• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  May 2011   »  தீமையை அழித்த தீமை


தீமையை அழித்த தீமை

 

உலகையே அச்சுறுத்தி வந்த ஒருவரை அமெரிக்கா பழி தீர்த்துக் கொண்டது.

      இஸ்லாத்திற்காக எழுச்சி பெற்றதாக அவர் நினைத்திருந்தாலும் அவர் எடுத்துக் கொண்ட பாதை  இஸ்லாம் காட்டியதல்ல! வன்முறையை என்றும் இஸ்லாம் ஆதரித்ததில்லை!

         அவரை வளர்த்ததே அந்த வல்லரசு நாடுதான்.

      தன் பேச்சைக் கேட்கும்வரை நண்பனாக இனித்தவர், தனது குறையை தட்டிக்கேட்டபோது எதிரியாக கசந்து போனார்.

      அந்த வல்லரசு நாடு கொளுத்திப் போட்ட பட்டாசுகள் இஸ்லாமிய நாடுகளில் இன்றும் வெடித்துக் கொண்டே இருக்கிறன.

      அணு ஆயுதம் இருப்பதாக ஈராக்கை அழித்தவர்கள்  சதாமையும் மக்களையும் அழிவுக்குள்ளாக்கினார்களே தவிர அணு ஆயுதத்தை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

      உஸாமா இருப்பதாகக் கூறி ஆப்கானிஸ்தானை நிர்மூலமாக்கியவர்கள் ஆப்கானிஸ்தானில் அவரைப் பிடிக்கவில்லை.

      இதைத் தட்டிக் கேட்க ஐ.நா. வுக்கு நாவு இல்லை.  அறபு நாடுகளுக்கும் நேர்மைத் துணிவு இல்லை. ஆனால் மக்களின் அரசனாகிய அல்லாஹ் நிச்சயம் கேட்பான்.

      உஸாமாவால் இறந்த மக்களது ஆன்மாக்களின் கண்ணீருக்கு விடை கிடைத்துவிட்டது.

      அமெரிக்காவின் அநீதியால் மறைந்த ஆன்மாக்களின் அழுகுரலுக்கு அல்லாஹ் நிச்சயம் நியாயத் தீர்ப்பு வழங்குவான்.

      ஒரு தீமை மற்றொரு தீமையை அழித்துவிட்டது.  அதை அழிக்க ஒரு தீமை வரலாம்! அல்லது நியாயமே - தர்மமே அந்தப் பணியைச் செய்யலாம்!

 

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் பேரின்பப் பாதை நூலிலிருந்து 

யான், எனது என்னும் இருவகைப் பற்றும் அஞ்ஞானத்தால் ஏற்படுவன.  அவை அற்றுப் போவதாற் சுயநலமற்று பிறர் நலம் பேணும் தன்மை  தன்னிலுண்டாகும்.  தனக்கொரு சக்தியில்லாதிருக்கத் தானெனுஞ்செருக்கும், தனக்கொரு பொருளில்லாதிருக்கத் தனதென்னும் தருக்கும், இஃது எனதுரிமை என உரிமை கொண்டாடலும் அஞ்ஞானமேயாகும். அனைத்தும் ஒன்றெனவும் அனைத்துப் பொருள்களும் அவ்வொன்றின் அங்கங்களெனவும் தன்னுடல், பொருள்,ஆவி யாவும் எதனால் ஆட்டியசைக்கப்படுகின்றதோ அதற்கே இவையயல்லாம் உரித்து எனக் கொள்தலும் அதனடி நாம் சரண் எனக் கொண்டுய்தலும் மெய்ஞ்ஞானப் பேரின்பமாகும். 


Like this article?