• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2012   »  May 2012   »  தமிழகத்து வலிமார்கள்

தமிழகத்து வலிமார்கள்

 

அப்பா அவர்கள் தங்கள் தந்தையாரைப்பற்றிக் குறிப்பிடும் போது இவ்வாறு கூறுகிறார்கள்.      “என் தந்தை அஹமது எனும் பெயர் கொண்டவர். மக்கள் அவரை வெள்ளை அஹமது என்று தான் கூப்பிடுவர்கள். காரணம் அவரின் உள்ளம் ஆபாசம் என்ற கருமையை விட்டும்தூய்மையாய் இருந்தது”.


      “அவர் இறந்தவர்களைப் பற்றியும் தம் இறப்பைப் பற்றியும் தினமும் நினைந்தவண்ணம் இருப்பார்”.


      “அவர் பெரும்பாலும் இரவில் நின்று வணங்குவார்.  அல்லாஹ்வை நினைத்து பயந்து அழுவார்”.


      “பறவைக்கு அதன் இருபுறங்களிலும் இறக்கைகள் இருப்பதுபோல் அவருக்கு அல்லாஹ்வின்தண்டனை மீது அச்சமும் அவனின் பேரருளின் மீது ஆதரவும் சமமாக இருந்தது”.


    அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது புகழ்ப்பாக்களையாராவது அவர் முன் பாடிவிட்டால் போதும் அண்ணலார் மீது அளவு கடந்த பாசத்தால் சப்தமிட்டுஅலறி அப்படியே மயங்கி விழுந்து விடுவார்.  அப்போது ஹூ ஹூ என்று கூறிக் கொண்டு அண்ணல் தம் அருகில்இருப்பதுபோல் சுருண்டு கிடப்பார்”.


    ”மஃரிபுக்கும் இஷாவுக்கும் இடைப்பட்ட நேரத்தை ஒருபோதும் வீணாக கழிக்கவேமாட்டார்.  இறை தியானத்தில் ஈடுபடுவார்” என்றுமிகச் சிலாகித்து இரங்கற் பாவில் கூறியுள்ளார்கள்.

    இன்னும் அவர்கள் தம் அன்னையார் மீதும் இரங்கற்பா பாடியுள்ளார்கள்.அதில்
“என் தந்தையார் இறந்து முப்பது ஆண்டுகளுப்பின் என் அன்னையார் இறந்தார்.  என் தந்தையார் மறைந்த துக்கத்தை என் தாயாரின் முகத்தைப்பார்த்து மறந்து வந்தேன்.  ஆனால் இன்று என்அன்னையாரும் என்னை விட்டுப் போய்விட்டார்கள். இப்போது நான் இருவரையும் இழந்து நிற்கிறேன்.

    எல்லாப் புகழும் இறைவனுக்கே! என்றும்
, என் அன்னையார்பெரும்பாலும் என் தந்தையார் பின் நின்று தொழுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  அவருடன் சேர்ந்து இவரும் இறைவனை தியானித்து வந்தார்.


      “என் தந்தையார் ஏற்கனவே தொழுது முடித்திருந்தாலும் என் தாயார் தாமதமாக வரநேரிட்டால் என்தாயாருக்காக  மீண்டும் தொழ ஆரம்பிப்பார்”.


      “என் தாயார் சுபுஹு தொழுகைக்குப் பிறகு தினமும் திருக்குர்ஆனை ஓதும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்”.


      “ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை திருக்குர்ஆனை ஓதி முடித்து விடுவார்.  புனித ரமளான் மாதத்தில் மட்டும் பலமுறை திருக்குர்ஆனைஓதி முடிப்பார்”.


      “அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய முன்மாதிரியைபேணி நடந்து விடுவார்” என்பதாக சிலாகித்துக் கூறுகிறார்கள்.


      மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் அரபுத் தமிழில் எழுதிய  மாபெரும் ஃபிக்ஹ் நூல் “மகானி” என்பதாகும், அது அரபுமலையாளத்தில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அவர்கள் எழுதிய  மற்றொரு ஃபிக்ஹ் நூல்“பத்ஹுத்தையான்” என்பதாகும். அது ஆங்கிலத்திலும்மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. இவைகள்தவிர அவர்கள் பத்ஹுஸ் ஸலாம், பத்ஹுல் மதீன் என்ற பெயருடன் அரபுத் தமிழில் ஃபிக்ஹ் நூல்கள்எழுதியுள்ளார்கள்.


       அவர்கள் எழுதிய மற்றொரு அரபுதமிழ்நூல் ‘தலைபாத்திஹா’ ஆகும்.  இதை இன்று வரை பெண்கள்மிகவும் பயபக்தியுடன் ஓதிவருவார்கள் என்பது கண்கூடு.  இதில் அவர்கள் அன்னை பாத்தி முத்து ஜஹ்ரா (ரலி)அவர்களின் பொருட்டினாலும் நபிமார்கள், வலிமார்கள் பொருட்டினாலும் இறையருள் வேண்டும்பாக்களாக இந்த தலைபாத்திஹாவை சமைத்துள்ளார்கள்.

(தொடரும்)