கெளதுஸ்ஸமான் அஸ்ஸையித் ஜமாலிய்யா மௌலானா (ரலி)
பெயர் : ஆத்ம ஞானச்சுடர், அல் ஆரிபுஸ் ஸமதானிய் வல் வலிய்யுல் வஹ்தானிய்வல் கெளதுல் பர்தானிய் அஷ்யய்கு அஸ்ஸையித் முஹம்மத் மெளலானல்காதிரிய்யுல் ஹஸனிய்யுல் ஹா´மிய்யு (ரலி)
உதயம் : இன்றைக்கு சுமார் 169 ஆண்டுகளுக்கு முன், ஹள்ரத் கெளதுல்அஉளம் (ரலி) அவர்களின் மறைவுக்கு சுமார்703 ஆண்டுகளுக்குப்பின், ஹிஜ்ரி 1264 முஹர்ரம் பிறை 2 , ஞாயிற்றுக் கிழமை.
இடம் : பஃதாதுநாட்டில் பாபுஷ்ஷைகு என்ற இடத்தில் உள்ள பைத்துஷ் ஷிரஃபாஇல்லம்.
பாரம்பரியம் : நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் தலைமுறையில், ஹள்ரத் கெளதுல்அஉளம் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்களின்திருப்பேரர்.
தந்தை : இமாமுல் அஉளம் அஸ்ஸையித் ஜமாலுத்தீன் மெளலானா அல் ஹா´மிய் (ரலி) அவர்கள்.
தாயார் : நிறைந்த கராமாத்துக்களையுடையஸய்யிதா ஆபிதா (ரலி) அவர்கள்.
கல்வி : சிறுவயதில் ஆரம்பக் கல்வியாம் அறபுக் கல்வியை பக்தாதிலேயே கற்றுத் தேர்ந்து, வேதநெறிமுறையாம்சட்டக் கலையும் (பிக்ஹு) கசடறக்கற்று, ஃபகீஹாகவும் (வேதச்சட்டஅறிவியல் ஞானி) ஷாஇராகவும் (கவிஞர்) விளங்கினார்கள்.
பணி : பஃதாதில்யுத்தத் தளகர்த்தராகப் பணிபுரிந்தார்கள்.
சிறப்பு : காதிரிய்யாத் தரீக்காவுக்கு தம் ஆத்ம ஞானத் தந்தை அஸ்ஸையித் ஜமாலுத்தீன் மெளலானா அல் ஹா´மிய் (ரலி) அவர்களிடமும், ஜுப்ரிய்யாத் தரீக்காவுக்குகாயல் பட்டினத்தைச் சேர்ந்த அஷ்ஷைகு உமருல்காஹிரிய் (ரலி) அவர்களின் திருப்புதல்வர் குதுபு அப்துல் காதிரில் காஹிரிய் அவர்களின்திருப்புதல்வர் அஷ்ஷைகு முஹம்மத் ஸாலிஹ் (ரலி)அவர்களிடமும், நக்பந்திய்யா தரீக்காவுக்கு அஸ்ஸையித்மஹ்முதுல் புகாரிய்யுன் நக்பந்திய் (ரலி) அவர்களிடமும், ஷாதுலிய்யாத் தரீக்காவுக்கு அஷ்ஷைகு ஹுமைஸரிய்யுஷ் ஷாதுலிய் (ரலி) அவர்களிடத்தும் பைஅத்தும் (ஞான தீட்சை) கிலாபத்தும் (உத்தராதிகாரம்) பெற்றுக் கொண்டார்கள்.
பிரயாணம் : ஓய்வு பெற்ற பின்னர் திருத்தலமாம், பஃதாதை விட்டுவேறு பலநாடுகளுக்குஞ் சென்று இறுதியாகப் பரமார்த்தஞானப் பரமானந்தப் பெரும் பதியாம் பாரத நன்னாட்டை வந்தடைந்தார்கள். பரந்து விரிந்த பாரதத்திலே, பற்பல ஊர்களுக்கும்சென்று அவ்வவ்வூர்களிலே பலகாலம் தங்கி வேத மறை பொருளாம் திவ்விய ஞான விளக்கம் செய்தார்கள். இவ்வண்ணமே ஈழ மணித்திரு நாட்டிலும் இறைஞானம் பரப்புமுகமாய் ஈங்கணும் திருவருகை தந்தருளினார்கள்.
திருமணம் : இலங்கையில் தங்கள் மாமனாரின் மகளாரை திருமணம் செய்தார்கள். கேரளாவில் அருள்நிறை மாதாய் விளங்கிய ரஹ்மா என்றபெண்மணியையும் பாரதத்தில் வேதாளை எனும் ஊரில் ஒரு மாதையும் மணம் புரிந்தார்கள். இவர்கள் ஏற்கனவே பஃதாதில் தங்களின் சிறியதந்தையாரின் மகளாரைத் திருமணம் செய்திருந்தார்கள்.
பிள்ளைகள் : பஃதாதில் வாழ்ந்த நாயகியார் மூலம் ஜமாலிய்யா ஸய்யித்முஸ்தபல் ஹா´மிய், ஜமாலிய்யா ஸய்யித்அலவிய்யுல் ஹா´மிய், ஜமாலிய்யா ஸய்யித்அலிய்யுல் ஹா´மிய் என்ற ஆண்மக்கள் பிறந்தனர். இலங்கையில்மணந்த மாதரசியார் மூலம் நமது தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யாவின் நிறுவனரான குத்புல்ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் மெளலானாஅல்ஹஸனிய்யுல் ஹா´மிய் நாயகம் (ரலி) அவர்கள் பிறந்தனர். அவர்களுக்குப்பின் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் ஹாமித் மெளலானா என்ற பிள்ளை ஒருவர் பிறந்து சிறுவயதிலேயேமறைந்தனர். கேரளாவில் மணமுடித்த ரஹ்மா என்ற பெண்மணியார் மூலம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யஹ்யா மெளலானா அல் ஹா´மிய் அவர்களும், இராமநாதபுரம் வேதாளையில்மணந்த மாதரசி மூலம் ஸய்யிதா ஜமீலத்துஷ்ரீபா என்ற பெயருடைய மகளாரும்பிறந்தார்கள். மெளலானா நாயகம் அவர்களுக்குபிள்ளைகள் மொத்தம் இருபத்தொருவர் பிறந்தனர்.
சேவை: இந்தியா,இலங்கை, பர்மா, இராக் முதலானநாடுகளிலே பன்னீராயிரத்துக்குமேற்பட்ட முரீதுகளுக்கு நேர்வழிகாட்டினார்கள். வாழ்நாள் முழுவதும் தீன்பணியிலும் மக்களை நல்வழிப்படுத்துவதிலுமேதங்களை அர்ப்பணம் செய்தார்கள். சிங்கம்பத்து என்னும் ஊரில் ஒரு தைக்கா அமைத்துஞானப்பணி புரிந்தார்கள். இவர்களின கரம்பிடித்து4 ஆயிரம் பேர் இஸ்லாத்தில் இணைந்ததாக காயல்பட்டினம் செண்டு ஆலிம் அவர்களின் புகழ்ப்பாடலில்குறிப்பிடப்பட்டுள்ளது.
நூற்கள் : அரபுமொழி, அறபுத் தமிழ் மொழிகளில்உரைநடையில் செய்யுள் எழுதுவதிலும் தனித்திறன்படைத்த மெளலானா அவர்கள் குன்யத்துல் பாஸிலீன். மிப்தாஹுஸ்ஸாலிஹீன், மன்பஅதுல்இல்மிய்யா, பரா இளுஸ்ஸாலிஹீன், துர்ரத்துல்காமிலீன், மன்பஅத்துர் ரஹ்மானிய்யா, பீஅஹ்காமின் நபவிய்யா, துர்ரத்துல் ஆரிபீன் பீ அக்லாகிஸ்ஸாலிஹீன்முதலான பல நூல்களை எழுதினார்கள். இந்நூல்களையயல்லாம் இவர்களே அச்சேற்றினார்கள்
மறைவு : நாடு நகரெங்கும் அலைந்து திரிந்து நாயன் பணியாற்றியகுருநாதர் அவர்கள் இறுதியாக பேராவூரணிக்கு அருகே அமைந்துள்ள. சம்பைப்பட்டினம் என்னும் சிற்றூரில் தங்கள் திருக்குடும்பத்தாருடன்இறுதிக்காலம் வரை வாழ்ந்தார்கள்.
நூற்று நாற்பது வயது வரை உடல் நலத்தோடும் பலத்தோடும் வழ்ந்த மெளலானாஅவர்கள் ஹிஜ்ரி 1371 ஜமாதுல் அவ்வல் பிறை 1 திங்கள் ஸுபுஹுக்குச் சற்று முன்பு நான்குமணிக்கு (28.1.1952) ஏக இறையை அடைந்தார்கள். இவர்களின் திருவுடல் சம்பையயனும் ஊரிலுள்ள மெளலானா தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மெளலானா அவர்களின் தர்கா ரீஃப் அவர்களின் திருப்பேரர் குத்புஸ்ஸமான்ம்ஸுல் வுஜுத் ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவுன் மெளலானா நாயகம் அவர்களின் முயற்சியில்அழகாக - எழிலாக கட்டப்பட்டுள்ளது.
தாங்கள் வாழும்போது பல கராமத்துக்களை நடத்தி மக்களின் நாட்டங்களை நிறைவேற்றிய மெளலானாஅவர்கள் மறைவுக்குப் பின்னரும் அவர்களை நாடிநிய்யத் செய்து தேடி வருவோருக்கு பல அற்புதங்கள் நிகழ்த்தி வருகிறார்கள்.