகில் மனு, ஜின் இரண்டு கூட்டத்தாரும்சாட்சி சொல்லட்டும் நான் ராஃபி ளென்று!

இமாம் ஷாபிஈ, (ரஹ்) அவர்கள் மீது பொறாமை கொண்ட சிலர், இமாமவர்களை ராஃபிளிய் கூட்டத்தவர் என வி­மப்பிரச்சாரம் செய்து வந்தமையால்தான் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் தங்களின் இனஉணர்வை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று என்பதாகஇமாம் பைஹகீ (ரஹ்) கூறுகிறார்கள்!                            

(இன்ஷாஅல்லாஹ் இன்னும் வளரும்!)