• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Nov 2011   »   விழாச் சொற்பொழிவுகள் - 2


விழாச் சொற்பொழிவுகள் - 2


கண்ணியத்திற்குரிய ஸய்யித் அலி மெளலானா அவர்கள் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து.....

​ 

முரீதீன்களே! அஹ்பாபுகளே, மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரியின் நிர்வாகிகளே! ஆசிரியர்களே! மாணவச் செல்வங்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் என் அன்பு ஸலாத்தை உரித்தாக்கியவனாக என்னுரையைத் தொடங்குகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

இன்று நாம் மிகச் சிறப்பான தினத்திலே கூடியிருக்கின்றோம்.  வி­யம் தெரிந்த நம்மைப் போன்ற முரீதீன்களுக்கு, தங்கள் ஷைகு நாயகத்தின் பிறந்தநாள் தான் பெருநாள் என்பதை நாம் அறிவோம்.  அந்த வகையில், இந்தப் பெருநாள் வாழ்த்துக்களையும் இங்கே பதிவு செய்வதிலும் பகிர்ந்து கொள்வதிலும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.  வி­யம் தெரிந்த - ஞான விளக்கம் பெற்ற -செழிப்பான உங்களைப் போன்றவர்கள் மத்தியிலே, நாமெல்லாம் வி­யம் விளங்கவும், ஞானம் பெறவும் காரணகர்த்தாவாக இருக்கக்கூடிய சிறப்புக்குரிய ஷைகு நாயகமவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதிலும், அவர்களைப் பற்றிப் பேசுவதிலும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். நமது வாப்பா நாயகமவர்கள் தங்கள் முரீதீன்கள் தகுதிபற்றி அனைவரையும் அவ்லியாக்கள் என்று அருளி  உள்ளார்கள்.  அவ்வாறான உயர்வுக்கு நாம் அப்படி என்ன செய்து விட்டோம்? 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அக்கால வழக்கப்படி ஒரு சிறு குன்றின் மீது ஏறி. நின்று, மக்களை அழைத்தார்கள்.  பின்னர், அங்கே குழுமியிருந்த கூட்டத்தினரைப் பார்த்து, இந்தக் குன்றுக்குப் பின்னாலிருந்து ஒரு கூட்டம் நம்மைத் தாக்க வருகின்றது என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா, என்று கேட்டார்கள். அதற்கு அக்கூட்டத்தினர், “நாங்கள் தங்களை அல் - அமீனாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.  தாங்கள் பொய்யா சொல்லப் போகிறீர்கள்? தாங்கள் சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்கின்றோம் என்றனர்.  அடுத்ததாக, உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அல்லாஹ் ஒருவன், நான் அவனது திருத்தூதராய் இருக்கின்றேன் “என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று  கேட்டார்கள்.  உடனே, அந்தக் கூட்டத்தில் சலசலப்பு.  கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து சென்றார்கள்.  அவர்கள் அந்தக் கூட்டத்தில் திருக்கலிமாவை - தீனை முழுமையாக ஏற்றுக் கொள்வதில் தயக்கம்.  ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

இந்தச் சம்பவத்தின் மூலம் அல்லாஹ், உண்மையான விசுவாசிகள் யார்? அவிசுவாசிகள் யார்? என்பதைக் காட்டித் தந்தான்.  அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்அமீன் என ஏற்றுக் கொண்டார்கள்.  ஆனால். ஈமான் கொண்டிருந்தார்களா? என்றால்  இல்லை.

உண்மையான ஈமான் என்றால் என்ன? என்பதை உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் வாழ்க்கைச் சம்பவங்கள் மூலம் நிரூபித்துக் காண்பித்தார்கள்.  உயிருக்கு மேலாக உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஈமான் கொள்வது தான் உண்மையான ஈமான் என்பதாக இஸ்லாத்தில் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.  அந்தவகையில, நாமெல்லாம் மிகவும் சிறப்புப் பெற்றவர்கள்.   மற்றவர்கள் ஈமான் கொண்டிருக்கிறோம் எனச் சொல்வதைவிட, நமது ஈமான் நிச்சயமாக மேலானது.  ஏனென்றால்,நமது சர்தார் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயிருக்கும் மேலாக - உண்மையாக நேசிக்கின்றோம்.  மற்றவர்கள்  அவ்வாறு சொல்வதற்கும் நாம் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.  திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரரான நமது ஷைகு நாயகமவர்களை நாம் முழுமையாக விளங்கி நேசங் கொண்டுள்ளோம்.  

சமுதாயத்தில் மக்கள் இன்று பல்வேறு விதமான குழப்பத்தில் இருக்கிறார்கள்.  அல்லாஹ்வையும் - ரசூலையும் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வெவ்வேறு விதமாக விளங்கி வைத்துள்ளார்கள்.  ஒரு பள்ளியில் 500 பேர் தொழுகின்றார்கள் என்று சொன்னால், அந்த 500 பேரும் 500 விதமான அல்லாஹ்வை நினைவில் கொண்டு செல்கின்றார்கள்.  வானத்தில் இருக்கிறான் என்று சிலரும், அர்´ல் இருக்கிறான் என்று சிலரும் பல்வேறு விதமான சிந்தனைகளில் அல்லாஹ்வை கற்பனை செய்துள்ளார்கள்.  ஆனால், நாமெல்லாம் அந்தச் சத்தியத்தை - பரிபூரணத்தை எப்படி விளங்கி யிருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.  அந்த ஒரே உள்ளமையை உள்ளது உள்ளபடி நம் உள்ளங்களில் உள்வாங்கிக் கொண்டிருக்கிறோம்.  இந்த வகையில் நாமெல்லாம் மற்றவர்களை விடச் சிறப்புப் பெற்றவர்கள்தாமே!

 

குழப்பத்தில் நாம் இல்லை

 

இப்போது மார்க்கத்திலும் - சமுதாயத்திலும் நிகழும் எந்தக் குழப்பத்திலும் நாம் இல்லை.  எல்லா வகையிலும் தெளிவு பெற்றவர்களாக சிறப்புப் பெற்றிருக்கின்றோம்.  இந்தச் சிறப்பை நமக்குத் தந்தவர்கள் நமது ஷைகு நாயமவர்கள். 

ஒரு மனிதரைச் சந்தித்தேன்.  அவர் இப்போது  குழப்பத்தில் இருக்கும் நபர்.  இக்பால் மதனீயை ஷைகாக ஏற்றுக் கொண்டவர்.  அவர் என்னிடம் அல்லாஹ்வைப் பற்றி அறிவது அவசியமா? அவ்வாறு அறிவதற்கு குத்புமார்களிடம் - ஷைகுமார்களிடம் பைஅத் பெற வேண்டுமா? என்று  கேட்டார்.

அல்லாஹ்வை அறிவது அவசியமில்லையயன்றால், குர்ஆனை இறக்கியிருக்க வேண்டிய அவசிய மில்லை.  அல்லாஹ்வை அறிவது அவசிய மில்லையயன்றால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவதரித்திருக்க வேண்டிய அவசியமில்லை.  அப்படியே தானாகத் தெரிந்து கொள்ளலாம் என்றால், ஒரு மலைமீது குர்ஆனை வைத்து நீங்களாகத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொன்னால், ஒவ்வொருவரும் எவ்வாறு விளங்குவார்கள் என்று தெரியாது.  விளங்கவே மாட்டார்கள் என்பது தான் நமக்கு இப்போது விளங்கும் உண்மை. நான் அந்தக் குழப்பவாதியிடம்  அல்லாஹ் எங்கிருக்கிறான் தெரியுமா? என்று கேட்டேன்.  அதற்கு அவர், வானத்திலிருக்கிறான் என்று சொன்னார்.  இதை எவ்வாறு சொல்கின்றீர்கள்? என்று கேட்டேன், அதற்கு அவர், திருக்குர்ஆனில் இடம் பெறும்  “அல்லாஹு நூருஸ் ஸமாவாத்தி வல் அர்ளி” என்ற வசனத்தை ஓதிக்காட்டி,அல்லாஹ் வானத்தி;ல் இருக்கிறான் என்பதாக விளக்கம் சொன்னார்.

வான - ஞானம்

     

அவரைச் சந்திப்பதற்கு முதல்நாள் தான், துபையில் நமது வாப்பா  நாயகமவர்கள் “அல்லாஹு நூருஸ் ஸமாவாத்தி” என்பதற்கு விளக்கம் தந்தார்கள்.   அல்லாஹ் வானத்தி லிருக்கிறான் என்பதில், வானம் என்பது நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல ஆகாயம் மட்டுமல்ல, வெட்டவெளி. அனைத்தும் நம்மைச் சுற்றியும் நமக்கு மேலும், கீழும், நமக்கு இடமும் வலமும் நமக்குள்ளும் நிறைந்திருப்பது தான் வானம்.  அந்த வகையில் அல்லாஹ் வானத்திலிருக்கிறான் எனச் சொல்லப் பட்டுள்ளது என்பதாக நமது வாப்பா நாயகமவர்கள் தெளிவு அருளினார்கள்.  இதை நான் அவரிடம் எடுத்துக் கூறினேன்.  அவரால் பதில் பேச முடியவில்லை. சமுதாயத்தில் உள்ள மற்றவர்கள் அல்லாஹுவைப் பற்றியும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றியும் அறிந்து வைத்துள்ள அறிவு, எந்த நேரத்திலும் குழப்பத்தில் உள்ளது. மாற்றுச் சிந்தனைகளை யார் புகுத்த நினைத்தாலும் குழப்பமே அடையாத அறிவை நாம் பெற்றிருக்கிறோம். அந்த வகையில் நாம் சிறப்புப் பெற்றவர்கள்.

 

நமது சபையைப் பற்றி, எத்தனையோ பேர் விதவிதமாகப் பாராட்டியுள்ளார்கள்.  நமது சபையில் நடைபெறும் விழாக்களுக்கு வரும் விருந்தினர் நமது அறிவுத் தெளிவைக் கண்டு ஆச்சரியப் பட்டுள்ளார்கள்.  இந்ச் சபைக்கு வந்து சாமான்யர்கள் யாரும்  சாதாரணமாய்ப் பேசிவிட்டுப் போய்விட முடியாது.  தகுதியானவர்கள் தான் வர முடியும்.  ஏனெனில் நீங்கள் எல்லோரும் தெளிவானவர்களாகவே இருக்கின்றீர்கள் என்று பாராட்டுகின்றார்கள்.

அவ்லியாக்கள் என்றாலே மறைந்தவர்கள் மட்டும்தான் என்றே மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், அந்த வி­யத்தில் எவ்வாறு தெளிவு பெற்றிருக்கிறோம்?“அலா இன்ன அவ்லியா அல்லாஹி லா கவ்புன் அலைஹிம் வலாஹும் யஹ்ஸனூன்” என்பதன் உண்மைப் பொருளை விளங்கியவர்களாக நம்மை நமது ஷைகுநாயகம் அவர்கள் பக்குவப்படுத்தி யிருக்கிறார்கள்.  மறைந்தோர்களைப் போற்றவும், வாழும் மகான்களை மதித்து வாழவும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு மீலாது விழாவைக் கொண்டாடும் விதமாக, துபை சபை சார்பில், வினாடி வினாப் போட்டி வைத்திருந்தோம்.  அதில் ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று பதில்கள் இருக்கும்.  மூன்று பதில்களுமே பொருத்தமானது போன்றே தோன்றும்.  சரியான விடை கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கும்.  அந்தப் போட்டியில் வேறொரு தரீக்காவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு முதல் பரிசு கிடைத்தது.

​பரிசு பெற்ற அவர் விழாவன்று தனது ஏற்புரையில், “வினாடி வினாப் போட்டியில் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் அற்புதமானவை.  ஒரு சில கேள்விகளுக்கு எனக்குச் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடியாமல், எனக்குத் தெரிந்த உலமாக்களிடம் - எனது ஷைகிடம் எல்லாம் கேட்டுப் பார்த்தேன்.  எங்கிருந்தும் பதில் கிட்டவில்லை.  பின்னர்,கொஞ்சம் கொஞ்சமாகக் கஷ்டப்பட்டு பதில் பெற்றுத் தான் பரிசு பெற முடிந்தது.  நான் பெரும்பாலான கேள்விக்கு பதில் எழுதிப் பரிசு பெற்றேன் என்பதைவிட, ஒவ்வொரு கேள்விக்கும் பொருத்தமானது போன்றே தோன்றும் வகையில் மூன்று பதில்களைத் தயார் செய்துள்ளீர்களே,   உங்களுக் கெல்லாம் அந்த வி­யத்தில் எத்தகைய அறிவு பெற்றிருந்தால் இதனைச் செய்ய முடியும் என மெய்சிலிர்க்கின்றேன்.  உங்கள் ஷைகு நாயகம் உங்களை யயல்லாம் ஞானவான்களாக எவ்வாறு தயார் செய்துள்ளார்கள் என்று பெருமிதம் கொள்கின்றேன்.  இந்தச் சபையில் நானும் ஓர் உறுப்பினராய் இருந்திடக் கூடாதா? என ஏக்கமாக உள்ளது. ”என்று கூறினார்.

உலகில் எத்தனையோ சபைகள் இருக்கின்றன - எத்தனையோ தரீக்காக்கள் இருக்கின்றன.  அவர்களெல்லாம் ஒன்று கூடுகின்றார்கள்.  ஏதாவது திக்ரு - பிக்ரு செய்துவிட்டுக் கலைந்து விடுகின்றார்கள்.  ஆனால், உலகத்திலேயே ஞான வி­யங்களைப் பேசி - பகிர்ந்து கொண்டு விளக்கம் பெறும் ஒரே சபை - நமது ஷைகு நாயகமவர்களை உருவாக்கிய நமது லஜ்னத்துல் இர்பானித் தவ்ஹீத் என்னும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை மட்டுமே. இதன் மூலமும் நாம் சிறப்புப் பெற்றவர்களாக இருக்கின்றோம்.

துபையில் ஆரம்பக் காலத்தில், நமது ராத்திப் ஷ­ரீபை பகிரங்கமாக ஓதுவதற்குப் பயப்படும்படியான சூழல் இருந்தது.  ராத்திப் ­ரீபை ஓதினால், துபை அவ்காபிடம் தெரியப்படுத்தி விடுவோம் என வி­மிகள் மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.  அவ்காப் என்பது துபையில் மார்க்கம் சம்பந்தமான மினிஸ்ட்ரியாகும்.  சிலநாட்கள் கழித்து அவ்காபில் உள்ள அதிகாரிகளின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் நமது ராத்திபு மஜ்லிசிற்கு அழைக்கப்பட்டார்கள்.  அவ்வமயத்தில்  ராத்திப் ஷ­ரீபை ஓதும்போது அவர்கள் மெய்சிலிர்த்துப்போனார்கள்.  அல்லாஹ்வைப் பற்றியும், வஹ்ததுல் வுஜூத் பற்றியும் இவ்வளவு தெள்ளத் தெளிவாகவும், பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் வெளியிடும் திறன்,வல்லமை, சக்தி, நிச்சயமாக உங்கள் ஷைகு நாயகம்  அவர்களுக்குத் தான் உண்டு.  நாங்கள் எவ்வளவு பெரிய மினிஸ்ட்ரியின் அதிகாரிகளாக இருந்தபோதிலும் இவற்றையயல்லாம் வெளியில் சொல்ல முடியாது என்று அவ்காப் அதிகாரிகள் பெருமிதம் கொண்டார்கள்.  இத்தனைக்கும் ரசூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது முஹப்பத் கொண்ட ஆ´கீன்கள் நிறையப் பேர் அவ்காபில் இருக்கின்றார்கள்.  எனினும், அவர்களால் நமது ஷைகு நாயகமவர்கள் எடுத்துக் கூறுவதைப் போல், இவ்வாறெல்லாம் எடுத்துக் கூற முடியாது.  ஆச்சரியம்கொண்ட அவ்காப் அதிகாரிகள், நமது ராத்திபு ­ரீபின் பிரதிகளை ஆளுக்கொன்று வேண்டும் - இதனை ஓதுவதன் மூலம் உண்டாகும் பயனை நாங்களும் பெற வேண்டும் என்று ஆசையோடு வாங்கிக் கொண்டார்கள் என்றால், எப்படிப்பட்ட ராத்திபு ­ரீப் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

ராத்திபின் சிறப்பு

 

தந்தை நாயகம் குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா ஸய்யித் யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹா´மிய் நாயக மவர்களின் மூலமாக நமது ஷைகு நாயகமவர்கள் நமது கரங்களில் அந்தப் புனிதப் படைப்பைத் தவழ வைத்துள்ளார்கள்.  முரீதீன்களாகிய நமக்கெல்லாம் இது எளிதாகக் கிடைத்ததாக எண்ணலாம்.  ஆனால், இலக்கண ரீதியாக - இலக்கிய ரீதியாக - தத்துவார்த்த முறையில் - தவ்ஹீதை நாடும் வகையில் ஆராய்ச்சி செய்பவர்களுக்கு நமது ராத்திபு ­ரீப் அமிர்தமாகக் காட்சியளிக்கிறது.  ராத்திபு ­ரீபை ஆராய்ச்சி செய்யும் சிந்தனையாளர்கள், அதன் உட்பொருளை அறிந்து சிலாகித்துப் போகிறார்கள்.  அதன் அருமையும் - அற்புதத்தையும் நாம் விளங்கி வைத்துள்ளது வேறு வி­யம்.  ஆனால்,வெளியில் உள்ளவர்கள் மிகுந்த ஆச்சரியம் அடையும் வண்ணம் அமைந்திருக்கிறது தான் அதன் சிறப்பு.

பெரிய பெரிய தமிழறிஞர்கள், கவிஞர்களெல்லாம் நமது சபைக்கு வந்து, நமது ஷைகுநாயகம் அவர்களைப் பற்றியும், அவர்களின் திருக்கரம் பற்றிய நமது பாக்கியத்தைப் பற்றியும் பாரட்டிப் பேசுவார்கள்.  அந்தக் கவிஞர்கள், நமது ஷைகுநாயகம் அவர்களின் வெண்பா- செய்யுள்களைப் போன்றோ எழுதவே முடியாது - அதன் பக்கத்தில் கூட வரமுடியாது என்று போற்றுவார்கள்.  ஆனால், அவர்களுக்கு வெளியில் பாராட்டு விழா நடத்தியிருப்பார்கள்.  இவரைப் போன்ற ஜாம்பவான்கள் இல்லை என்று பாராட்டப்பட்டிருப்பார்கள்.  அப்படிப்பட்டவர்கள் நம்மிடம் வந்து, நமது ஷைகு நாயகமவர்களின் பாக்களை ஆய்வு செய்து - அவர்களைப் போன்ற ஜாம்பவான் யாரும் இல்லை என்று புகழ்வார்கள்.  அப்படிப்பட்ட வல்லமை மிக்க ஷைகு நாயகமவர்களை நாம் கரம் பிடித்துள்ளோம்.  அவர்கள் அருளின்றி நாம் இல்லை.  குருவருள் இன்றித் திருவருள் இல்லை.  எத்தனையோ லட்சோப லட்ச மக்கள் இருந்தாலும் - கோடானு கோடி மக்கள் இருந்தாலும், நம்மைப் போன்று சிறப்புப் பெற்றவர்கள் உலகில் எவரும் இல்லை அல்லவா?

Computer is Computer, God is God.

அல்லாஹ்வை அறிவது அவசியமா?  என்று கேட்ட அந்தக் குழப்பவாதியிடம் நான் மீண்டும் கேட்டேன்.  மறுமையில், “மன் ரப்புக - மன் நபிய்யுக” என்று கேள்விகள் கேட்கப்படாது என்றிருந்தால், நீங்கள் அல்லாஹ்வை அறியாமலேயே இருந்துவிடலாம்.  ஆனால், அவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் என்று சொல்லப் பட்டிருக்கிறதே.   “மன் ரப்புக” என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் என்று கேட்டேன்.  அதற்கு அவர், அல்லாஹ் என்று சொல்வேன் என்றார்.  அப்போது நான் அவரிடம் கேட்டேன்.  நீங்கள் ஆறுமாதத்திற்கு ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்கின்றீர்கள்.  இறுதியில் தேர்வு வைக்கப்படுகின்றது.  தேர்வில், நிஜுழிமி ஷ்வி ளீலிதுஸ்ரீற்மிer? என்று கேட்கப்படுகின்றது.  நீங்கள், ளீலிதுஸ்ரீற்மிerஷ்வி ளீலிதுஸ்ரீற்மிer என்று எழுதினால், சரியான பதிலாகுமா? தவறான பதிலா? என்று கேட்டேன்.  அவர், அவ்வாறு எழுதினால் தவறான பதில் தான் என்றார்.  அப்படியயன்றால்,உனது இறைவன் யார்? என்று கேட்டால், அல்லாஹ் என்று மட்டும சொன்னால் எப்படி சரியாகும்? என்று கேட்டேன்.

What is Computer ? என்று கேட்டால், கம்ப்யூட்டரின் தத்துவார்த்தத்தை - அதன் லாஜிக்கை - அதன் விளக்கத்தைக் கேட்கிறார்கள்.  அதை எழுதினால் தான் தேர்வில் வெற்றி பெற முடியும்.  அதைப்போல், நிஜுலி ஷ்வி றூலிd? என்று கேட்டால், றூலிd ஷ்வி றூலிd என்று சொன்னால் மட்டும் எப்படி வெற்றி பெற முடியும்? உலகில் 50 வருடங்கள், 60 வருடங்கள் வாழ்கிறோம்.  எல்லோரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? மன் ரப்புக என்று கேட்டால், அல்லாஹ் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்.  மன் நபிய்யுக்க என்று கேட்டால், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்று சொல்லி மட்டும் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.  ஆனால், வி­யம் அவ்வாறு அல்ல.  ரப்பை ரப்பாக விளங்க வேண்டும்.  அந்தவகையில் நாமெல்லாம் சிறப்புப் பெற்றவர்களாக - ஜெயம் பெற்றவர்களாக இருக்கின்றோம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

இந்த நவீன யுகத்தில், அறிவியலில்  எத்தனையோ கண்டு பிடிப்புகள் புதிது புதிதாக வந்துவிட்டன. இனி கண்டுபிடிப்பதற்கு ஒன்றும் புதிதாக இல்லை என்று சொல்லுமளவுக்கு பிரமிப்பூட்டும் பலவகையான கண்டுபிடிப்புகள் விஞ்ஞான உலகில் நிறைந்து விட்டன.  ஆனால், ஆரய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? மனிதன் தனது அறிவில் 10 சதவீத அறிவை மட்டுமே இதுவரை பயன்படுத்தி இருக்கிறான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.  ஆனால், மகான்கள் தங்களது 100 சதவீத அறிவையும் எப்போதும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்கள் சொன்னால், அதுதான் யதார்த்தம் - நிதர்சனம் - சத்தியம்.

இரும்பு பறக்கும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்னால், நபிகள்  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்க ளென்றால், இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்! விமானங்கள் விண்ணில் நீந்துகின்றன.  ஆனால், அன்றைக்கு அதை நம்பாத கூட்டம் கேலி செய்து சிரித்திருக்கும்.  இன்று இது உண்மையாகிவிட்டது.  எம் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அவற்றை எவ்வாறு கூற முடிந்தது? என்றால், அவர்கள் 100 சதவீதப் பரிபூரண அறிவாகத் திகழ்கிறார்கள்.  அவர்களால் தான் அது சாத்தியமாகிறது - சத்தியமாகிறது. அந்த  வகையில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  திருப்பேரர் நமது ஷைகு நாயகமவர்கள்,ஒரு வி­யத்தைச் சொல்கின்றார்கள் என்றால், அதை அப்படியே  ஏற்றுக் கொள்ள வேண்டும்.  ஏனெனில், அவர்கள் 100 சதவீத அறிவின் பரிபூரணத் தோன்றலாகத் திகழ்கின்றார்கள்.  அவர்களின் கட்டளைக்கு வழிப்பட்டு நடப்பதன் மூலமாக, நாமும் அந்தப் பூரணமான அறிவைப் பயன்படுத்தும் பாக்கியசாலிகளாகத் திகழ்கின்றோம்.

நமது ஷைகு நாயகமவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடந்தால் போதும்.  நாம் ஜெயம் பெற்றவர்களாகச் சந்தோ­மாக - நிம்மதியாக வாழலாம்.  மற்ற தரீக்காவில் இருப்பவர்கள் மீலாது விழா கொண்டாடுகின்றார்கள்.  மற்றும் அவ்லியாக்களின் விசே­ங்களில் - நிகழ்வுகளில் கலந்து  கொள்கின்றார்கள்.    ஆனால், தவ்ஹீதுடைய இல்ம் என்று வரும்போது தடுமாறி விடுகின்றார்கள்.  அவர்களுக்கு விளக்கம் சொன்னாலும் இஃதெல்லாம் அவசியமா?  என்று கேட்கிறார்கள்.  ஆனால், அந்த வி­யத்தில் நமக்கு எப்போதாவது குழப்பம் வந்திருக்கிறதா? அந்தளவுக்கு நமது ஷைகு நாயமவர்கள் நமக்குப் பாதுகாப்பான ஈமானைத் தந்துள்ளார்கள்.  வெளியில் உள்ள மிகப் பெரிய உலமாவாக இருந்தாலும் தவ்ஹீதுடைய இல்மில் நமது சபையில் உள்ள சாதாரண முரீதிடம் வாதம் செய்தால் தோற்றுத்தான் போவார்.  அந்தளவுக்கு நமது ஷைகு நாயகமவர்கள் நமக்குச் சிறப்புச் செய்துள்ளார்கள்.

ஒருவர் நமது சபைக்கு உறுப்பினராக வந்தார்.  சிறிது நாட்களில், அவருடைய நிலை உயர்ந்தது.  சபையில் ஒரு பொறுப்புதாரியாகவும் வந்தார்.  நமது சபைகளில் எங்கெங்கு விழாக்கள் நடந்தாலும், அவரை முன்னிலைப் படுத்தும் அளவுக்கு அவர் முக்கியத்துவம் பெற்றார்.  நிலைமை இவ்வாறு இருக்க, அவருக்குள்ளே ஷைத்தான் புகுந்தான்.  தமது திறமையாலும் - தகுதியாலும் - பேச்சாற்றலாலும் தான் தமக்கு இவ்வாறான மரியாதையும் - கண்ணியமும் கிடைக்கப் பெற்றது என்று மமதை கொண்டார்.  நிலைமை மோசமாகப் போகும்போது நமது ஷைகு நாயகமவர்கள் அவரைச் சபையி லிருந்தும் தள்ளி வைத்தார்கள்.  இப்போது அவரது நிலைமை என்னவாயிற்று? கொண்டாடப்பட்ட சபை விழாக்களில்,சாதாரண உறுப்பினராகக் கூடக் கலந்து கொள்ள முடியாத இழிநிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.  அவர் நினைப்பெல்லாம் அவரது  பிழைப்பைக் கெடுத்து விட்டது என்பதையும் - அவரது பிழைகளையும் அவர் இப்போது உணர்ந்து கொண்டிருக்க வேண்டும்.  இவ்வாறான சிறப்புகள் முரீதுகளுக்குக் கிடைக்கிறது என்றால், அதற்கு முற்றிலும் நமது ஷைகு நாயகமவர்களின் கருணையும் - காருண்யமும் தாம் என்பதை எள்ளளவும் மறந்து விடக் கூடாது.

குருவே போதும்

நமது ஷைகு நாயகமவர்களின் வார்த்தைகளை மட்டும் நமது வாழ்க்கையாக ஏற்றுக் கொண்டால் போதும்.  நாம் எதைப் பற்றியும் கவலைப் படத் தேவையில்லை.  இம்மையைப் பற்றியும் கவலைப் படத் தேவையில்லை - மறுமையைப் பற்றியும் கவலைப் படத் தேவையில்லை.  எனது தகப்பனார் கண்ணியத்திற்குரிய மஸ்ஊத்மெளலானா அல்ஹாதி அவர்கள் கூறியது போல், நமது ஷைகு நாயகமவர்கள் சொல்வதில் கூடுதலாக ஆராய்ச்சி செய்யவேண்டிய அவசியமும் நமக்கு இல்லை.  ஏனென்றால், அவர்கள் அறிவும் - ஆற்றலும் பரிபூரணமாக இருக்கின்றது, அதற்கு மேல் சிந்திக்க ஒன்றுமில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஸஹாபாக்கள் உயிருக்கு மேலாக நேசித்தார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் என்ன சொன்னார்களோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள்.  அத்தோடு அவ்வாறே நடந்தும் காட்டினார்கள்.  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடலில் குதிக்கச் சொன்னால்,உடனடியாகக் குதிக்கக் காத்திருந்தார்கள். அப்படிப்பட்ட ஸஹாபாக்களைப்   பார்த்துத்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,  என் தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள்.  அவர்களில் நீங்கள் யார் எவரைப்  பின்பற்றினாலும் இம்மையிலும் மறுமையிலும் ஜெயம் பெற்றவர்கள் ஆவீர்கள் என்று அருளியுள்ளார்கள்.

​அந்த வகையில். நமது ஷைகு நாயகமவர்களின் திருக்கரம் பற்றிய நாமெல்லாம் மிகப்பெரிய பாக்கியம் பெற்றவர்கள்.  நாம் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.  எந்தக் குழப்பமும் நம்மை அண்டாது.  இந்தக் காலகட்டம் - குழப்பங்கள் நிறைந்தது.  அந்தக் குழப்பங்கள் எல்லாவற்றிலிருந்தும் அவர்கள் நமக்கு பாதுகாப்பு அளித்துள்ளார்கள். ​