இஸ்லாத்தில் ஆன்மீக நெறி
- காயல் ஆலிமா பேரவை -
இஸ்லாத்தை அடைதல் என்பது மார்க்க ஞானத்தை நிறைவாக அறிந்துகொள்வதாகும். இயற்கையிலேயே ஞானவிளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உள்ளத்திற்கு உள்ளது. மனிதனுக்கு அறிவென்பது இயற்கையில் அமைந்தஒன்று. இறைவனின் சிந்தனையை வளர்த்துக் கொள்ளும் அறிவை மார்க்க ஞானம் என்பர்.
உள்ளம் கண்களைப் போன்றதென்றால் அறிவு பார்வைத்திறனாகும். பார்வைத் திறன் என்பதுநுட்பமானதால் குருடர்களிடம் இருப்பதில்லை. பார்வையிலும் உள்பார்வை. வெளிப்பார்வை என இரண்டு உண்டு. இவைஒன்றுபோலத் தோன்றினும் தன்மை, தரம்இவற்றால் வேறுபட்டனவாகும்.
உள்பார்வைகண்ணின் உண்மைத் தன்மைக் குரியதாகும். இறைவனின் திருத்தூதர்களாம் நபிமார்களின் வாழ்வையும் வாக்கையும் எழுதாச்சட்டங்களாகக் கொண்டு பின்பற்றுவதின் மூலம் பெறுகின்ற அறிவிற்கு மார்க்க ஞானம்என்பர். இறைவனின் திருமறையைத் தெளிவுபடஉணர்ந்தும், நபிமார்களின் வழிமுறையைப் போற்றி நடக்கும்போதும்மார்க்க ஞானம் வளர்ச்சி அடைகின்றது. தனக்குள் அறிவு ஒன்றையே உயர்ந்ததெனக் கருதி வாழ்ந்தால் அறிவிலி ஆவான்.
மனஅமைதி இன்றி மனித வாழ்வு அமையும் மனிதனுக்கு மனஅமைதி தருவது நபிமார்களின் ‘அஹ்மாலெஸாலிஹாத்’, எனும் நற்செயல்களும், வணக்க வழிபாடுகளுமேயாகும். இம்மைவாழ்விற்கும் மறுமை வாழ்விற்கும் ஒரே காலத்தில் மனிதன் தன்னை ஆயத்தப்படுத்தவேண்டியுள்ளான். இவை இரண்டும் இருவேறுமுனைகள். ஒன்றைத் தொட முயலும்போதுமற்றொன்றில் முயற்சி குன்றும்.
அறிவின்சக்தி இரண்டையும் முழுமையாகப் பெற்றுத்தர இயலாது. மனிதன் மறுமையைப் புறக்கணித்து இம்மை வாழ்விற்கே தன்அறிவைப் பெரிதும்பயன்படுத்துகிறான். இறைவன் தன்திருமறையில் “இவர்களுடைய கல்விஞானம் இவ்வளவுதான் செல்கிறது” என இவர்களைப் பற்றிக்குறிக்கின்றான்.
இம்மை மறுமைஇருவித ஞானமும் இறைவனின் பேரருள் பெற்றவர்களுக்கே கிட்டும். “அல்லாஹ் யாவையும் மிக்க அறிந்தோனும்ஞானமுடையோனுமாயிருக்கிறான்”. என்றும் “நிச்சயமாக இறைவன் யாவரையும் மிகைத்தோனும்ஞானமுடையவனுமாகவும் இருக்கிறான்”. என்றும்இறைமறை கூறுகிறது. இம்மைசபிக்கப்பட்டது. சகல பாவங்களுக்கும்மூலமானது.
இம்மையை நேசிப்பவன் மறுமையைப் பழுதாக்கிவிட்டவனாவான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்நவின்றுள்ளார்கள். இம்மையின்நிலைகுறித்தும் மறுமையின் வாழ்வு குறித்தும் நிறைவுற அறிவதே மெய்ஞ்ஞானம்எனப்படும்.
மெய்ஞ்ஞானம்என்பது உண்மையை அறிந்து உணரும் நிலையாகும். இது ஏழு பிரிவுகளில் விளக்கம் பெறுகின்றது.
ஞான (ஏணி) ப் படிகள்!
8 இறைவனின்பல்வேறு நிலைகளையும், திருப்பெயர்களையும்,சிஃபத்துகளையும் அறியும் ஞானம்.
8 இறைவனின்தஜல்லியை (ஒளி) எல்லாப் பொருள்களிலும் வெளியாக்கும் ஞானம்.
8 தன்அடியார்களுக்கு வாழ்வின் கடமையாக்கப்பட்டுள்ள ரீஅத்தின் ஞானம்.
8 இறைவனின்தாத்தைப் (உள்ளமை) பற்றிய ஞானம்.
8 மனிதனின்உள்ளமையைப் பற்றிய ஞானம்.
8 இறைவன்படைத்துள்ள உலகங்கள் குறித்த ஞானம்.
8 ஆன்மாவைப்பற்றிப் பிடித்துள்ள நோய்களையும் அவற்றிற்கான நிவாரணிகளையும் குறித்த ஞானம்.
முழுமையான ஞானம்
இவ்வேழுநிலைகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் இறைவனின் நிலை குறித்த ஞானத்தை அறிய தஷ்பீஹ் தன்ஸீஹும் அறிதல்வேண்டும். தன்ஸீஹ் என்பது அல்லாஹ்வைஒப்புவமைகளை விட்டும் தூய்மையாக்குவதாகும். இறைவனின் உள்ளமையைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்ற ஞானத்தைப் பெறுவதுதன்ஸீஹுல் கதீமாகும். இறைவன் யாரையும்பெறவுமில்லை, அவனை யாரும் பெறவுமில்லை எனும் ஞானமாகும்.
தஷ்பீஹ் என்பது இறைவன் ‘ளாஹிர்’, (வெளிப்படை) ஆனவன்அவனை ஒப்புவமை கொண்டு அறியும் ஞானமாகும். அல்லாஹ்வை, தஷ்பீஹ் இல்லாமல் தன்ஸீஹாக்கினாலும்தன்ஸீஹ் இல்லாமல் தஷ்பீஹாக்கினாலும் அவனை மட்டுப்படுத்தியதாகிவிடும்.
இறைவன் ளாஹிராகவும் (பகிரங்கமானவன்)பாத்தினாகவும் (அகமானவன்) இருக்கின்றான். இவை இரண்டையும் இணைத்து அறியும் ஞானம் பெறுகின்றபோது நேர்வழியும், பிறருக்கு வழிகாட்டும் தலைçயும் அடைவான்.
சூஃபித்துவம் (தசவ்வுஃப்)
சூஃபித்துவம்என்பது உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதாகும். ஓர் உள்ளத்திலிருந்து இன்னோர் உள்ளத்திற்கு ரசாயன மாற்றம் செய்வதேஆகும். சூஃபித்துவத்தை முழுதாக விளக்குவதுகுருடர்கள் யானையைக் கண்ட காட்சியாகும். மெளலானா ரூமி (ரஹ்) சூஃபித்துவம்என்பது ‘தன்னை முழுமையாக அடக்கித் திருத்தி அமைத்துக் கொள்வதாகும். ஒன்றையும் சொந்தமாக்கிக் கொள்ளாமலும்ஒன்றிற்கும் சொந்தமாகாமலும் இருப்பதாகும்.
அதுஒரு தத்துவநிலை. உன்னில் இறந்து விடும்படி இறைவன் உன்னைச்செய்து அவனில் உன்னை வாழும்படிச் செய்தலாகும். குறைவுள்ள இந்த நிலையில்லா உலகைப்பார்த்து விட்டுக் குறைவே இல்லாத இறைவனைப்பற்றிய சிந்தனையில் இருப்பதேசூஃபித்துவம். தஸவ்வுஃப் என்பது எரித்து விடும்படியான ஒரு மின்னலைப்போலிருக்கின்றது.
அல்லாஹுத்தஆலாவுடையஸூஹுபத்தில் (எதிரில்) கவலையற்று அமர்ந்திருப்பது போலாகும். மனிதனானவன் வுஜுதில் (உலக வாழ்வில்) அவன்ஆதியில் தோன்றாத முன் எப்படி இருந்தானோ அப்படி இருப்பதாகும். தன்னுடைய சக்திகளையும் நஃப்சுகளுடையஉணர்ச்சிகளையும் தன் பாதுகாப்பில் அடக்கிவைத்துக் கொள்வதாகும்.
காதிரியாதரீக்காவின் தலைவரும் சூஃபி ஞானிகளின் தலைவருமான முஹிய்யுத்தீன் அப்துல் காதிர்ஜீலானி (ரலி) அவர்கள் தஸவ்வுஃப் பற்றிக்குறிப்பிடும்போது எட்டுப் பண்புகளைத் தன்னுள் கொள்வதே தஸவ்வுஃப் ஆகும் எனறு கூறியுள்ளார்கள்.
1. இப்ராஹீம் நபி(அலை) அவர்களின் வள்ளன்மை (ஸகாவத்)
2. இஸ்ஹாக் நபி(அலை) அவர்களின் உள்ளத்தைக் கொண்டு மனநிறைவு அடையும் இயல்பு (ரிளா)
3. அய்யூப் நபி(அலை) அவர்களின் பொறுமை (ஸப்ர்)
4. ஜகரிய்யா நபி(அலை) அவர்களின் மன்றாடும் இயல்பு (முனா ஜாத்து)
5. யஹ்யா நபி (அலை)அவர்களின் இறைவனை அணுகும் பண்பு (குர்பத்)
6. மூஸா (அலை)அவர்களின் நீண்ட அங்கி அணியும் நிலை.
7. ஈஸா நபி (அலை)அவர்களின் இறைவழியில் பயணம் செய்யும் பண்பு (ஸஃபர்)
8. முஹம்மது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஏழ்மையைத் (ஃபக்ர்) தம்பெருமையாகக் ( ஃபஹர் ) கொள்ளும் பண்பு.