• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  May 2012   »  சங்கை மிகு இமாம் ஷாபீஈ (ரஹ்) அவர்கள்


தொடர்.......

சங்கை மிகு இமாம் ஷாபீஈ (ரஹ்) அவர்கள்

அறபுத் தமிழில் : மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகு தமிழில் : கிப்லா ஹள்ரத், திருச்சி.


ஒருமுறை முஹம்மத் இப்னுல்ஹஸன் (ரஹ்) அவர்கள், இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களிடம் “ஸலாத்து ஹவ்ஃப்” என்னும் பயம்,கடினமான நேரத்தில், தொழக்கூடிய தொழுகையைப் பற்றிதமது கருத்தைக் கூறினார்கள்.


அதாவது திருக்குர்ஆனில் அல்லாஹு தஆலா,  (நபியே! நீங்கள் ஒரு கூட்டத்தாருடன்இருக்கும் போது, அவர்களுக்குக் கடுமையான பயம் உண்டானால்,அப்போது அவர்களுக்காக தொழுகையை நடத்த விரும்பினால், அவர்களில் ஒரு பகுதியினர் உங்களுடன் தொழட்டும்.  மற்றொரு பகுதியினர் விலகியிருந்து கொள்ளட்டும்”எனக் கூறுகின்றான்.


“இவ்வி­யம் ரஸூல் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தோடு முடிந்து விட்டது.  இப்போது இந்த வசனம், நமக்குப் பொருந்துமா?”என முஹம்மத் இப்னுல் ஹஸன் (ரஹ்) அவர்கள் கேட்டார்கள்.


அதற்கு இமாம்ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், “அதாவதுநீங்கள் சொல்வதைப் பார்த்தால், நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்களுடன் இருந்தால், அவ்வாறு தொழுவது விதி என்றும், இல்லாவிட்டால் விதி  இல்லை என்றும்கூறுகின்றீர்கள்.


அந்தத் தொழுகை தற்போதுஅவசியம் இல்லை எனக் கூறுகிறீர்கள்” எனக் கேட்டு விட்டு, “அப்படியல்ல! ‘குத்மின் அமவாலிஹிம் ஸதகதன்’(நபியே! அவர்களுடைய முதல்களில் நின்றும் தர்மத்தை எடுங்கள்.) என ஓர் வசனம்உண்டுதானே!


நீங்கள் கூறுவதைப் பார்த்தால், ரசூல் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்  அவர்கள் இருந்து வாங்கினால்தான், ஜகாத் கொடுக்க வேண்டும், இல்லையயனில் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை எனப் பொருள் வந்து விடும்.  எனவே, ரசூல் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்  அவர்களை நோக்கி, “நீங்கள் இரு கூட்டத்திற்கு இரு பிரிவுகளாக (பயந்த நேரங்களில்) தொழவையுங்கள்”என்பதாகக் கூறியது இக்காலத்திற்கும்- எக்காலத்திற்கும்பொருந்தும்.


அது போன்று, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி “அவர்களின்சொத்துகளிலிருந்து ஜகாத் வாங்குங்கள்” என்பதும் இக்காலத்திற்கும் எக்காலத்திற்கும்பொருந்தும் என விளக்கினார்கள் ஒரு முறை இமாம்ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் “நான் ஒருவருடனாவது இல்மில்  ஒரு பேச்சையும் நஸீஹத்துடையமுகத்தில் வெளியாக்குதலால், அதில் அல்லாஹு  தஆலா, ஹக்காகிய “ஸவாபு” என்பதனை என்னுடைய நாவில் மட்டும் தான்வெளியாக்குகின்றான்” என்பதாக நான் நினைப்பதில்லை.


இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்கள் பகுதாதிற்கு நூற்றுத் தொண்ணூற்று ஐந்தாவது வருடம் வந்தார்கள். அங்கே சகல முஸ்லிமானவர்களுக்கும் தேவையான கல்விதனைச் செம்மையாகப்போதித்தார்கள்.  பின்னர், அவ்விடமிருந்து மக்காவிற்குவந்தார்கள்.


அங்கு ஒரு மாதம்தங்கினார்கள்.  பின்னர், மிஸ்ருக்குச் வெளியாக்குதலால், அதில் அல்லாஹு  தஆலா, ஹக்காகிய “ஸவாபு” என்பதனை என்னுடைய நாவில் மட்டும் தான்வெளியாக்குகின்றான்” என்பதாக நான் நினைப்பதில்லை.


இமாம் ஷாஃபிஈ(ரஹ்) அவர்கள் பகுதாதிற்கு நூற்றுத் தொண்ணூற்று ஐந்தாவது வருடம் வந்தார்கள். அங்கே சகல முஸ்லிமானவர்களுக்கும் தேவையான கல்விதனைச் செம்மையாகப்போதித்தார்கள்.  பின்னர், அவ்விடமிருந்து மக்காவிற்குவந்தார்கள்.  அங்கு ஒரு மாதம் தங்கினார்கள்.  பின்னர், மிஸ்ருக்குச்




 

(இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்)

 

so-h)$�-ox