• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Mar 2012   »  அமுத மொழிகள்


அமுத மொழிகள்


சங்கை மிகு செய்கு நாயகம் அவர்கள் மொழி பெயர்த்து விளக்கம் எழுதிய துஹ்ஃபத்துல் முர்ஸலா நூலிலிருந்து எடுக்கப்பட்டது. அறபு மூலத்துடன் படிக்க விரும்புவோர்மூல நூலைப் பார்க்கவும்.)

 

(இந்தக்கல்வியை விரும்பிக்கற்க உற்சாகம் கொள்ளும்) மாணவனே! அல்லாஹுத்தஆலா அளவில் நெருங்க நீ விரும்பினாயானால் முதலில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு வழிபடுவதைப் பலமாய்ப் பற்றிக் கொள்.

சொல்லாலும் செயலாலும்- வெளியாலும் உள்ளாலும் (பற்றிக்கொள்)பின்னர், இரண்டாவதாகதனித்த உள்ளமையில் அயராது பயிற்சி செய்க.

அதுவே கலிமத்துத்தய்யிபா வாகிய உள்ளத்தைச் சுத்தி செய்யும் ஒரு மொழியின் கருத்தின் தாற்பரிய மாகும். (பயிற்சியின்போது)  உளூவின் நிபந்தனைகள் தேவையில்லை.

நீர்  வுளூஉ  செய்தவராக இப்பயிற்சியைச் செய்வீரானால் அது மிகவும் மேலானதாகும்.

முராகபாவிலே ஒரு  நேரத்தை குறிப்பிட்டுச் சொந்தப்படுத்திக் கொள்ளவேண்டியதுமில்லை.

முராகபாவிலே புகுவதிலும் வெளியாவதிலும் தன்னைப் பேணிக்கொள்தலின்றி ஒரு நேரம் குறிப்பிடல் அவசியமில்லை.

கலிமத்துத் தய்யிபாவின் எழுத்துகளைப் பேணுதலும் (அவசியம்)  இல்லை.  எனினும் கருத்தை மட்டுமே தவிர நீர் எதையும் பேணவேண்டாம்.

நின்றாலும் இருந்தாலும் நடந்தாலும் படுத்தாலும் அசைந்தாலும் ஒடுங்கியிருந்தாலும் (நீர்) குடித்தாலும் உண்டாலும் (முதலாம்) எல்லாநிலைமையிலும் (முராகபாவிலேயே) நிலையாயிருத்தல் வேண்டும்.

முராகபாவின் பாதையாவது, முதலில் தான் எனும் அகந்தையை இல்லாதாக்கிவிட(அழித்துவிட)லாகும்.

உமது யதார்த்தம் இன்னும் உமது மறைபொருள் ஹக்கு ஸுபுஹானஹு வதஆலாவாகிய ஹக்கல்லாததாயிருப்பதே யான் எனும்அகந்தையின் கருத்தாகும்.

(அதாவது, தான் எனும் அகந்தையுடையவன் இடத்து ஹகீகத் எனும்யதார்த்தம் அல்லது அதுவே யானதென்னும் தத்துவார்த்தமும்  உட்கருத்தும்  இரா என்பதாகும்.)

தான் எனும் அகந்தையைத் தவிர மற்ற எதையும் இல்லாதாக்கிவிடாதே.

 

(அதாவது, உன்னிடத்தில்அகந்தையே இருக்கக் கூடாது. அஃதொன்றைத்தவிர ஹக்கின் நாட்டமே உன்னிடத்திருக்க வேண்டும்.)

தத்துவார்த்தமும் உள்ளமையுமான அனைத்தும் அதுவே.  அதுவன்றி வேறில்லையயனும்) அதுதான், லாயிலாஹின் முக்கிய மூல கருத்தாகும்.

இலாஹ் இல்லை.  சிருஷ்டிகள் ஒவ்வொன்றாய் எதுவும் இறை அல்ல.


(இவ்வாறு இருப்பின்)

பின்னர் இரண்டாவதாக, உம்முடைய உள்ரங்கத்திலே - உள்ளமையிலே ஸுபுஹானஹுவதஆலாவாகிய ஹக்கு நிலைபாடடையும்.

இல்லல்லாஹ்- அதுவேதான் இல்லல்லாஹ் என்பதன் மூல கருத்தாகும்.

அனைத்துமாய் பூரணமாய், பிரித்தற்கரியதாய்க் கலந்திருக்கும் இறையைத்தவிர.

நீர், வுஜூத் ஒன்றென்றும் அஃதல்லாது காணப்பட்ட பொருள் உண்மையிலே அதில் உள்ளதல்ல என நீர் சொன்னீரானால்

எந்தப் பொருள் நீக்கப்படும்? எந்தப் பொருள் நிலைத்து நிற்கும்? படைப்பினத்தால் உண்டான அதல்லாத து (எனும் சந்தேகம், இன்னும்இரண்டு  எனும்  சந்தேகம் இதுதான் என நீ சொன்னாய். இரண்டெனும் தன்மையுடையவர்கள். (இவர்கள். அதாவது, சிருஷ்டி, சிருஷ்டிகருத்தா எனும் இரண்டு தன்மைகளை யுடையவர்கள். அவர்கள் சிருஷ்டி கருத்தாவை வுஜூத் எனவும் சிருஷ்டி அதல்லாததெனவும் கூறுவர்.  இதிலே வேறுபாடுகள் இருக்கின்றமையால் இது சந்தேகத்திற்குரியதும்  உண்மைக்கு முரணானதுமாகும்.)


இந்தச் சந்தேகம் அழிவுக்குரியதாகும். (ஹக்குக்கு (மாற்றமானதாகும்) பொய்யானதாகும்)  முதலிலேயே இச்சந்தேகத்தை நீக்கிவிடுதல் உமக்கு அவசியமாகும்.

பின்னர் இரண்டாவதாக, ஹக்கு ஸுபுஹானஹு வதஆலா உமது உள்ரங்கத்திலே தரிபடுவான்.

வஹ்தத்துல் வுஜூதையறியத்தேட்டங்கொண்டவனே.  உமது உள்ரங்கத்திலே ஹக்கில்சந்தேகம் அற்றுப்போய் உமது நிலைமை அல்லது தரம் மிகைத்துவிட்டதானால் ஹக்கின் கொடையல்லது அருள் உன்மீது உண்டாகும். (ஹக்குத் தன்னையே உன் தன்னில் காட்சி காண்பாய்.)

நீ சந்தேகமான நானெனும்அகந்தையை நீக்கிவிட உனக்கு சக்தியில்லையானால், ஸுபுஹானஹுவதஆலாவாகியஹக்கினுடைய நிலைபாடானது உன்னிலே மீதியாவில்லை. (மீதியாக மாட்டாது) (அதாவது, அகந்தை உன்னிலிருந்து நீங்கி கல்பிலே ஹக்குநிலைத்து நிற்க மாட்டாது.)

(ஆதலால், ஹக்கை அறியவும் ஷிர்க்காகிய இணையிலிருந்து நீங்கவும் பூரண ஹக்கின்  அன்பைப் பூரணமாய்ப்பெறவும் மனிதனது தாற்பரியத்தையறிந்து கொள்ளவும் தன்னைச் சூழ்ந்திருப்பவைகளையும் தன்னையும், தான் என்ற ஹக்கிலிருந்து வேறுபட்டதான எண்ணத்தை நீக்கி அனைத்தும் பூரணமாய் ஹக்கே எனக் கொள்ளவும் “தான்“ என்னும் அகந்தையைநீக்கிக் கொள்ள வேண்டும். இன்றேல் கை சேதமே! முடிவு மருட்சியே! அங்கும் இங்கும் நிம்மதி இல்லையே!!!

நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் இந்தத் தகைமையை (இந்தத் தானத்தை) அல்லாஹு தஆலா நமக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக! ஆமீன். (ஏற்றுக்கொள்வாயாக!)

அகிலத்தாரை (அகிலமனைத்தையும்) படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்வே!
அனைத்தும் ஹக்கே!  எல்லாம்ஹக்கின் தோற்றமே!!

இதைத் தூசிப்பவர்களே ஹக்கை உணர்ந்து அறியும் ஆற்றல் இல்லாதவர்கள். அல்லாஹுவைமேலே வைத்துத் தனி மனித வழிபாடு  செய்கிறவர்கள்.  அல்லாஹ்வுக்காகச் சற்று சிந்தியுங்கள்.  உங்கள் இருண்ட கல்பை ஹக்கு ஒளிமயமாக்கப் போதும்.தனிமனித வணக்கம் செய்யாமல் வஹ்தத்துல் வுஜூதை அறிந்தவர்களை அணுகிக் கொடிய சிர்க்கில் நின்றும் நீங்கி விடுங்கள்.  இல்லையானால் கொதி நரகு உங்களை விழுங்க அகன்ற வாயைத்திறந்து கொண்டிருக்கும். 

வலில்லாஹில் ஹம்து. ஸல்லல்லாஹுஅலா மள்ஹரில் அதம். வஸல்லம் அலைஹி வஆலிஹி வஸஹ்பிஹி!