• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012  »  Mar 2012   »  அண்ணல் நபி அவர்களின் அற்புத வரலாறு


அண்ணல் நபி அவர்களின் அற்புத வரலாறு

 

அத்தியாயம் : 87    இப்னு மீரான் ஹக்கிய்யுல் காதிரிய்-

 

ஓய்ந்தது உஹது யுத்தம்

 

அண்ணல் எம்பெருமானார் அவர்களின்ஆணையை மீறிய தோழர்களால் ஏற்பட்ட குளறுபடியில் உஹது யுத்த களமே தட்டுத் தடுமாறிப் போய்விட்டது.  அண்ணலாரின் ஆணையை மட்டும் அன்று அவர்கள்ஏற்று நின்றிருந்தால் உஹது யுத்தத்தின் போக்கே வேறு விதமாக இருந்திருக்கும்.  பத்ரு யுத்தத்தின் தோல்வியை எதிரிகள் இப்போரில்பழித்தீர்த்துக் கொண்டது போல்  அமைந்து விட்டது.  ஆயினும் யாருக்கும் வெற்றி, தோல்வி என்று சொல்லமுடியாதபடி ஒருவாறாகப் போர் ஓய்ந்து போனது. காயமுற்ற பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தம் தோழர்களுடன் மெல்ல மெல்ல   உஹது மலை மீது ஏறி ஒரு பாதுகாப்பான இடத்திற்குச்செல்ல ஆயத்தமானார்கள்.  அப்படி ஏறிச் செல்லும்போது ஒரு சிறிய பாறையின் மீது காலை வைத்து ஏற முயன்றார்கள்.  பலஹீனத்தால் அவர்களால் அதில் ஏறிட முடியவில்லை.  அப்படியே தள்ளாடி விட்டார்கள்.  சுற்றி இருந்தவர்கள் குலையயல்லாம்  நடுங்கிப் போய்விட்டது.  அவர்களின் அருகாமையிலிருந்த தல்ஹா (ரலி) அவர்கள்தம் மீது விழுந்திருந்த கொடூரமான வெட்டுக்காயங்களின் வலியையும் பொருட் படுத்தாமல் அப்படியேகுனிந்து அவர்களைத் தன் முதுகின் மீது ஏறிச் செல்ல ஏதுவாக நின்று கொண்டார்கள். அண்ணலாரும்தங்களின்அருமையான பாதங்களை அவரின் முதுகில்வைத்து ஏறி உயரே சென்று விட்டார்கள்.  எண்ணிப்பாருங்கள்! முடியுமா நம்மால்?அதனால் தான் “ஸஹாபாப் பெருமக்களுக்கு யாரும் நிகராக முடியாது” என்றுசொல்லப்பட்டது.  உடனே அருமை நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர் பெருமக்களைப் பார்த்து “ஓ! என் தோழர்களே! போரில் வீரமரணம் அடைந்த ஒருவர் உலகில் நடமாடுவதைப் பார்க்க வேண்டுமென்றால் இதோ என் தோழர் தல்ஹாவைப்பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்கள். தல்ஹா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட வெட்டுக் காயங்களால்கிடைக்காத பாக்கியத்தை அண்ணலாரின் திருப்பாதத்தைத் தன் முதுகின் மீது தாங்கியது கொண்டுபெற்றுக் கொண்டார்கள்.  அதுவும் திருநபி யவர்களின்அமுதவாயால் ­ஹீதுடைய அந்தஸ்து கிடைத்து விட்டது.  யாருக்குக்கிடைக்கும் இப்படிப்பட்ட சந்தர்ப்பமும் அந்தஸ்தும்? அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும்.

அண்ணலார் அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தை அடைந்ததும்.  ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் தங்கள் கேடயத்தில் அங்குதேங்கிக் கிடந்த தண்ணீரை அள்ளிக் கொண்டு வந்தார்கள்.  பெருமானாருக்கோ சொல்ல முடியாத தாகத்தால் அவர்களின்தொண்டை வரண்டுபோய் விட்டது.  எச்சிலைக் கூடவிழுங்க முடியவில்லை.  இருப்பினும் அந்தத் தண்ணீர்சுத்தமாக இல்லை.  அதன் நாற்றத்தால் அதை அவர்களால்குடிக்க முடியவில்லை.  ஒரு மடக்காவது குடித்துவிடலாம் என்று மனம் சொன்னாலும் அதற்கு ஏற்றாற் போல்அந்தத் தண்ணீர்  இல்லை.  ஆம் அந்தத் தண்ணீருக்கு அருமை நாயகத்தின் தொண்டையைநனைப்பதற்கு கொடுத்து வைக்க வில்லை.  ஒருவாறுசமாளித்துக் கொண்டு அந்த நீரினால் முகத்தில் படிந்திருந்த இரத்தத்தை மட்டும் மெல்லக்கழுவிக் கொண்டார்கள்.  அப்போது சூரியன் உச்சிக்குமேல்நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.  அதை உணர்ந்தஅண்ணலார் அவர்கள் லுஹர் தொழுகையை நடத்தினார்கள். அனைவரும் கூடி நின்று தொழுது முடித்தார்கள்.  எவ்வளவு தங்கடத்திலும் தொழுகையை அவர்கள் விடவில்லைபார்த்தீர்களா? நாமாக இருந்தால்போதும்.  உம்...உம்.. என்று முணங்கிக் கொண்டுதொழுகையைத் தள்ளிப் போட்டு விடுவோம்.

தொழுகைக்குப்பின் அண்ணலார் அவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து சற்று இளைப்பாறினார்கள்.  சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிப் போனார்கள்.  சிலர் அவர்களைச் சுற்றி நின்று கொண்டு காவல் புரிந்தார்கள்.  மறுபக்கம் நடந்த கொடுமை, கொடூரம் தான் வாய்விட்டுச்சொல்ல முடியாதது.  ஈவு, இரக்கம் அறவே இல்லாத பாவிகள்.  யுத்தகளத்தில் மாண்டுபோன, காயமுற்ற உடல்கள் பரவலாகக் கிடந்தன.  மக்கத்து குறை´ காபிர்படையினருக்கு பெரிய உயிர்ச் சேதம் ஏதும் இல்லை. மொத்தம் மூவாயிரம் பேரில் இருபத்திரண்டு பேரே உயிரிழந்திருந்தனர்.  ஆனால் முஸ்லிம் படையிலோ இழப்பு அதிகம்.  கிட்டத்தட்ட அறுபத்தைந்து பேர் ­ஹீதாகி இருந்தனர்.  அவர்கள் யார் யார் என்று எதிரிகளுக்குச் சரியாக அடையாளம்  கண்டு கொள்ள முடியவில்லை.  அவர்களில் முஹாஜிர்களான மூவர் உடல்களை மட்டும் அடையாளம்கண்டு கொண்டனர்.  ஒன்று மாவீரர் ஹள்ரத் ஹம்ஸா(ரலி) அவர்களின் புனித உடல்.  இரண்டு முஸ்அப்(ரலி) அவர்கள். மூன்றாவது அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி). யுத்த களத்தில் சிதறிக் கிடந்தஉடல்களில் சிலர் குற்றுயிராகக் கிடந்ததை அவர்கள் காணவில்லை.  அப்படிப் பட்டவர்களால் உயிர் இருந்தும் அசைய முடியாதபடி துடித்துக் கொண்டிருந்தவரில் ஒருவர் ­ம்மாஸ் (ரலி). அந்த மாபாதகர்களில்சிலர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித உடலைத் தேடித் திரிந்தனர்.  எப்படி இருக்கிறது அவர்களின் கொலைவெறி? அப்படி வரும் போதுஅடிமை வஹ்´யின் கண்களில் பட்டது  ஹள்ரத் ஹம்ஸா (ரலி)அவர்களின் புனித உடல். அதன் அருகே ஓடினான் வஹ்´.  அப்புனித உடலில் வயிற்றை கீறினான் அவர்களின் ஈரலைப் பிடுங்கிஎடுத்தான்  பாவி.  அப்படியே இராட்ச´ ஹிந்தாவிடம் சென்று, “இதோ உன் தந்தையைக்கொன்ற ஹம்ஸாவின் ஈரல்.  எனக்கு என்ன சன்மானம்தரப் போகிறாய்?” என்றான். உடனே அவள், “என் பங்கிற்குக் கிடைக்கும் யுத்தப் பொருட்கள்அனைத்தும் உனக்குத்தான்” என்றாள். அந்த மாபாதகி ஹள்ரத் ஹம்ஸா (ரலி) அவர்களின் ஈரலைவாயால் கடித்தாள்.  செய்த சபதம் நிறைவேற அதில்ஒரு துண்டைக் கடித்து துப்பி விழுங்கினாள். மற்றவற்றை தூ... என்று துப்பினாள். அத்தோடு நிற்கவில்லை அவள். “எங்கே? ஹம்ஸாவின் உடலைக் காட்டு எனக்கு”என்றாள்.  அவர்களின் உடம்பை அடைந்ததும் அந்தக்கொலை வெறியாள் கத்தியால் அப்புனித உடலிருந்து மூக்கு, காது என உறுப்புகளைவெட்டிச் சிதைத்தாள்.  அந்தச் சமயம் அவள் கழுத்திலும்காலிலும் அணிந்திருந்த ஆபரணங்களைக் கழற்றி வஹ்´யிடம் அன்பளிப்பாகக் கொடுத்தாள்.  தம்முடன் வந்திருந்த மற்ற பெண்களைப் பார்த்து, “இம் போங்கள்.  எல்லா சடலங்களையும் வெட்டி முடமாக்குங்கள் என்vறள்.  அப்படி வெட்டப்பட்ட உறுப்புகளை மாலையாக கழுத்தில்போட்டுக் கொண்டு வெற்றிக் கீதம்  பாடி ஆடினார்கள்.  என்ன கொடுமை என்ன கொடுமை? (இப்படிப் பட்டகொடியவளை மக்கா வெற்றியின் போது மன்னித்தார்களே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.  இப்படிச் செய்ய யாரால் முடியும்?)

(தொடரும்)