• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  May 2012   »  கலீபா பெருந்தகைகள்


தரீகத்துல் ஹக்கீயத்துல் காதிரிய்யாவின் கண்ணியமிகு

கலீபா பெருந்தகைகள்

ஒரு சிறப்புப் பார்வை!

 

மெளலவி என்.எஸ்.என். ஆலிம்.பி.காம். திருச்சி

 

சங்கைமிகு ஜமாலிய்யா மெளலானா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்த ஆனந்தப் பரவசத்திலும் மஹானந்த பாபா ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் தரிசனங்களிலும் பலமுறை தம்மைப் பரிபக்குவப் படுத்திக்கொண்ட வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள், மஹானந்த நாயகரின் மறைவிற்குப் பின்னர் “தன்னிலை” மறந்தவர்களாக சில காலம் அமைதி இழந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.


வலிய்யுல் அஹ்ஸன் அவர்களின் உள்ளத்திற்கு ஆன்மிக ஒளி விளக்கு ஏற்பட்டநிகழ்வைக் காண்பதற்கு முன்னர், மஹானந்த பாபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றிவலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் கூறிய சில சுவையான தகவல்களைக் கூறி விடுகின்றேன்!.


மதுரையில் நடைபெற்று வந்த மஹானந்த பாபா நாயகம் ரலியல்லாஹ்வின் ராத்திபுமஜ்லிஸிற்கு மாதந்தோறும் சென்று வருவதை ஒரு ஃபர்ளாகவே ஆக்கிக் கொண்ட வலிய்யுல் அஹ்ஸன்அவர்கள், தம்மோடுதனது மனைவியையும் அழைத்துச் செல்வது வழக்கம்.


ஒருமுறை மதுரைக்கு காலையிலேயே சென்றுவிட்ட வலிய்யுல்அஹ்ஸன் தம்பதியினர் மதுரை ஜங்­னுக்கு அருகிலுள்ள ராணி மங்கம்மாள் சத்திரத்தில் ஓர் அறைஎடுத்துத் தங்கினர்.  ராத்திபு மஜ்லிஸ்மஃரிபிற்கு பின்னர் தான் நடைபெறும்.  எனவே, இடைப்பட்ட நேரத்தில் மனைவியின்நச்சரிப்பால் மதுரை  மேலமாசி வீதியிலுள்ளசென்ட்ரல் தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்று விட்டனர்.


மாயா ஜாலங்கள் நிறைந்த அப்படத்தை பார்த்துவிட்டு, குளித்து நல்லாடையணிந்து மனைவியை அறையில் சூதானமாக இருக்க வைத்து விட்டு, ராத்திபு மஜ்லிஸிற்கு விரைந்தார் ஆலிம் அவர்கள்.


(ராணி மங்கம்மாசத்திரத்தில் அப்போதிருந்து 1990 வரை முஸ்லிம்களுக்கென தனிப்பகுதி / தனித்தளம்இருந்து வந்தது.  முஸ்லிம் தம்பதிகளன்றி வேறு யாருக்கும் அத்தளத்தில் அறை ஒதுக்கப்படுவதில்லை. பல ஊர்களிலிருந்து வரும் முஸ்லிம்கள் அங்குவந்து குழுமுவதால்  பாதுகாப்பாகவும், கலகலப்பாகவும் அத்தளம் இருக்கும்.)


இராத்திபுதொடங்குவதற்கு முன்னர்மஹானந்த பாபா அவர்களை தரிசித்துமுஸாபஹா செய்தார் வலிய்யுல் அஹ்ஸன்!.  அப்போதுமஹானந்த பாபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வலிய்யுல் அஹ்ஸன் அவர்களைப் பார்த்து, மனைவியை ஊரிலிருந்து அழைத்து வந்துசத்திரத்தில் தனியே விட்டு விட்டு வருவதும் தவறு; சினிமாப்படம் பார்த்து விட்டு ராத்திபு மஜ்லிஸிற்கு வருவதும் தவறு எனக் கம்பீரமாகக்கூறினார்கள்.


அப்போதுவலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் திடுக்கிட்டு மஹானந்த நாயகரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, இனிமேல் இந்த இரு தவறுகளை என்வாணாளில் ஒரு போதும் செய்யமாட்டேன் என உறுதியளித்தார்கள்!


இந்நிகழ்விற்குப்பின் மனைவியை அநாவசியமாக வெளியூர்களுக்கு அழைத்துச் செல்வதை முற்றிலும் நிறுத்திவிட்டார்கள் வலிய்யுல் அஹ்ஸன்!


அத்தோடு, திரைப் படம் பார்ப்பதை அடியோடு விட்டுவிட்டு அதற்குப்பின் ஒரு படம் கூட தம் வாணாளில் பார்த்ததில்லை என உறுதியாகச்சொன்னார்கள் வலிய்யுல் அஹ்ஸன்! தங்கள் வீட்டு டி.வி.யில் கூட எந்த நிகழ்ச்சியையும்பார்ப்பதில்லை! சில சமயம் செய்திகளை மட்டும் தூர நின்று கேட்பதுண்டு!


ஆனால், சங்கைமிகு ஷைகு நாயகமவர்களின் உரைகள்பதியப்பட்ட வீடியோ காட்சிகளை பலமுறை கண்டு பரவசப்படுவதும் - அவ்வுரைகளை தம்குடும்பத்தா ருக்கும் நமது முரீதுகளுக்கும் பலமுறை எடுத்துக் கூறுவதும் வலிய்யுல் அஹ்ஸன் அவர்களின்பொழுது போக்குகளாக அன்னவர் களின் இறுதிக் காலம் வரை அமைந்திருந்தது  குறிப்பிடத்தக்கது!


மஹானந்தநாயகரின் மகத்துவங்கள் சிலவற்றை வலிய்யுல் அஹ்ஸன் அவர்கள் கூறக் கேட்டுள்ளேன். ஒருமுறை காரைக்குடி நாடார் அண்ணன்அவர்கள்  மதுரையில் நடைபெறும் மாதாந்திரராத்திபு மஜ்லிஸிற்கு புறப்பட்டுக் கொண்டிந்தவருக்கு வயிற்றுப் போக்குஏற்பட்டது.  அந்தச் சிரமத்தையும் பொருட்படுத்தாதுநாடார் அண்ணன் அவர்கள் மஜ்லிஸிற்கு வந்து விட்டார்கள்.


ராத்திபு மஜ்லிஸ் தொடங்குவதற்கு முன்னர்மஹானந்த நாயகரை தரிசித்த போது,   “நாடார்! வயிற்றுப் போக்குஏற்பட்டால் அதற்குரிய மருத்துவம் செய்திட வேண்டாமா? என்றுகேட்டு விட்டு.   “இவ்வளவு சிரமத்திலும்இங்கு வந்திருப்பது உங்களுக்கு மகிழ்வாக இருக்கலாம்; எங்களுக்குகவலையாக இருக்கின்றது; மஜ்லிஸில் கலந்து கொண்ட முழுஅருட்கடாட்சம் உங்களுக்குக் கிடைத்து விட்டது; ஊருக்குப்புறப்பட்டு விடுங்கள்; ஓய்வு எடுங்கள்! என அனுப்பிவிட்டார்கள் மஹானந்த நாயகரவர்கள்!


குடும்பத்தாரிடம்கூட தனது உடல்நலக்குறைவை வெளிப்படுத்தாமலிருந்த நாடார் அண்ணன் அவர்களின் உடல் நலக்குறையை மஹானந்த நாயகரால் அகப்பார்வையில் வெளிப்படுத்தப்பட்ட நிகழ்வை நாடார் அண்ணன்“கண்ணாடி அவ்லியாவின் மகிமையே மகிமை தான்..”. என்பார்களாம்!

 

ஒருமுறை திண்டுக்கல்லிருந்து அஹ்மது ஹுஸைன் ஹாஜியார்அவர்கள் மதுரையில் இருந்த மஹானந்த நாயகரின் தரிசனத்திற்குப் புறப்பட்டார்.  அப்போது தனது நண்பர் தஞ்சாவூர் ஹஜ்ரத்என்பவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.


இருவரும்திண்டுக்கல் இரயில்வே ஜங்­னுக்கு வந்தனர்.  இரயில் ஏறுவதற்கு முன்னர் ஆப்பிள் பழக் கூடைஒன்றை வாங்கினார் ஹாஜியார்.  இரயில்புறப்பட்டு விட்டது! இருவரும் பேசிக் கொண்டு சென்றனர்.  சிறிது நேரத்தில் தஞ்சாவூர் ஹஜ்ரத், ஹாஜியார் ஆப்பிள் பழத்தை எடுங்கள்பசிக்கின்றது.... என்றார்.


ஆனால் ஹாஜியாரோ, இது பெரியவங்களுக்கு என்று நிய்யத் செய்துவாங்கப்பட்டது! அதனை நாம் புசிப்பது சரியில்லையே.... முறையில்லையே...என்றார்.  அதற்கு தஞ்சாவூர் ஹஜ்ரத்,ஒரு கூடைப் பழம் வாங்கியிருக்கீங்க... அதில் ஒன்று, இரண்டு குறைஞ்சா என்ன? எடுங்க ஹாஜியார், சாப்பிடலாம் என்றார்.


சரி... ஹஜ்ரத்சொல்றாரே என்று ஹாஜியாரும் கூடையிலிருந்து இரண்டு ஆப்பிள் எடுத்து ஹஜ்ரத்திடம்ஒன்று கொடுத்து விட்டு மற்றொன்றை தான் சாப்பிட்டு விட்டார்.


மதுரை இரயில்வேஜங்­ன் வந்தது.  இருவரும் இறங்கினர்.  ஒரு குதிரை வண்டியில் ஏறி மஹானந்த நாயகரின்இல்லத்தையடைந்தனர்.


நாயகரின் சன்னிதானத்தில் ஆப்பிள் கூடையை வைத்தவுடன்கூடையிலிருந்த இரண்டு ஆப்பிள்கள் குறைகின்றனவே? என்றார்கள் . இருவருக்கும்பலமான அதிர்ச்சி!


ஹாஜியார், நடந்தவற்றைக் கூறினார்!


பெரியவங்களைச்சந்திக்கச் செல்லுமுன்னர் காணிக்கையாக ஏதாவது ஒன்றை வாங்கிச் செல்ல வேண்டும்; அவ்வாறு வாங்கப்பட்டவற்றை அப்படியே கொண்டுசென்று பெரியவங்களுக்குக் கொடுத்து விட வேண்டும். இந்த அதபு முறைகளை ஆலிம்ஷாக்கள் தாம் பின்பற்றி மக்களுக்கும் சொல்லவேண்டும்...


ஆனால் இன்று என்ன நடக்கின்றது? ஒரு கூடைப்பழம்வாங்கியிருக்கீங்க... அதில் ஒண்ணு ரெண்டு குறைஞ்சா என்ன? என்றுஆலிம்ஷாவே கூறுவார்! அப்படித்தானே ஆலிம்ஷா? என தஞ்சாவூர்ஹஜ்ரத்திடம் நேருக்கு நேர் கூறியவுடன், தஞ்சாவூர்ஹஜ்ரத்திற்கு அதிர்ச்சியாகி விட்டது! ஆடிப்போய்விட்டார்.....


நான்இரயிலில் கூறியதனை அப்படியே மகான் கூறுகிறார்களே... எனப் பலமுறை கூறி தஞ்சாவூர்ஹஜ்ரத் அதிசயப்பட்டிருக்கின்றார்.

(அதிசயங்கள் தொடரும்)