• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  May 2012   »  மெய்யொளி பதில்கள்

மெய்யொளி பதில்கள்


இல்லை என்பது நிலைத்திருப்பதுஎப்படி?


    இல்லை இல்லையாகும் போது.

    (ஏதுமே) இல்லை யயன்ற நிலையிலும்அந்த நிலை இருந்து கொண்டு தானே இருக்கும்.


இயற்கை உணர்த்தும் பாடம் என்ன?


    சலனமின்மை - அமைதி - நடுநிலை- எதார்த்தம்.


“குருவை எதிர்த்தால் திருவோடு”எனும் பழமொழி உணர்த்தும் பாடம் என்ன?

சற்குருவின் திருக்கரம் பற்றாதவன்உலகில் அனைவரிடமும் கையேந்தி நிற்பான் என்பது தான்.


சங்கைமிகு ஷைகு நாயகமவர்கள்  தங்களுக்குக் கூறிய முதல் அமுத மொழி என்ன?


    “உங்களை இதன்பால் அழைத்தது ஹக்கே - இயற்கையே” இதுவே சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்கள் எனக்களித்த முதல் அமுதமொழி.


சமாதி நிலை என்பது என்ன?


மனதுக்கண் மாசிலன் ஆதல். எனது றப்பை எனது றப்பைக் கொண்டு பார்த்தேன்... என்னும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் அமுத மொழியின் விளக்கம் என்ன?


    பரிபூரணத்தில் பரிபூரணமாய் நின்று பரிபூரணத்தைப் பரிபூரணத்தால்பூரணமாய்ப் பார்த்தேன். (தாகிபிரபத்தில் சங்கைமிகு ய­ய்கு நாயகம் அவர்கள்.)


விதியை மதியால் வெல்லலாம்; மதியை?


சற்குருவினால்.

    

    “மறதி ” அருளா? இருளா? ஏன்?


    அருள்  ஆனால்...இருள்

    இருள் ஆனால்.... அருள்


குருவின் சன்னதியில் மெளனமாக இருப்பது, அறிவுப்பூர்வ வினாத் தொடுப்பது... எது சிறந்தது? ஏன்?

 

தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.


அல்லாஹ்வும் ரசூலும் ஒன்ணு

அதனையறியாதவன் வாயில் மண்ணு...! சரிதானே?


இறைவா, நானேயல்லாது பிறிதொன்றையும் காணாது

நானே என்னில் என்னைக் கண்டநிலை. மற்றும்

உன்னில் நான் அழிந்து உன்னில் நானும்

பிறிதொன்றிலாதாகி உன்னிலே என்னை நீயாக

இரண்டறக் கண்டநிலை (ஏகாந்தநிலை)


( தாகிபிரபம் -  நூலில் சங்கைமிகு ய­ய்கு நாயகம் அவர்கள்)


இஸ்லாம் பல பிறவிகளை மறுப்பதேன்?


அறிவிற்குப் புறம்பான எந்த வி­யத்தையும் இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.


பாசம் - நேசம்.... என்ன வேறுபாடு?


பாசம் உயிரோடு கலந்தது.

நேசம் உணர்வோடு கலந்தது.


படிப்பாளிகள், படைப்பாளிகள்... யார் சிறந்தவர்? ஏன்?


எதைப் படிக்கிறார்கள்? எதைப் படைக்கிறார்கள் என்பதைப் பொருத்தே சிறப்பு இருக்கிறது.


அருளுக்கு நிகர் எது?


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளி.


தவத்தினால் ஆன பயன்?


அமைதி.


“நான்” அவனில்லையா?


“ஒன்ற”ன்றி வேறில்லை.


சங்கைமிகு ஷைகு நாயகமவர்கள்  “காலத்தின் உத்தமன் நானே” எனக் கூறுவதன் தாற்பரியக் கருத்து என்ன?


யுக தர்மத்தை நிர்ணயிக்கக் கூடிய

யுக நாயகம் (குத்புஸ்ஸமான்) நானே

என்று ஜஸ்புடைய ஹாலில் நமது சங்கைமிகு ய­ய்கு நாயகம் அவர்களின் உண்மையை விளக்குவது.

 

பரிபூரணம்... பரிபூரணமாவது எப்போது?


பூமி உருண்டையாகும் போது.


கற்க.... கசடற?


சந்தேகம் அற்றுப்போக, கீழ்மை அற்றுப்போக, குறைகள் அற்றுப் போக ஞானத்தைத்தேடு. (நிறைவை அடைய குருவைத்  தேடு)


ஆத்ம வளர்ச்சிக்குத் தடையாயிருப்பது அறியாமையா? புரியாமையா?


தேட்டமின்மை.


விஞ்ஞான வளர்ச்சியால் பாதிக்கப்படுகிறோமா? சோதிக்கப்படுகிறோமா?


ஒவ்வொரு வி­யத்திலும் பலமும் இருக்கிறது.  பலவீனமும் இருக்கிறது.


அறிவிற் சிறந்தது முண்டோ?


அறிவிலும் சிறந்ததை அல்லாஹ் படைக்கவில்லை யயன்று அண்ணல் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவுளமாகியுள்ளார்கள்.