• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  May 2012   »  உமர் (ரலி) புராணம்

உமர் (ரலி) புராணம்

ஆசிரியர்

ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன்மெளலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்

 

             சற்றுயர் மேடுதன்னிற்

                  றானையின்றலைவ ரான

            மற்றிகழ்ஸுபியா னென்பார்

                  மற்றவரோடு நின்று

            ஒற்கமிலாத ஹுபல்

                  உயர்கவென்றேத்தி னாரே

            புற்கதிலாத அல்லாஹ்

                  பூரணனுயர்ந்தா னென்றே.

 

கொண்டுகூட்டு :

    சற்று உயர்மேடு தன்னில் தானையின் தலைவரான மற்று இகழ் ஸுப்யான் என்பார் மற்றவரோடு நின்றுஒற்கம் இல்லாத   ஹுபல் உயர்க என்றுஏத்தினார். புற்கு அது இல்லாத அல்லாஹ் பூரணன் உயர்ந்தான் என்று (முஸ்லிம்கள்கூறினர்)

பொருள் :

    படைத்தலைவரானபலரும் இகழ்கின்ற ஸுபியான் என்பார் சற்றே உயர்ந்த     மேட்டில் மற்றவர்களோடு நின்று ஹுபல் உயர்கவென்று வாழ்த்தினார். சிறுமையற்ற அல்லாஹ் பூரணன். உயந்தான் என்று (முஸ்லிம்கள் பதிலாகக் கூறினார்கள்).

குறிப்பு :

    தானை : படை
, மற்று : அசைநிலை.  ஒற்கம் : வெட்கம், அடக்கம்.  ஹுபல் : எதிரிகளின் கடவுள். ஏத்தல் : புகழ்தல்.புற்கு : சிறுமை, குறைவு.