திருமறையின் சவால்
அனைத்து கலாச்சாரங்களிலும்நாகரிகங்களிலும் கவிதையும் கலை இலக்கியமும் மனித சிந்தனையின் வெளிப்பாடு- படைப்புத் திறன் ஆகியவற்றின் முக்கியக் கருவிகளாய்விளங்கி வந்துள்ளன.
இன்றைய யுகத்தின் வெளிப்பாடுகளாய் விளங்கும் ‘விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்’போல, அன்றையயுகத்தில் ‘கவிதையும் இலக்கியமும்’ கீர்த்திமிகு நிலையை - ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்தனஎன்பதற்கு உலகம் சான்றளித்துக் கொண்டுள்ளது.
திருக்குர்ஆன் தனக்கு நிகரில்லாத, ஓர் ஒப்பற்ற, உயர் தனி இலக்கியமாய் அரபுமொழியில் திகழ்ந்து வருகின்றது.
இன்னும், இந்தத் தரணி முழுவதும் அரபுமொழி இலக்கியத்தில் தனக்கு ஈடு இணையில்லாத,ஒரு தனி இலக்கியமாய் திருக்குர்ஆன் இலங்கி வருகின்றது என்பதை முஸ்லிம்களும் முஸ்லிமல்லாத மாற்றுமத நண்பர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஒட்டு மொத்த மனித இனத்தை நோக்கிதிருக்குர்ஆன் பின்வரும் அறைகூவலை - சவாலை முன் வைத்தது, தொடர்ந்து முன்வைக்கின்றது.
இன்னும், (முஹம்மதுஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள வேதத்தை நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால்,(அந்த சந்தேகத்தில்) உண்மைஉடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யயல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இதுபோன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
(அப்படி) நீங்கள் செய்யா விட்டால்- அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது - மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக்கொண்ட நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்தநரக நெருப்பு இறைவனையும், அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
சூரா பகரா: 24
திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள அத்தியாயங்களைப் போல் ஒரே ஓர் அத்தியாயத்தையேனும்உண்டாக்கிக் கொண்டு வரட்டும் என்பதே திருக்குர்ஆனின் அந்த சவால். இந்த அறைகூவல் திருக்குர்ஆனில் பலமுறை எடுத்துக்கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் உள்ள அத்தியாயத்தைப் போன்று எழிலார்ந்த மொழிநடையும், சொல்லாட்சியும்,கருத்தாழமும் கொண்டனவாய் - குறைந்தபட்சம் அதைனையொத்ததொரு அத்தியாயத்தைகொண்டு வரட்டும் என்ற சவால் இன்றைய நாள்வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இதற்கு மாறாக “இந்த உலகம் தட்டையானது” என்ற கருத்தை கவின்மிகு கவிநடையில்ஒரு வேதநூல் எடுத்துரைக்குமானால், அதனை நவீன உலகில் வாழும் பகுத்தறிவுச் சிந்தனைபடைத்த எந்த ஒரு மனிதனும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டான். இதற்குக் காரணம் நாம் பகுத்தறிவும், தர்க்கக் கலையும், அறிவியலும் போட்டி போட்டுக்கொண்டுவந்து நிற்கும் ஒரு யுகத்தில் வாழ்ந்து வருகிறோம். திருக்குர்ஆனின் அதியற்புதமான மொழியழகை மட்டும்அதன் தெய்வீகத்தன்மைக்கு அத்தாட்சியாக எடுத்துக் காட்டினால் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
தெய்வீக வெளிப்பாடு என்ற வாதத்தை முன்னெடுத்து வைக்கவும் எந்த ஒரு வேதநூல் அதன் அறிவாண்மை, தர்க்கக்கலைஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு நின்றால் மட்டுமேஅதனை மக்கள் ஏற்றுக்கொள்வர்.
புகழ்பெற்ற இயற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்இவ்வாறு கூறுவார்:
“மதம் இல்லாத அறிவியல் முடமானது. அறிவியல் இல்லாத மதம் குருடானது.”
திருக்குர்ஆன்என்பது ஓர் அறிவியல் நூல் அல்ல. ஆனால் ‘ஆயாத்’ எனப்படும் அத்தாட்சிகள்கொண்டதாகும். ஆறாயிரத்திற்கும்அதிகப்படியாக அத்தாட்சிகள் அதில் நிரம்பி காணக்கிடக்கின்றன. அவற்றில் 750 வசனங்கள்அறிவியலைக் குறித்து விவாதிக்கின்றன.
கவல் : என்.ஏ.எஸ், திருச்சி.