• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Mar 2012   »  நல்ல பெண்மணி


மகளிர் பக்கம்                                                                                                                       நெடுந்தொடர் ....

நல்ல பெண்மணி


நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு -  எம். ஆர். எம். முகம்மது  முஸ்தபா)

 

உடை ஒழுக்கம்

 

பெண்கள் வெளியே செல்லும் போது, அவர்களின் அழகைஷைத்தான் அதிகப்படுத்திக் காட்டுகின்றான் என்று சொல்வதுண்டு.  அதனால் தான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களும், “அவள் வெளிப்படுவாளாயின் ஷைத்தான் (அவளைப் பார்ப்பவர்மனத்தில்) இச்சையைத் தூண்டுபவனாக அவனுடன் செல்கிறான்” என்று கூறினர்.  இந்த அபாயத்தை பாத்திமா (ரலி) அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.

ஒரு நாள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அலீ (ரலி) அவர்களுடன்மதீனாப் பள்ளியில் அமர்ந்திருந்தனர்.  அப்பொழுதுஅவ்வழியே சென்ற பெண்மணி ஒருவர், தம் மகளின் வீட்டிற்குள் நுழைவதைப்பார்த்து, “வயது முதிர்ந்த பெண்ணாகத் தெரிகிறதே, யார் அந்தப் பெண்?” என்று அலீ (ரலி) அவர்களிடம் கேட்டனர்.  “அது தங்களின் புதல்வி பாத்திமா தானே” என்று அலீ(ரலி) அவர்கள் கூறினர்.  தம் மகளைத் தம்மால்அடையாளம் தெரிந்து கொள்ள முடியாமல் போனது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குஆச்சரியத்தை அளித்தது.

 

அவர்கள் தம்மகள் வீட்டிற்குச் சென்று, அதுபற்றிக் கூறினர்.  அது கேட்டு பாத்திமா (ரலி) அவர்கள் அல்லாஹ்வுக்குநன்றி செலுத்தினார்கள்.  “தந்தையே! ‘நான் வெளியில்செல்லும் போது, என்னை முதிய பெண்போலக் காட்டு என்று அல்லாஹ்விடம்இறைஞ்சி வந்தேன்.  அந்த இறைஞ்சுதலை அல்லாஹ்ஏற்றுக் கொண்டான் என்று உணர்ந்து கொண்டேன்” என்று கூறினார்கள்.

நீங்கள் வெளியே செல்லும்போது, உங்கள் உடலை உடையால் மறைத்துக் கொள்ள வேண்டும்,அந்த உடை மெல்லியதாக இருக்கக் கூடாது.  ஏனெனில், மெல்லிய உடை உடம்பைமறைப்பதற்குப் பதிலாக உடம்பின் அமைப்பையும், உடம்பின் நிறத்தையும்வெளிப்படுத்தக் கூடியதாகும்.  ஆனால்,மெல்லிய உடை அணியும் ஆசை பெண்களிடம், அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலேயே இருந்திருக்கிறது.  ஒரு நாள் அஸ்மா (ரலி) அவர்கள், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கும் இடம் வந்தனர்.  அப்பொழுது அவர்கள் மெல்லிய ஆடை அணிந்திருந்தனர்.  (அது கண்ட) அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், தங்களின் முகத்தைஅவர்களை விட்டும் திருப்பிக் கொண்டு, “அஸ்மாவே! நிச்சயமாக, பெண்கள் பூப்பெய்திவிடின்,அவர்களின் இது, இது தவிர (வேறு எதனையும் பிறர்)பார்த்தல் கூடாது” என்று கூறி, தங்களின் முகத்தையும்,கைகளையும் காட்டினர்.  இதனை அறிவிப்பவர்கள்அஸ்மா (ரலி)  அவர்களின் சகோதரி ஆயிஷா (ரலி)அவர்கள் ஆவர்.

முகலாய இளவரசி ஒருவர், மிகவும் மெல்லிய உடை அணிந்து கொண்டு தம் தந்தைமுன் வந்தார்.  அவரைப் பார்த்து அவரின் தந்தை,“போய் ஆடை அணிந்து கொண்டு வா!” என்று கூறினார்.  ஆடை அணிந்து கொண்டு தானே வந்திருக்கிறேன்” என்றார்அந்த இளவரசி.  ஆடை அணிந்திருந்தாலும் அணியாததுபோல் காட்டக் கூடிய ஆடையை அவர் அணிந்தார் என்பதைத்தான் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.“மெல்லிய ஆடையை அணியும் பெண், அவள் ஆடை அணிந்திருந்தாலும் கூடநிர்வாணமாக இருப்பவளே” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கின்றனர்.  வரும் காலத்தில் இவ்வித ஆடை அணிந்த பெண்கள் அதிகம்இருப்பர் என்பதை அறிந்துதான் அவர்கள், “ஒரு காலம் வரும்.  அந்தக் காலத்தில் பெண்கள் ஆடை அணிந்த பின்பும்,நிர்வாணமாக இருப்பதைப் போலவே தோற்றம் அளிப்பார்கள்” என்றும் அறிவித்திருக்கின்றனர்.  மேலும் அவர்கள் மெல்லிய ஆடை அணியும்பெண்களைச் சபித்தும் இருக்கின்றனர்.  ஆண்களும் கூட மெல்லிய ஆடை அணிவது விரும்பத்  தக்கதல்ல. “ஒரு மனிதன் மெல்லிய துணிகளை அணிய ஆரம்பித்து விட்டாலே அவனுடைய மார்க்கப் பற்றுமெலிந்து விட்டது என்பதே அதன் பொருள்” என்று ஓர் அறிஞர் கூறியிருக்கிறார்.

இறுக்கமான உடையும் உடம்பை வெளிப்படுத்தக் கூடியதேயாகும்.  அதனால் தான் அந்தக் காலத்தில் பெண்கள், தொள, தொளப்பாக ஆடை அணிந்து வந்தனர்.  ஆனால்இப்பொழுது நிலைமை முற்றிலும் மாறிப் போய்விட்டது. உடம்போடு ஒட்டிக் கொண்டது போன்ற சட்டையையும், அதே போன்றசேலையையும் இப்பொழுது பெண்கள் அணிந்து கொள்கின்றனர்.  பெண்கள் அதிகம் வேலை செய்யும் ஒரு தொழிற்சாலையில்பின்வரும் அறிக்கையைக் கொண்ட அட்டை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது : “பெண்களே! நீங்கள்தொள, தொளப்பாக ஆடை அணிந்திருந்தால் இயந்திரங்கள் பக்கம் போகும்போதுஎச்சரிக்கையாயிருங்கள்! நீங்கள் இறுக்கமான ஆடை அணிந்திருந்தால் ஊழியர் அருகில் போகும்போது எச்சரிக்கையாயிருங்கள்!” இறுக்கமான உடை பெண்களின் அங்கங்களைக் காட்டக் கூடியதாய்இருப்பதால் தான், அதனை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்அதிகம் வெறுத்தார்கள். இறுக்கமான உடை, அடக்கமான உடையுமாகாது.  அது அசெளகரியமான உடையும் ஆகும்.  அஃது உடல் நலத்திற்கு ஊறு  செய்யக் கூடியது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.