• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  May 2012   »  ஞான மாத்திரை

ஞான மாத்திரை


ஆக, மனிதன் மனிதன் என்ற மாண்பினை இழந்து போலி மனிதனாக பூமியை சுத்தப்படுத்திக் கொண்டு வாழ்கிறான். அவனது தீய எண்ண அலைகளால் பவனம் அசுத்தமாகிறது. பாப நடவடிக்கைகளால் காற்று அழுக்காகிறது. நிறைந்து வழியும் தீமைகளால் நிலமகள் தடுமாறி நிலையின்றி நெளிந்து வளைகிறாள். இந்தத் தீயவர்களுக்காகவா நாம் பாடுபடுகிறோம்? என இயற்கை வெட்கப்படுகிறதுவேதனை கொள்கிறது!


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:

மனிதனின் இரு தோள்களுக்கிடையே ஒரு சதைத்துண்டு இருக்கிறது; அது சரியாயிருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். அது கெட்டுப் போனால் எல்லாம் கெட்டுக்போகும் என.

அண்ணலார் மனிதனின் இதயத்தைப் பற்றித்தான் இத்துணை அழகாக மொழிந்திருக்கிறார்கள். சீரான இதயத்திற்கு அவசியம்  இரத்த ஓட்டம் மட்டுமல்ல.  சீலம் மிகுந்த எண்ண ஓட்டமும்தான் என்பதை உலகம் மறந்துவிட்டது!  அதனால் மனிதர்களில் அதிகமானோர் இன்று இதய நோயால் அவதிப்படுகின்றனர். உடல் பார்க்க அழகாக இருக்கிறதுஉள்ளமோ உள்ளே அழுகி நாற்றமடிக்கிறது!

உள்ளத்தை யன்றோ இறைவன் பார்க்கிறான். இறைவனின் பார்வை படும் இடத்தை அசிங்கமாக வைத்திருந்தால் அவனது அருள் அங்கே எப்படி சுரக்கும்?

எனவே மனிதர்கள் இதயத்தை நெறிப்படுத்தி செம்மையாக வாழ வேண்டுமானால் இதய நோய் நிபுணர்களான இறைஞானிகளை அணுகி, மெய்ஞ்ஞான மாத்திரைகளை உட்கொண்டால்  உடலுக்கு சுகம் கிடைக்கும்.  உலகத்துக்கும் அமைதி  கிடைக்கும்!