தமிழகத்து வலீமார்கள்
மாப்பிள்ளை லெப்பை ஆலிம்கலீபா, எம். சிராஜுத்தீன்பி.எஸ்.ஸி. திருச்சி
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அப்பா அவர்களுக்கு செல்வமும் செல்வாக்கும்ஏற்படத் தொடங்கியதும் அப்பா அவர்களின் துணைவியார், அப்பா அவர்களைப் பார்த்து, எனக்கு ஒரு காசு மாலை செய்துதாருங்கள் என்று வேண்டினார்கள். உடனே ஆகட்டும்என்றவர்கள், சில மணி நேரத்திற்குள்ளாக அறிவுரைகள் கொண்ட முப்பத்துமூன்று செய்யுட்களைச் சேர்த்து பாமாலை ஒன்றை இயற்றி, அதைத் தம்மனையாளியிடம் கொடுத்தார்கள். இதோ நீ கேட்டகாசு மாலை, இதில் முப்பத்து மூன்று பொற்காசுகள் உள்ளன. அவற்றில் பத்தில் காசு ஒன்றுக்கு நான்கு மணிகள்விதம் நாற்பது மணிகளைப் பதிந்துள்ளேன். இதுஉடலுக்கும் ஆன்மாவுக்கும் அழகைத் தரக் கூடியது. இது என்னுடைய “ஹத்யா” அன்பளிப்பு ஆக ஏற்றுக்கொள்! என்றார்கள்.
அப்புனிதவதியும்அதை மிக்க மரியாதையுடன் இருகரம் ஏந்தி பெற்றுக் கொண்டார்கள். அதை தம் கண்களில் ஒற்றிக் கொண்டு, “நான் விரும்பிய வண்ணம் விலைமதிப்பற்ற மாலையை எனக்கு அன்பளிப்புச் செய்துள்ளீர்கள்”என்று கூறி மகிழ்ந்தார்கள். அதைப் பெற்றுக்கொண்ட அவர்கள், அதை மனனம் செய்ததோடு நில்லாமல் அவ்வறிவுரைகளின்படி நடந்து காட்டினார்கள்.
அந்த அம்மையார்மூலமாக மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கு ஒரு பெண் மகவு மட்டும் பிறந்தது. அதற்கு அவர்கள் “செய்யிது பாத்திமா” என்று பெயரிட்டுமகிழ்ந்தார்கள். அதன்பின் அவர்களுக்கு பிள்ளைஏதும் பிறக்கவேயில்லை. அதனால் மிகவும் கவலைப்பட்டார்கள். உடனே நாகூருக்குப் புறப்பட்டுப் போனார்கள். இவர்களின் மாண்பினை அறிந்த சாஹிப்மார்கள் தங்கள்பாட்டனார் நாகூர் ஆண்டவர் அவர்கள் மீது வரலாற்றுக் கவிதை ஒன்றை அரபியில் பாடித் தரும்படிவேண்டிக்கொண்டார்கள்.
அவர்களின் வேண்டுகோளின்படிஅப்பா அவர்களும் “மனாஹிபுல் மஜீது பீ மனாகிபிஷ் ஷாஹுல் ஹமீது” என்ற மெளலிதை கோர்வைசெய்து கொடுத்தார்கள். இது நிகழ்ந்தது ஹிஜ்ரி1263 ஆம் ஆண்டு ஆகும். அந்த அழகிய மெளலிதைத்தந்த அப்பா அவர்களுக்கு அன்பளிப்புச் செய்யத் தயாரான போது அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். நான் ஒருவேண்டுதலுக்காக இங்குவந்துள்ளேன். பாதுஷா நாயகம் சன்னிதியில் நின்றுஎன் வேண்டுதலைக் கேட்கிறேன் அதற்கு தாங்கள் அனைவரும் ஆமீன் சொன்னால் போதும் என்றார்கள். அதன்படி அப்பா அவர்கள் பாதுஷாநாயகம் ரவ்ளா ரீப் முன், மிக்க மரியாதையுடன்நின்று கொண்டு, “எஜமானரே! எனக்கு இம்மைக்கும் மறுமைக்குமாக இரண்டு ஆண் குழந்தைகள் வேண்டும். அவற்றில் மறுமைக்கான குழந்தை தங்களைப் போன்றிருக்கவேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்கள். அதற்குசாஹிப்மார்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஆமீன் கூறினார்கள்.
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுக்கு நிகரான ஆலிம் எவருமே இருக்க முடியாது. அதோடு ஆன்மீக அறிவும் மிக்கவர்கள். அப்படிப்பட்டவர்கள் பாதுஷா நாயகம் அவர்களிடம் பிள்ளைவரம் கேட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அவர்களுக்குத் தெரியாதா இதை அல்லாஹ் விடம்தான் கேட்கவேண்டுமென்று? ஏன் அவர்கள் அதை பாதுஷா நாயகம் அவர்களிடம்வேண்டினார்கள்? அவர்களுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குஇக்காலத்தில் மூடர்கள் கிளம்பி யிருக்கிறார்கள். அவர்கள் வியத்தில் மக்கள் கவனமாக இருந்து உங்கள் ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அப்படி அப்பா அவர்கள் வேண்டிக் கொண்டு திரும்பிய போது அவர்கள் மனதில்ஓர் எண்ணம் தோன்றியது. நாம் வேண்டும் போதுதங்களைப் போல் ஒரு பிள்ளை வேண்டும் என்று வேண்டினோம். பாதுஷா நாயகம் அவர்களோ திருமணம் செய்து கொள்ளவில்லை. அதுபோல் நமக்குப்பிறக்கும் குழந்தையும் வழித்தோன்றல்இல்லாது போய் விடுமோ என்ற எண்ணம் தான் அது. உடனே திரும்ப பாதுஷா நாயகம் அவர்கள் புனித ரவ்ளா ரீபுக்கு ஓடினார்கள். “ஆண்டவர் அவர்களே! எனக்கு வாழையடி வாழையாக வளர்ந்தோங்கும்வண்ணம் நன்மக்கள் பிறக்க வேண்டும்; அப்படிப்பிறந்தால் அவர்களுக்கு தங்களின் திருப்பெயரையே சூட்டி மகிழ்வேன்” என்று திரும்ப வேண்டிக்கொண்டார்கள்.
அவ்வாறே அடுத்த ஆண்டு அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பாதுஷா நாயகம் அவர்களின் திருப்பெயராகிய அப்துல் காதிர்! என்னும் நாமத்தைச்சூடினார்கள். அதன்பின் அவர்களுக்கு இரண்டுபெண் பிள்ளைகளும் பிறந்தன. வேண்டியபடி பிள்ளைகள்அப்பா அவர்களுக்கு கிடைத்ததா அல்லவா? அந்த வல்லமையை பாதுஷா நாயகத்திற்கு யார் கொடுத்தது? அல்லது அந்த வேண்டுதலை ஏற்றுக் கொண்டதுயார்? யோசித்துப் பார்க்கவும். இறுதியாக அவர்களுக்கு ஹிஜ்ரி 1271 ஆம் ஆண்டு ஓர்ஆண் மகவும் பிறந்தது. அக்குழந்தைக்கு அவர்கள்,“அஹ்மது முஸ்தபா” என்ற அழகிய திருநாமத்தைக் சூட்டினார்கள். ஆனால் அவர்கள் பாதுஷா நாயகம் அவர்கள் சன்னதியில்வேண்டிக் கொண்டதோ பிறக்கும் இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் தங்களின் திருநாமங்களை சூட்டுவேன்என்பதாகும். ஆனால் அவர்கள் அதை மறந்து விட்டார்கள். அதனால் அக்குழந்தைக்கு ஏதாவது ஒரு நோய் வந்த வண்ணமேயிருந்தது. இச்சமயத்தில்
பாதுஷா நாயகம் அவர்கள் அப்பா அவர்கள்கனவில் தோன்றி “செய்யது முஹம்மதே! நீர் என்னிடம் செய்த வாக்குறுதியை மறந்து விட்டீரே”என்று கூறிவிட்டு மறைந்தார்கள். விழித் தெழுந்தஅப்பா பதறிப் போய் உடனே தம் இரண்டாவது மகனுக்கு பாதுஷா நாயகம் அவர்களின் சிறப்புப்பெயரான ‘ஷாஹுல் ஹமீது’ என்ற அழகிய பெயரைச் சூட்டினார்கள். அன்றிலிருந்து அக்குழந்தை சுகம் பெற்றது. மறைந்தகுதுபுமார்கள் வலீமார்களின் வல்லமையைப் புரிந்து கொண்டீர்களா? அவர்களுக்கு எல்லாம்அறிவிக்கப் படுகின்றது. அவர்கள் உயிரோடுதான்இருக்கின்றார்கள். நம் பார்வையை விட்டும் மறைந்திருக்கிறார்கள்அவ்வளவுதான். மடையர்களின் பேச்சைக் கேட்டுமதி மயங்கிப் போய் விட வேண்டாம். கவனம்! உஷார்!
(வருவார்கள்)