• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai » 2012  » Mar2012»  மஹானந்த பாபா

கீழக்கரை மஹானந்த பாபா முஹம்மது அப்துல் காதிர் வலிய்யுல்லாஹ் (ரலி) அவர்களின் அநுபூதி விளக்கம்

கீழக்கரை மஹானந்த பாபா முஹம்மது அப்துல் காதிர் வலிய்யுல்லாஹ் (ரலி) அவர்களின் அநுபூதி விளக்கம்


ஒரே சக்தியே நான்.  அதன் வடிவம் அன்பு.  இது பிரிக்க முடியாதபடி எல்லாத் தேகங்களிலும் வசித்து கையாண்டு வரக்கூடியதே யாகும்.  தூலரீதியாக நாம் எல்லோரும் தோற்றத்தில் பலவாகக் காணப்படினும் தூல, சூக்கும, காரண, காரியங்களால் இணைக்கப்பெற்று பரிசுத்த பந்தங்களில் ஒன்றுபட்டவரென்று அறிந்துகொள்ளுங்கள்.  எது வாக்கால் சொல்லப்படாததோ எதனால் வாக்கு விளக்கப்படுகிறதோ அதுவே நான்.  எது மனத்தினால் எண்ண முடியாததோ எதனால் மனம் எண்ணப்படுகிறதோ அதுவே நான்.  எது கண்ணால் பார்க்கப்பட முடியாததோ, எதனால் கண்கள் பார்க்கப்படுகிறதோ அதுவே நான்.  எது காதால் கேட்கப்படாததோ, எதனால் காது கேட்கப்படுகிறதோ அதுவே நான் என்று உணருங்கள்.  இதுதான் அணு - மகத்து.  இந்த ஜகத்து எல்லாம் நான் என்பதில் அடங்கி இருக்கிறது! இந்த உண்மையை எல்லோரும் தெளிந்து அனுபவியுங்கள்! அவ்வாறு ஆனால், எல்லாச் சந்தர்ப்பங்களிலும், உன்னத நிலையினின்றும் நீங்கள் லட்சியத்தையும் பிரமானந்தத்தையும் அடைவீர்கள்!


தன்னைத்தான் அறிவதே ஞானம் -
         அதுவன்றேல் தங்குமோ மோனம்
   என்னைத்தான் ஏற்பதே தியானம் -
         நிகரில்லா இதுவே தீர்மானம் 



காலத்திற்குக் காலம் மானிட சுபாவம் அநேகரிடத்து மாறிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்.  அது நன்மையின் பக்கம் திரும்பி அவனைத் திருத்துவதாயின் அஃது அவனுக்கும் மற்றையோருக்கும் நன்மை பயக்கும்.  ஆயினும் மானிட உள்ளம் காற்றிற்புரண்டு வரும் இறகைப் போல் இருக்குமாதலின் அநேகரின் உள்ளங்கள் நல்லதன் பக்கமே திரும்பாது கொடிய பாபத்தின் பக்கம் நிமிடா நிமிடம் புரண்டுபோவதைக் காண்கிறோம்.  இதனாலேயே அவன் உள்ளம் புரண்டு கருள்வதால் அவன் முகமும் இருண்டு கருண்டு முகவழகும் மாறி அழிவின் பக்கம் திரிகின்றவனாகின்றனன். பணத்துக்காக இன்று உண்மையையே மாற்றிப் பொய்யான வேத சட்டங்களை மக்களுக்குப் புகட்டி அவர்களை வழிகெடுத்து வருகின்றனர். பணத்துக்காக இன்று உண்மையையே மாற்றித் தாம் செய்வது தவறு என்பதை உணர்ந்து தந்தையையும் தாயையும் குடும்பத்தையும் பொய்ப் பிரச்சாரங்களால் மாற்றி அழிவுப்பாதையில் இழுத்துச் செல்கின்றனர்.  என்னே இந்நிலை! ஐயகோ! 


எக்கலையைக் கற்று எந்நிலையடைந்தபோதும் நாம் நம்மையறியும் கலையாகிய ஞானக் கலையை யறிதல் மிக அவசியமாகின்றது.  ஞானமே நம்மைப் பூரண மனிதராக்க வல்லது.  ஞானமே சர்வ ஆசாபாசங்களிலிருந்தும் நம்மை நீக்கிக் கொள்வது.

ஒவ்வொன்றனுக்கும் உட்கருத்து, புறக்கருத்து என இருபகுதிகள் உள.  வேதமும் இவ்வாறே இரு கருத்துக்களையுடையது.  இவற்றைக் கர்மம், ஞானம் என வகுக்கலாம்.  கர்மம் வெளிக்கருத்தையும், ஞானம் உட்கருத்தையும் வழங்கி நிற்பன.  இவற்றை நான்கு படிகளாகப் எனவும் அவற்றை அடைவதன் மூலமே மோட்சமுண்டு என்பதையும் நன்குணர்தல் வேண்டற்பாலது.பகுத்து அரபி மொழியில் ­ரீஅத், தரீகத், ஹகீகத், மஉரிபத் எனவும், தமிழில் சரியை, கிரியை,  யோகம், ஞானம் எனவும் கூறுகின்றோம்.  வெளிப்படை வேத அநுட்டானங்களான கர்மங்களை மட்டும் செய்தவரும் கர்மயோகிகளான நம்மிற் பலர் சரியை வழியாகிய வெளிப்படைக் கருத்தை மட்டும் பின்பற்றுகிறவர்களாவர்.  இவர்களோ வெனில் பிரவிருத்தி தர்மத்தை மட்டும் பின்பற்றிச் செல்வோராவர்.  இன்னவர்கள் இதன் மேற்படிகளான உட்கருத்துக்களை உணர்த்தும் கிரியை, யோகம், ஞானம் முதலாம் படிகளுமுண்டு

- பேரின்பப் பாதை நூலில் சங்கைமிகு ய­ய்கு நாயகம் அவர்கள் -