• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Nov 2011   »  திகட்டாத இன்பம்


திகட்டாத இன்பம்

கலீபா ஏ. அப்துர் ரவூப் பி.ஏ.பி.எல். ஹக்கிய்யுல் காதிரிய்

உயர்நீதிமன்ற வழக்கறிஞர், சென்னை.

 

உன்னுருவம் இங்கு உனக்குச் சொந்தமா?

உன்னிலுள்ள ஆன்மா உன்னில் தங்குமா?

எதுவரையில் நீயிருப்பாய் தெரியுமா?

எங்கு போகும் உன் ஆன்மா தெரியுமா?      (உன்)

அறியும் நோக்கோடு அறிவைக் கொடுத்தும்

புரியும் நோக்கோடு காட்சிகள் கொடுத்தும்

தெளியும் நோக்கோடு திருநபி கொடுத்தும்

தெரியும் நோக்கோடு திருந்திடா மனிதா!      (உன்)

பூமியின் திசையைப் புரிந்திடும் மனிதா

ஹக்கின் திசையை அறிந்திடா மனிதா

அறிவில் சிறந்ததாய் நினைக்கும் மனிதா

அகஅறிவில் நீ இருளின்தான் மனிதா         (உன்)

புறத்தைத் தேடி பேயாய் அலைந்து

புவியில் நீயும் சாதிப்ப தெதுவோ

உன்னில் அகத்தை ஒர்மையிடல் கண்டால்

என்றென்றும் இனிதே உன் நிலை உயர்வே    (உன்)

ஞானப்பழத்தின் அருஞ்சா றூட்டும்

ஞான மகானெங்கள் அவுன்நாதர் தஞ்சம்

அடைந்தோர்க் கென்றும் திகட்டாத இன்பம்

அல்லாஹ் அருள்மழை என்றென்றும் நிலைக்கும்.(உன்)

 

 

(18.9.2001 அன்று சென்னை மஜ்லிஸில் சங்கைமிகு செய்குநாயகம் அவர்கள் திருமுன் பாடப்பட்டது.)