இனிமேல் விவாதத்திற்குத் தயாரா?
என யாரும் நெஞ்சை நிமிர்த முடியாது!
(அல்ஹிந்த் இதழுக்கு ஷேக்அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் அளித்த பேட்டி யிலிருந்து)
களியக்காவிளையில் மெளலவி P. ஜைனுல் ஆபிதீனுக்கும், தங்களுக்கும் மத்தியில் நடந்த (மார்க்க)விவாதத்திற்குப் பின் தமிழக முஸ்லிம்களிடம் தங்களுக்கு பெரிய அறிமுகம்கிடைத்தது. அதற்கு முன் நிஜாமுத்தீன்மன்பஈ ஹழ்ரத், கலீல் அஹ்மத் கீரனூரி ஹழ்ரத், ஸைஃபுத்தீன் ரஷாதி ஹழ்ரத் போன்றோர் நேரடி விவாதத்திற்கு P.J.வை அழைத்தும் வராதவர் உங்களோடு விவாதத்திற்கு எப்படி வந்தார்? மறைமுக ஒப்பந்தம் ஏதும் இதில் இருக்கிறதா?
நான் ஜமாலிய்யாஅரபிக் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே இவரோடு விவாதிக்க தயாராகஇருந்தேன். காரணம் இவர் சவால் விடும்படலம் ஊருக்கு ஊர், மேடைக்கு மேடைதொடர்ந்து கொண்டேயிருந்தது. சில ஊர்களில்அருகிலேயே மத்ரஸா இருந்தும் மேடைபோட்டு நேரடி விவாதத்திற்கு தயாரா என்று சவால்விடும் போதெல்லாம் அவரின் பக்கமே நியாயம் இருப்பதாக ஒரு மாயை சுன்னத் வல் ஜமாஅத்மக்களிடையே கூட இருந்தது.
P.J.வோடு விவாதம் செய்ய எந்த ஆலிம்களும் தயாரில்லை; அவர் சொல்வது தான் சரி, சத்தியம், உண்மையான கொள்கை என்று நம் மக்களே பேசும்அளவுக்கு ஒரு சூழ்நிலை இருந்தது. நேரடிவிவாதத்திற்கு தயாரா என்ற ஒரு கோத்தை வைத்துக் கொண்டே P.J.தன்னை ஒரு பெரும் சக்தியாக பூச்சாண்டி காட்டிக்கொண்டேஇருந்தார்.
தான் சொல்வது அனைத்தும் “சத்தியக் கொள்கையே” என தன்னை நம்பியிருந்த இளைஞர்களுக்கு மத்தியில் கூட தன்னைபெரிய சக்தியாக காட்டிக் கொள்ள “நேரடி விவாதம்” என்ற கோம் அவருக்கு நன்கு பயன்பட்டது. கலீல் அஹ்மத் கீரனூரி, நிஜாமுத்தீன் மன்பஈ ஹழ்ரத் போன்ற மூத்தஅறிஞர்கள் நேரடி விவாதத்திற்கு தயாராக இருந்தும் நடுநிலை உலமாக்களால் அவர்கள்தடுக்கப் பட்டிருந்தனர்.
காரணம் P.J.பேச்சில், பண்பாட்டில் நாகரிகமில்லாதவர், தகுதியானவர்களை மதிக்கத் தெரியாதவர். தனது வாதம் எடுபட எதையும் செய்யத் துணிந்தவர் என்பது விவரம்தெரிந்தவர்களுக்கு நன்கு புரிந்திருந்தது. இவரின் மூலம் அந்த மூத்த உலமாக்களுக்கு கண்ணியக்குறைவு ஏற்பட்டு விடக்கூடாதுஎன்பதற்காக நலன் விரும்பிகளால் தடுக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் ஒதுங்கியதால் இவருக்கு பல சாதகம்ஏற்பட்டது. இதற்கிடையில் நான் ஜமாலிய்யாவில் இருக்கும்போது அவரிடம் கடிதம் மூலம் விவாதம் செய்து வந்தேன். பதிலும் முறையாகவந்து கொண்டிருந்தது. நான் எழுதிய ஆறாவதுகடிதத்திற்கு பதில் ஏதும் வரவில்லை.
ஆறாவது கடிதத்தில் நான் கேட்ட கேள்விகளுக்கு முறையாக அவரால் பதில் சொல்லஇயலவில்லை என்பது தான் உண்மை. வருடம்எனக்கு ஞாபகமில்லை. சுமார் பத்துவருடத்திற்கு முன்பு, திருப்பூரில்நடந்த ஒருநாள் ரீஅத் மாநாட்டிற்குகலந்து கொள்ளச் சென்றேன்.
மஃரிபுக்குப்பின் கேள்வி-பதில் நிகழ்ச்சிக்கு நான் பொறுப்பேற்று மார்க்க வினாக்களுக்குவிடையளித்துக் கொண்டிருந்தேன். P.மூ.வை நம்பியிருக்கும்இளைஞர்கள் குதர்க்கமாக சில கேள்விகளைக் கேட்டுவிட்டு P.மூ.வோடு நேரடி விவாதத்திற்குத்தயாரா? எனக் கேட்க நான் எப்போதும் தயார்என்றேன்.
மறுநாள் “நேரடிவிவாத ஒப்பந்தப் பேச்சு” காலை 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 11 மணி வரைநடந்தது. எங்கள் தரப்பில் ஒரே நிபந்தனையைமட்டும் அழுத்தமாக வைத்தோம். விவாதத்திற்கு P.J.தான் வரவேண்டும் என, அதற்கு அங்குள்ள இளைஞர்கள்பொறுப்பேற்றுக் கொண்டார்கள், பிறகு P.மூ. வர மறுத்து தனது தம்பிகளை அனுப்பி வைப்பதாகச்சொன்னார். நாங்களும் மறுத்துவிட்டோம்.
எனது நோக்கம் P.J.வோடு எந்த உலமாக்களும்நேரடி விவாதத்தில் பங்கெடுக்கவில்லை என்ற வரலாறு உருவாகி விடக்கூடாது என்பதுதான். P.மூ.வின் நோக்கம் தன்னோடு யாரும் நேரடி விவாதத்தில்பங்கெடுக்கத் தயாரில்லை என்பது வரலாறாகவே இருக்க வேண்டும் என்பது தான்.
திருப்பூர் ஒப்பந்தம்முறிக்கப்பட்டதிலிருந்து P.J.வின்சாயம் வெளுக்கத் தொடங்கியது. விவாதத்திற்கு P.மூ.ஏன் வரவேண்டும்? உங்களுக்குத் தேவை வியம் தானே என்றெல்லாம் பேசி “ஒரு புதிய கதையை” உருவாக்க நினைத்தார்கள். சில காலம் கழித்து அல்லாஹ் பேருதவி செய்தான்.
களியக்காவிளையில் உள்ள சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் P.மூ.குரூப்பில் உள்ள ஒருவரிடம்(காஜா நூஹ்)பேசிக்கொண்டிருக்கும்போது நேரடியாக P.மூ.விவாதத்திற்கு வருவாரா எனக் கேட்டபோது, P.மூ.வைவரவழைப்பது என் பொறுப்பு என காஜா நூஹ் உத்தரவாதம் அளித்துள்ளார். நல்ல செல்வாக்கும் உள்ளவர். P.J.இந்த முறை இந்த நண்பரிடம் தப்பிக்க முடியவில்லை.
நீங்கள் வராவிட்டால் நமது அமைப்புக்குள் பெரியபிரச்சனை ஏற்படலாம் எனக்கூற P.J.வால் நழுவ முடியவில்லை. களியக்காவிளைக்கு திருப்பூர் தான் விதை போட்டது என்பதில்சந்தேகமில்லை. களியக்காவிளை விவாதம்உருவான வரலாறு இப்படித்தான். களியக்காவிளைவிவாதத்தில் குளறுபடிகள் செய்து, பிரச்சனைகளைஉருவாக்கி விவாதத்தை இடையிலேயே நிறுத்துவதற்கு கூட பல சதிகள் தீட்டப்பட்டன.
நாம் பொறுமையாக இருந்து அனைத்தையும்முறியடித்தோம். விவாதத்திற்கு இடையில்பரிகாசமாக சிரிப்பதற்கு ஒரு குழுவைக் கூடஅவர்கள் ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள்.
அந்தவிவாதத்தில் வெற்றி - தோல்வி ஏதும் ஏற்பட்டதா?
நீதிபதிகள்மக்கள் தான்.
மக்களின் தீர்ப்புக்கே விட்டுவிட்டோம். ஆனால், அந்த விவாதத்திற்குப் பின் பெரிய மாற்றம் தாக்கம் ஏற்பட்டது என்பதுமறுக்கமுடியாத உண்மை. P.J.வின் பலம், பலகீனம் என்ன என்பதும் அதன்பின்வெளிச்சத்திற்கு வந்தது. P.மூ.கும்பலின் கூட்டத்தின்ஆட்டமும் கொஞ்சம் அடங்கியது.
P.J.மூ. போன்றவர்களை எதிர்க்கும் நேரத்தில் தப்லீக்காரர்களையும் சேர்த்து நீங்கள் எதிர்க்கும் போது எல்லோராலும் உங்களை ஏற்றுக் கொள்ளமுடியவில்லையே?
நான்எதிர்க்கும் தப்லீக் வேறு. நீங்கள் சொல்லவர்ற தப்லீக் வேறு! தமிழ்நாட்டில் இருவேறு தப்லீக் உள்ளது. ஒன்று தீவிர அசல் தப்லீக். இன்னொன்று தப்லீக்கின் மறைமுக வஹ்ஹாபியத்தைபுரியாமல் ஆதரிப்பது.
உதாரணமாக “சென்னை கா´ஃபுல் ஹுதா மதரஸா”. “சேலம் மழாஹிருல் உலூம் மதரஸா”, இவ்விரண்டும் முழுக்க முழுக்க வஹ்ஹாபிஇஸத்தை போதிக்கக் கூடிய தப்லீக் மதரஸா, சுன்னத் வல் ஜமாஅத்கொள்கைக்கு பேராபத்து இந்த மதரஸாக்களால் தான்.
சமீபத்தில்மீலாது விழா நடத்தக்கூடாது என்று சட்ட ஃபத்வா கொடுத்துள்ளார்கள். கூட்டு துஆ கூடாது என்பார்கள். சுருக்கமாக சொல்லப் போனால், மத்ஹபைப் பின்பற்றுவதைத் தவிர, மற்றபடி யாருடன் நாம் விவாதம் செய்தோமோ அவர்களுக்கும் இந்த இரண்டு பெரியமதரஸாக்காரர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தக் குழப்பவாதிகளை விட இவர்கள் ஆபத்தானவர்கள்.
வடமாநிலங்களில் தப்லீக்வாதிகள் வஹ்ஹாபிகள் என சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களால்ஆரம்பகால கட்டத்திலேயே அடையாளம் காட்டப்பட்டதால், அங்கு சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. அங்கு தனித்தனியாக அடையாளம்கண்டுகொள்ளலாம்.
இங்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நமது உலமாக்கள் தப்லீக்காரர்களை சாதாரணமாக விட்டுவிட்டார்கள். ஆனால், இங்குள்ள தப்லீக்காரர்கள் அப்பாவிகள், தப்லீகின்உண்மை நிலை புரியாமல் அதில் இருக்கிறார்கள். மற்றபடி, தப்லீக்ஆதரவு மதரஸாக்களை நான் குறை கூறவில்லை. சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரணானது அங்கு ஏதுமில்லை.
உங்களது பேச்சு, வாதங்கள் அனைத்தும் அசல் சுன்னத் வல்ஜமாஅத்திற்கு எதிரானது என சென்னை மக்கா மஸ்ஜித் இமாம் சம்சுத்தீன் காஸிமி குற்றம் சாட்டுகிறாரே?
நான் ஏற்கனவேசொன்னது போல இவர் மாதிரியான வஹ்ஹாபிகளை ஆரம்பத்திலேயே சமுதாயத்திடம் அடையாளம்காட்டியிருந்தால் பிரச்சனை வந்திருக்காது. சுன்னத் வல் ஜமாஅத் பள்ளியில் வஹ்ஹாபி கருத்துகளைக் கூறுகிற மாதிரியானஆட்களை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது.
இவருக்கு ஜமாஅத்துல் உலமாவிலும் சரி, சமுதாயத்திடமும் சரி எந்த அங்கீகாரமும் என்பது எல்லோருக்கும் தெரியும். மவ்லிது என்பது எல்லோருக்கும் தெரியும். மவ்லிது கூடாது என பயான் செய்கிறார். இவருடைய பேச்சைக் கேட்டுஎந்தப் பள்ளியில்மவ்லிது ஓதுவதை நிறுத்தியுள்ளார்கள். உண்மையான சுன்னத் வல் ஜமாஅத்கொள்கை எது என்பதை நாங்கள் அவ்வப் போது புரிய வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம்.