• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  May 2012   »  தொப்பி அணிவது இஸ்லாமியரின் அடையாளம்!


தொப்பி அணிவது இஸ்லாமியரின் அடையாளம்!


காலம் காலமாய் முஸ்லிம்களின்அடையாளச் சின்னமாய் விளங்கி வந்த தொப்பியும் இன்றைய நவீன குழப்பவாதிகளின் கைகளில் குரங்குகையில் சிக்கிய பூமாலையாக மாற்றப்பட்ட வேதனையை எண்ணி வெட்கித் தலை குனிகிறோம்.


ஷரீஅத்தில் ஆண், பெண் மறைக்க வேண்டிய பகுதிகள் எவை?


“ஆதமுடையமக்களே! உங்களுடைய வெட்கஸ்தலங்களை மறைக்கும்படியான ஆடையையும், அலங்காரத்தையும் உங்கள் மீது திட்டமாக நாம்இறக்கியிருக்கிறோம்”.

(ஸூரா அஃராஃப்7:26)


“ ஆள் பாதி ; ஆடை பாதி” என்றும், “ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” என்றும் கூறப்படுகின்றன. ஆக ஒரு மனிதனின் உயர்வு, தாழ்வு ஆடைகளை வைத்தும் கணிக்கப்படுகின்றன.  எனவேதான் அல்லாஹ்அவசிய ஆடையையும், அதையும் மிஞ்சும் அலங்கார ஆடையையும் வழங்கியுள்ளதாக மேற்காணும் வசனத்தின் மூலம் தெளிவுபடுத்துகின்றான்.


ஆண்கள் கட்டாயமாக தொப்புள் முதல் முழங்கால் முடிய மறைத்தாக வேண்டும்.  மேலும் பெண்கள் இரண்டு கைகளின் மணிக்கட்டுமற்றும் முகத்தைத் தவிர உள்ள அனைத்து பாகங்களையும் மறைப்பது கட்டாயக் கடமையாகும்.


சிந்தனையாளர்களே! பனியன், சட்டை போன்ற அனைத்து விதமான நாம் அணியும் ஆடைகளும் அலங்கார ஆடைகளாகும் என்பதைப் போலவே தொப்பியும் அலங்கார ஆடையேயாகும்.  அலங்கார ஆடையான தொப்பியை அணியக் கூடாது என்றுகூறிவரும் கூட்டத்தினரைப் பார்த்து “இனிமேல் யாரும் சட்டை, பனியன்மற்றும் டை போன்ற ஆடைகளை அணியக் கூடாது என நீங்கள் ஏன் சொல்வதில்லை?”  என்று கேளுங்கள்! 


கடமையில்லாத ஆடைகள்தானே இவை.  கட்டாய ஆடைகள் அல்லவே! எனவே இவர்கள் பனியன்,சட்டை , மேலங்கி, டை,முழங்காலுக்குக் கீழ் கரண்டைக்கால் வரை லுங்கி, பேண்ட் இவைகளை அணியாத கூட்டங்களையும் உருவாக்கச் சொல்லுங்கள்! (தொழும்போது.... ) ஆதமின் சந்ததிகளே! ஒவ்வொரு தொழுகையும்ஆடை முதலியவற்றால் உங்களுடைய அலங்காரத்தைப் பற்றிப் பிடியுங்கள்.

(ஸூராஅஃராஃப்7 : 31)

 

மேலே காணும் வசனத்தின் மூலம் தொழுகை நேரங்களில்அதிகப்படியான அலங்கார ஆடைகளாக உள்ள சட்டை, தொப்பி போன்றவற்றை இஸ்லாம் வரவேற்கின்றது என்பதனை சீரானசிந்தனையுள்ளவர்கள் புரிந்து கொள்ளலாம்.


இறைவன் வழங்கிய ஆடையை தடுப்பவர் யார்?


“(ஆடை முதலிய)அலங்காரத்தையும், அல்லாஹ் தன்அடியாளர்களுக்காக வெளிப்படுத்திய அதனையும், இன்னும் உணவில்மணமான (ஹலாலான)வற்றையும் ஹராமாக்கி வைக்கிறவன் யார்?”

(ஸூரா அஃராஃப்7 : 32)


எனவே, தொப்பி, தலைப்பாகை என்பது முஸ்லிகளின் அலங்கார ஆடையேயாகும். எனவே, அதனைத் தடுப்பது அல்லாஹ் ஹலாலாக்கிய ஆடையைத்தடுக்கும் செயல் என்பதை மேலே  காணும் வசனம்உணர்த்திக் காட்டுகிறது. இஸ்லாத்தில் தொப்பியும், தலைப்பாகையும் உண்டு.


இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர்அணிய வேண்டிய ஆடையைப் பற்றிக் கேட்டார். அதற்கவர்கள், “சட்டை,தலைப்பாகை, கால்சட்டைகள், தொப்பி, பச்சைச் சாயம் தோய்த்த ஆடை அல்லது சிவப்புகுங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது.


பாதஅணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால் வரை)உயரமான காலுறைகளை அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறைந்ததாக ஆகும் வரை அவ்விரண்டையும்வெட்டி விடட்டும்” என்றார்கள்.

(புகாரி, பாகம் 1)


இந்த  ஹதீஸில் அணியக் கூடாத ஆடைகள் எனபட்டியலிட்டபொழுது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தலைப்பாகையையும், தொப்பியையும்இஸ்லாமியர்கள் அணியும் பழக்கம் இருந்ததால்தான் இஹ்ராம் உடைய நேரத்தில் அதனை அணியக்கூடாது என்று சொன்னார்கள் என்பதை முஃமின்களே! புரிந்து கொள்வீர்!


இரும்புத் தொப்பி அணிந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள்

 

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் தமது தலையில் இரும்புத்தொப்பி அணிந்தபடி மக்காவிற்குள் நுழைந்தார்கள்.

(புகாரி, 2ஆம் பாகம்)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொப்பி கீழே விழுந்தது


இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : உயிர் நீத்த புனித தியாகிகள்நான்கு வகையினர் உள்ளனர்.  (அவர்களில்முதல் வகையைச் சார்ந்தவர்) அழகிய ஈமானைப் பெற்றவர்.  போர்க்களத்தில் எதிரியைச் சந்தித்தார்.  இறைவனை உண்மைப்படுத்தினார்.  மேலும் (எதிரியால்) கொல்லப்பட்டார்.  (சொர்க்கத்தில் மிக்க  மேலான இடத்தில் இருக்கும்) இவரை மக்கள்தங்களின் கண்களை உயர்த்தித்தான் பார்ப்பார்கள். இவ்வாறுதான்” (என்று கூறி செய்து காட்டினார்கள்).  அப்போது அவர்கள் அணிந்திருந்த தொப்பி கீழேவிழுந்தது.

அறிவிப்பவர் : ஃபழாழா (ரலி)நூல் : திர்மிதீ


முஸ்லிம்களுக்கும் காபிர்களுக்கும் உள்ள வேறுபாடு


ருகானா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னதாக அறிவிக்கிறார்கள் : “நமக்கும் காபிர்களுக்கும் மத்தியில்உள்ள வேறுபாடு தொப்பியின் மீது தலைப்பாகை அணிவதாகும்.”

(திர்மிதீ))


இஸ்லாமியசமுதாயமே! சிந்திப்பீர்! இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களை சிதைக்கும் இவர்களாஇந்தச் சமுதாயத்திற்கு நன்மை செய்பவர்கள்? எனவே, தொப்பி அணிவோம்! முஃமின்களாக வாழ்வோம்!!


குழப்பான காலம்


நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(மறுமை நாள் நெருங்கும்போது) காலம்சுருங்கிவிடும்.  செயல்பாடு (அமல்)குறைந்து போய்விடும்.  மக்களின்உள்ளங்களில் கஞ்சத்தனம் உருவாக்கப்பட்டுவிடும். குழப்பங்கள்  தோன்றும்.  ஹர்ஜ் பெருகிவிடும்” என்று கூறினார்கள்.  ஸஹாபாக்கள் ‘அல்லாஹ்வின் திருத்தூதரே! ஹர்ஜ்என்றால் என்ன?’ என்று கேட்டதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்  “கொலை, கொலை” என பதிலளித்தார்கள்.


முஃமின்களே!நாம் வாழும் காலம் எப்படிப்பட்டது என்பதைக் கவனியுங்கள்! மேலே உள்ள ஹதீஸ் எப்படி பொருந்தி வருகிறது என்பதைச்சிந்திப்பீர்! பள்ளிக்குப் பள்ளி குழப்பவாதிகளின் கூட்டம் பெருத்துவிட்டது.  அமல்கள். செய்வதையே தடுக்கிறார்கள்.  1400 ஆண்டு காலமாக செய்து வந்த நல்ல செயல்களை வேண்டாம்என்கிறார்கள்.  ‘அமல்கள் குறைந்துவிடும்’என்று நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் சொன்னதைப் போல்.......


தராவீஹ் தொழுகை20 வேண்டாம் எனக் கூறி 12- ஐக் குறைத்து, 8 ஆகத் தொழுங்கள் என்றார்கள்.  கூட்டு துஆ என்ற அமலைச் செய்யாதீர்கள்! தொப்பி அணிகின்ற சுன்னத்தான அமலைச் செய்யாதீர்கள்! ஜியாரத் என்ற சுன்னத்தானஅமலைச் செய்யாதீர்கள்! மரணித்தவர்களுக்காக குர்ஆன் ஓதி நன்மையைச் சேர்த்துவைக்காதீர்கள்! புனிதமான இரவுகளில் பள்ளிவாசலில் ஒன்றுகூடி அல்லாஹ்வுக்காகசெய்யும் தஸ்பீஹ்,


நபில் போன்ற நல்ல அமல்களை செய்யாதீர்கள்!நபிமார்கள், அவர்களின் துணைவியரைப் போல வாழுங்கள்!’ என்றுமணமக்களை வாழ்த்தி துஆ செய்யாதீர்கள்! (பெருமானார் சொன்னாலும் சரி; அல்லாஹ் சொன்னாலும் சரி) ஸஹாபாக்களைப் பின்பற்றாதீர்கள்! மவ்லித் ஓதியும், மீலாதுவிழா நடத்தியும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழாதீர்கள்!கடமையான ஐவேளைத் தொழுகைகளை விட்டுவிட்டால் களாச் செய்யாதீர்கள்! உங்கள் பொருளுக்குஒரு தடவை மட்டும் ஜகாத் கொடுங்கள்! வருடா வருடம் கொடுக்காதீர்கள்!


இப்படியயல்லாம்கூறி, நல்வணக்கத்தைக்குறைத்துவிட்டார்கள். 1400 ஆண்டு காலமாகநாம் பின்பற்றி வந்த இந்த அமல்களைத் தடுத்து, மார்க்கத்தைக்குழப்பி ஆதாயம் தேடுபவர்கள் யார்? முஃமின்களே! சாலிஹீன்களானநமது இமாம்களை உதாசீனப்படுத்திக் கொண்டிருக்கின்ற மத்ஹபு மறுப்பாளர்கள்தான்இப்படிப்பட்ட பாவமான காரியங்களைத் தொடர்ந்து செய்கின்றார்கள். எனவே, எச்சரிக்கையுடன்இவர்களிடமிருந்து தவிர்ந்து கொள்வீர்!


அஹ்லுஸ்ஸூன்னத் வல் ஜமாஅத்தைப் பற்றிப் பிடிப்பீர்! எல்லாம் வல்ல இறைவன் நேரிய வழியினைநம் அனைவருக்கும் அருள்வானாக! ஆமீன்! 

 

தொகுத்தவர் : மெளலவி, அல்ஹாஜ், முஹம்மது சலீம் ஸிராஜி

தலைமை இமாம், ஜும்ஆ மஸ்ஜித், பாடி, சென்னை -50