தியாகிகள் தலைவர் இமாம் ஹுஸைன் (ரலி)
ஹள்ரத் அலி (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.
எனக்கு ஹஸன் (ரலி) பிறந்த போது அவருக்கு ஹம்ஜா எனப் பெயர்வைத்தேன்.ஹுஸைன் (ரலி) பிறந்த போது அவருக்கு (என் சகோதரர்) ஜஃபர் (ரலி) பெயரிட்டேன். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை அழைத்து வரச் செய்து இவ்விருவரின்பெயர்களையும் மாற்றி விடுமாறு நான் கட்டளையிடப்பட்டேன் எனக்கூறி ஹஸன்- ஹுஸைன் எனப் பெயரிட்டார்கள்.
(அஹ்மத் : அபூயஃலா ஹாகிம்)
தங்கள் குடும்பத்தாரில் தங்களுக்கு மிகப்பிரியமானவர் யார் எனபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டபோது ஹஸன் - ஹுஸைன் (ரலி) என அருளினார்கள்.எப்போதும் பெருமானார் அவர்கள் பாத்திமா நாயகியிடம் “என் (பேரப்) பிள்ளைகளை அழைத்துவாருங்கள்” எனக்கூறி அவர்கள் இருவரையும் அணைத்து முகரும் வழக்கம் கொண்டிருந்தார்கள்.(அனஸ் இப்னு மாலிக் )
ஆயிஷா (ரலி) அவர்களின்இல்லத்திலிருந்து புறப்பட்டு பாத்திமா (ரலி) அவர்களின் வீட்டை நோக்கி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் சென்ற போது, ஹுஸைன் (ரலி) அவர்கள் அழும் ஓசையைக் கேட்டார்கள். அப்போது “அவர் அழுவது எனக்கு துன்பமளிக்கிறது என்பதைஅறியமாட்டீரா?” என வினவினார்கள்.
ஹஸன் ஹுஸைன் (ரலி) இருவரும் சுவனவாதிகளில் இளைஞர்களின் தலைவர்களாயிருப்பார்கள்என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்அருளினார்கள்.
உம்மாரா இப்னு உமைர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். இமாம் ஹுஸைன்(ரலி) அவர்களைக் கொலை செய்த உபைதுல்லாஹ் இப்னு ஸியாத் மற்றும் அவனது தோழர்களின் வெட்டப்பட்டதலைகள் பள்ளிவாசல்களில் பார்வைக்காக வைக்கப் பட்டிருந்த போது அங்கு கூடியிருந்தவர்கள்“இதோ வந்து விட்டது. இதோ வந்து விட்டது” எனக்கூறிக் கொண்டிருந்தார்கள். அது என்னவென நோக்கிய போது எங்கிருந்தோ ஒரு பாம்பு வந்துஇப்னு ஸியாதின் தலையைச் சுற்றி அவனது மூக்கு ஓட்டைக்குள் புகுந்து சிறிது நேரம் இருந்துவெளியேறி எங்கோ மறைந்து விட்டது, பின்னர் மக்கள் “இதோ வந்து விட்டது” என அலற... அந்தப் பாம்பு வந்துஅதே போலச் செய்துவிட்டு எங்கோ மறைந்து விட்டது. இதுபோல் இரண்டு அல்லது மூன்று முறை நடந்தது.