அல்குர்ஆன் அறிவியல் அறிவியல் துளிகள்
டாக்டர். ஹார்ட்விக் ஹர்ச்ஃபெல்டுஎன்பார் தம் “குர்ஆன் உள்ளடக்கம் மற்றும் விளக்கவுரை பற்றிய புத்தாய்வுகள்” (New resesrches into the composition and exegis of the quran)” என்னும் நூலில் “குர்ஆன் அறிவியல்களின் ஊற்றுக்கண்ணாக விளங்குவது கண்டு யாரும் வியப்படையத் தேவையில்லை.
விண், மண், மானுட வாழ்க்கை, வாணிபம்மற்றும் பல்வேறு தொழில்கள் ஆகியவற்றுடன் தொடர்பு டைய வியங்கள் அனைத்தையும் அது தொட்டுச் சொல்கிறது. இது திருமறையின் பகுதிகள் மீது விளக்கவுரைகளாகஎண்ணற்ற தனிவரைவு நூல்கள் உருவாவதற்குக் காரணமாயமைந்தது. இவ்வாறு அறிவியல் ரீதியான மிகப் பெரும் விவாதத்திற்குக்குர்ஆன் அடிப்படையாக அமைந்தது.
அறிவியலின் அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்உலகு மகத்தான வளர்ச்சி அடைய மறைமுகமாகக்குர்ஆனே காரணமாகும்” என்று சுட்டிக் காட்டுகிறார்.
“இஸ்லாத்தின்அகராதி”(“Dictionary of Islam) என்னும் நூலின் ஆசிரியர் டி.பி. ஹக்ஸ் ( T.P. Hughs) என்பார் திருக்குர்ஆன் பற்றிய அவரது கட்டுரைகளில்ரெவரெண்ட். மர்கோலியத் D.S. என்பாரின்கருத்துக்களை மேற்கோள் காட்டியுள்ளார். மர்கோலியத்தின் கருத்துகள் வருமாறு :
“மறுமலர்ச்சிக்காலக் கட்டத்திற்கு முன்பு பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய அறிஞர்கள் கிரேக்கத்தத்துவம். கணிதம், வானவியல் மற்றும் இவையனைய அறிவியல்கள்பற்றிஅறிந்திருந்தவை யெல்லாம் அரபிய மூலங்களின் இலத்தீன் மொழிபெயர்ப்புகளிலிருந்துஅவர்கள் பெற்றவையே ஆகும்.
அராபியர்களுக்கும் அவர்தம் கூட்டாளிகளுக்கும் இந்த அறிவியல் ஆய்வுகளுக்கு ஊக்கமும் உள்வலிவும் ஊட்டியது திருக்குர்ஆனே என்பதுஆராய்ச்சி முடிவாகும். முஸ்லிம்களுக்கு அறிவியல் ரீதியானநம் கட்டுப்பாடுகளை ஐரோப்பா தொடர்ந்து மூடி மறைத்துக் கொண்டு வருகிறது. அவற்றை மேலும் நீண்ட காலத்திற்கு மறைத்து விடமுடியாது.
இது நிச்சயம்! சமயக்காழ்ப்புணர்வு மற்றும் போலித்தனமான தேசியத்தின் மீது உருவாக்கப்பட்ட அநியாயத்தைஎல்லாக் காலத்திலும் நிரந்தரமாக ஆக்கிவிட முடியாது!”
என்சைக்ளோபீடியாபிரிட்டானிக்காவும் “ஐரோப்பாவில் ஏறத்தாழ 1000 ஆண்டுகள் அறிவியல் செயலற்றுமுடங்கிக் கிடந்தபோது 9-ம் நூற்றாண்டில் ஸ்பெயின்வரை தங்கள் ஆட்சியாதிக்கத்தை விரிவாக்கியிருந்த அரேபியர்கள் அறிவியலின் காவலர்களாக இருந்தார்கள்.
பிற எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியதுபோலஉயிரியல் அறிவியலில் தலைசிறந்து விளங்கினார்கள்” என்று கூறுகிறது.
ஃபிலிப். கே.ஹிட்டி தம் ( “History of the Arabs”) “அரேபியர்களின்வரலாறு” எனும்நூலில் “8 - ஆம்நூற்றாண்டின் மத்தியிலிருந்து 13 - ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ..... அரபிமொழிபேசும் மக்கள் உலகெங்கிலும் பண்பாடு மற்றும் நாகரிகத்தின் ஒளிதீபத்தை ஏந்திச்சென்றவர்களாக விளங்கினார்கள்! பண்டைய அறிவியலும் தத்துவமும் மீட்கப்படவும் பல இடங்களில் பரவலாக்கப்படவும் அவற்றோடு மேலும் பல சேர்க்கப் படவும் அவர்களே ஊடகமாகத் திகழ்ந்தார்கள்.
அதனாலேயே மறுமலர்ச்சியுற்றமேலை ஐரோப்பா உருவாக முடிந்தது!” என்று கூறியுள்ளார்.(காண்க : முகம்மது ´ஹாபுத்தீன் நத்வி எழுதிய “முஸ்லிம் அறிவியல்எழுச்சியும் வீழ்ச்சியும்” நூல்).
டாக்டர்.புக்கைலும் தம் நூலில் “இஸ்லாம் செல்வாக்கின் உச்சியில் இருந்தபோது, கி.பி. 8 - ஆம் நூற்றாண்டுக்கும் 12 - ஆ ம்நூற்றாண்டுக்கும் இடையில் ... இஸ்லாமியப் பல்கலைக் கழகங்களிலே மிக அதிகஎண்ணிக்கையிலான ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புக்களும் நடைபெற்றன ... கார்டோபா(ஸ்பெயின்) கலீஃபாவின் நூலகத்தில் 4,00,000 நூல்கள் இடம் பெற்றிருந்தன. ஐரோப்பா முழுவதிலிருந்தும் மேதைகள், இப்போது ஆய்வுகளைச் செழுமைப்படுத்த அமெரிக்கா செல்வது போலக்கார்டோபாவுக்குச் சென்றனர்.
அந்தக்காலக்கட்டத்தில் மனிதர்கள் இன்றைக்கு இருப்பதை விட அதிகமாக மத உணர்வில்ஆழ்ந்திருந்தனர் என்ற போதிலும், நம்பிக்கையாளர்களாகவும் அதேவேளையில் விஞ்ஞானிகளாகவும் விளங்குவதற்கு இஸ்லாமிய உலகம் என்றும் இரட்டைக்குழந்தையாகவே இருந்தது.
அப்படி இருப்பதைத்தடுத்து நிறுத்த முடியாது .... அறிவுப் பாதையில் மற்றுமொரு முன்னேற்றம் ...“படைப்பாளன் ஒருவன் உளன்’ என்னும் இருப்புண்மைக்கு ஆதரவான வாதங்கள் செழித்துக்கொழித்து வருகின்றன” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூடத்தம் “மேலைத் தத்துவ ஞான வரலாறு (“History of western philosophy” ) என்னும் நூலில்“இந்தியாவிலிருந்து ஸ்பெயின் வரை இஸ்லாத்தின் ஒளிமிக்க நாகரிகம் செழித்துவளர்ந்தது!” என்று ஒப்புக் கொள்கிறார்.
மிகவும்அண்மையில், 26-09-2001- அன்று (செப்டம்பர் 11 ன்வரலாறு காணாத அமெரிக்கத் துயர நிகழ்ச்சிக்குப் பின்னால்) ஹியூலெட் பேக்கார்டு இன்கார்ப்பரேனின் தலைமைச் செயல்அலுவலர் கார்லி ஃப்ளோரினா “நம் வருங்காலம் நமது இன்றையத் தலைமையிடம் என்னகோருகிறது?” என்ற தலைப்பில் மின்னசோட்டா(அமெரிக்கா)வில் பேசும்போது கி.பி. 800 முதல் கி.பி. 1600 வரை மிகப் பெரியஉயரங்களுக்கு உயர்ந்து நின்ற அந்த ஒளிமிக்க இஸ்லாமிய நாகரிகத்தைப் பற்றிச் சொல்லருவி பாய்ந்தது போல் சொற்பெருக்காற்றினார்.
முடிவாக, “இப்போதுள்ளது போன்ற இருண்ட மற்றும் கடுமையான காலங்களில் அந்த வகையானஉயர்ந்த நிலையை எய்த விழையும் சமூகங்களையும் நிறுவனங் களையும் கட்டுவதில் நாம்ஈடுபடுவோம் என்று உறுதி மேற்கொள்வோம்!” என்று கூறி முடித்தார்.
டாக்டர்புக்கைல் அவர்களும் 14.6.1978 அன்று லண்டனில் உள்ள காமன்வெல்த் நிறுவனத்தில் ஓர்உரை நிகழ்த்தினார். அவரது உரை “குர்ஆனும்நவீன அறிவியலும்” என்ற தலைப்பில் குறுநூலாக வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர்கூறியிருப்பதாவது : “இஸ்லாமிய இறை வெளிப்பாடு பற்றிப் புறவமாக (அறிவியல் ரீதியாக)ஆராய்ந்து பார்த்தால், உண்மையிலேயேஇந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் தாம் வெளிப்பாட்டின் மனித இயற்கைக்குஅப்பாற்பட்ட குணாதிசயத்தை அதன்மீது ஒளிபாய்ச்சிக் காட்டுகின்றன. மக்கள் சொல்வதற்கு மாறாக அறிவியலறிவுஅல்லாஹ்வின் உள்ளமை பற்றிய சிந்தனைக்கு மிகவும் ஆதரவாக இருப்பதாகத்தோன்றுகிறது.
இறைவனின் படைப்பு வேலைகள்முதலியன பற்றிய இத்தகைய சிந்தனைகளில் அறிவியல் அறிவுடன் தொடர்புடைய விவரங்களைக்குறித்துக் காட்டும் குறிப்புக்களை நாம் காணமுடிகிறது என்பது இறைவனின்நன்கொடைகளில் நிச்சயமாக மற்றுமொரு நன்கொடையாகும். அதன் மதிப்பு மற்ற எல்லாவற்றுக்கும் மேலாக ஒளி வீச வேண்டும்!
இறைவன் மீதுநம்பிக்கை என்பதை அகற்றிவிட்டு அந்த இடத்தைப் பிடித்துக் கொள்ள அறிவியலைஅடிப்படையாகக் கொண்ட நாத்திகம் முனைந்து வரும் இக்காலக்கட்டத்தில் இது மிகவும்அவசியமாகும்!”
அல்ரிசாலா(ஜுலை - ஆகஸ்ட் 1998) இதழில் வெளியான “குர்ஆன் அல்லாஹ்வின் புத்தகம் - யியி” -என்னும் கட்டுரையும் : “மறுமை உலக வாழ்வில் கடைத்தேற்றம் என்பதே குர்ஆனின்அடிப்படைக் கொள்கை. அதனால்தான் அது கலைகள்மற்றும் அறிவியல்கள் என்று எந்தப் பிரிவிலும் சேரவில்லை.
ஆனால் அதுமனிதனை அழைத்துத் தானே பேசுகிறது என்பதால் மனிதனைச் சூழ இருக்கும் ஏறத்தாழ எல்லாத்துறைகள் பற்றியும் அது தொட்டுச் செல்கிறது. அதன் செயல்பரப்பு அகன்றதாக இருப்பினும் அது அறிவித்தவைகளில் எதுவும்அரைகுறை அறிவின் அடிப்படையில் அமைந்திருப்பதாக எந்தக் காலத்திலும்நிரூபிக்கப்படவில்லை. எவனுடைய அறிவு ‘கால’த்திற்கும் மூலமாக விளங்குகிறதோ - எல்லாவற்றிலும் மேலானவனான அந்தஈடிணையற்றவனே இந்த வேதபுத்தகத்தின் ‘மூலம்’ என்பதை இது தெளிவுறக் காட்டுகிறது”என்று கூறுகிறது.
உடற்கூற்று ஆராய்ச்சியாளர்டாக்டர். வீ.V.ஹிபெர்செளத் என்பார்“வியப்புக்குரிய வகையில் துல்லியமாகவும் அறிவியல் ரீதியாகவும்உன்னதமாக கூற்றுக்களை உரைக்கும் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவரை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இது எவ்வாறு ஒரு வெறும் தற்செயல் நிகழ்ச்சியாகஇருக்க முடியும் என்று தனிப்பட்ட முறையில் என்னால் நம்ப முடியவில்லை.
டாக்டர். மூர் கூறுவது போல ஒரு தெய்வீகத்தூண்டல் அல்லது வெளிப்பாடுதான் என்று அவரை இத்தகைய கூற்றுக்களைச் சொல்லவைத்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதில் என் மனதில் எந்தஇடர்பாடும் இல்லை” என்று ஒப்புக் கொள்கிறார்.
டாக்டர். தெஜாசெட் தெஜாசென் என்னும் உடற்கூற்றுஆராச்சியாளரும் எட்டாவது சவூதி மருந்தியல் மாநாட்டில் உரையாற்றுகையில், “என்னுடைய ஆராய்ச்சிகளிலுருந்தும் இந்தமாநாட்டில் அறிந்தவற்றிலிருந்தும் 1400 ஆண்டுகளுக்கு முன் குர்ஆனில்பதிவாகியுள்ளவை அனைத்தும் உண்மையாகவே இருக்க வேண்டும் என நம்புகிறேன். அதை அறிவியல் வழியாக நிரூபிக்க முடியும்” என்றுகுறிப்பிட்டார்.“