• ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை 

Pezhai  »  2011   »  Nov 2011   »  சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்..


சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்..

தொடர்...

அறபுத் தமிழில்:  மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகு தமிழில்:  கிப்லா ஹள்ரத், திருச்சி.

 

சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் வினவப்பட்ட வினோதமான வினாக்களும் வியப்பான விடைகளும் தொடர்கின்றன.

வினா: ஒரு பெண் தன்னுடைய அடிமையை தன்னை ஜினா செய்யும் படி வற்புறுத்தினாள். அவனோ விருப்ப மில்லாமல் ஜினா செய்தான் எனில் தங்களின் தீர்ப்பு என்ன?

இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்:

      அந்த அடிமை அப்பெண்ணின் வற்புறுத்தலால் ஜினா செய்யாம லிருந்தால் அவள் அவனைக் கொன்று விடுவாள். அல்லது அதிகமாகக் துன்புறுத்துவாள். அடிப்பாள் எனும் உண்மையான காரணத்தால் அவன் ஜினா செய்திருந்தால் அவனுக்கு ஹத்து இல்லை.(சவுக்கடி தேவையில்லை). இல்லாவிட்டால், அவனுக்கு 40 சவுக்கடி தரவேண்டும்.

      அந்தப் பெண் மணமுடித்து தன் கணவரோடு சேர்ந்து வாழ்பவளாக இருந்தால் அவளைக் கட்டிவைத்து கல்லெறிந்து கொல்லவேண்டும். அவள் திருமணம் ஆகாதவளாக இருந்தால் அல்லது திருமணமாகி கணவரோடு உறவு கொள்ளாதிருந்தால் அவளுக்கு 100 சவுக்கடி கொடுக்க வேண்டும்.

வினா: மனிதரொருவர் சிலருக்கு இஷாத் தொழுகை தொழ வைத்தார். தொழுகையின் கடைசி ரக்அத்தில் அத்தஹியாத்து ஓதி வலதுபுறம் ஸலாம் கொடுத்தவுடன்  அவருடைய மனைவி தலாக் ஆகிவிட்டாள். இடதுபுறம் ஸலாம்  கொடுத்தவுடன் தொழுகை முறிந்து விட்டது. பின்னர்       வானத்தைப் பார்த்தார். அப்போது அவர்மீது ஆயிரம் வெள்ளிக்காசு கொடுக்க வேண்டிய கடன் ஏற்பட்டு விட்டது. இவற்றிற்கு தங்களின் தீர்ப்பு என்ன?

இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்:

      ஒருவன் தனது மனைவியை விட்டுவிட்டு ஓடிவிட்டான். இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. எனவே, அவனுடைய மனைவியை இப்போது தாங்கள் கூறிய இமாம் தான் (தொழவைத்தவர் தான்) திருமணம் செய்திருந்தார். அவர் தொழுகை முடித்து வலதுபுறம் ஸலாம் கொடுத்த  போது ஓடிப்போன கணவர் திரும்பி வந்திருந்ததைப் பார்த்துவிட்டார். எனவே தொழ வைத்தவரின் மனைவி தலாக் ஆகிவிட்டாள்.

      தொழ வைத்தவர் இடதுபுறம் திரும்பிய போது தனது உடையில் அதிகமான இரத்தம் காணப்பட்டது. எனவே, அவருடைய தொழுகை பாத்திலாவிகிவிட்டது (முறிந்து விட்டது). பின்னர் அவர் வானத்தைப் பார்த்தபோது முதல் நாள் பிறை தென்பட்டது. முதல் மாதம் பிறை தென்பட்டது. முதல் மாதம் ஒருவரிடம் முதல் பிறையன்று ஆயிரம் வெள்ளிக்காசு கடன் வாங்கி இருந்தார். அதனைக் கொடுக்கவேண்டிய தவணை இப்போது வந்துவிட்டதால் அவர் கடனாளி ஆகிவிட்டார்.

வினா: ஓர் இமாம் ஒரூ பள்ளியில் 4 பேருக்கு தொழ வைத்தார். அப்போது ஐந்தாவதாக ஒருவர் அந்தப் பள்ளியில் நுழைந்து இமாமுடைய வலதுபுறம் நின்று துயர்ந்து தொழுதார். இமாம் தொழுகை முடித்து வலதுபுறம் ஸலாம் கொடுத்தபோது அம்மனிதரைக் கண்டுவிட்டார். அப்போது இமாமைக் கொலை செய்வது அல்லது பழிவாங்குவது விதியாகி விட்டது. ஏற்கனவே இமாமுடன் சேர்ந்து தொழுது கொண்டிருந்த 4 பேருக்கும் 80 கசையடி கொடுப்பது விதியாகிவிட்டது. இமாமுடைய மனைவியை ஐந்தாவதாக தொழ வந்தவரிடம் ஒப்படைப்பதும் விதி யாகிவிட்டது.  அந்தப் பள்ளியை இடித்து வீடாகக் கட்டுவதும் விதியாகிவிட்டது என்றால்...தங்களின் தீர்ப்பு என்ன?

இமாம் ஷாஃபிஈ ரஹ்மத் துல்லாஹி அலைஹி அவர்கள்:

 இந்த ஜமாஅத்தில் ஐந்தாவதாக வந்து சேர்ந்த மனிதர் தன்னுடைய மனைவியை தன்னுடைய சகோதரனிடம் ஒப்படைத்து விட்டு பிரயாணம் போயிருந்தார். இப்போது தொழவைத்த மனிதர் அந்த சகோதரரை வெட்டிக் கொலை செய்துவிட்டு அப்பெண்ணை தன்னுடைய மனைவி என்று வழக்குப் போட்டு 4 நபர்களை பொய் சாட்சி சொல்லி அப்பெண்ணுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். அப்பெண்ணுடைய வீட்டைப் பள்ளியாகக் கட்டிக் கொண்டுதான் தொழுகை நடத்தினார்.

      ஐந்தாம் நபர் ஊர் திரும்பியதும் தான் இவ்வுண்மைகள்  தெரிய வந்தன. எனவே அநியாயமாக ஒருவரைக் கொன்ற இமாமைக் கொலை செய்வது  கடைமையாகிவிட்டது. பொய்சாட்சி சொன்ன நான்கு பேருக்கும் சவுக்கடி கொடுப்பது கடமையாகிவிட்டது. இமாம் அநியாயமாகத் திருமணம் செய்த பெண்ணை அவருடைய கணவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்பதும் கடமையாகிவிட்டது. மேலும் அநியாயமாக அபகரிக்கப்பட்டு கட்டப்பட்ட பள்ளியை இடித்து அதனை வீடாக்கி உரியவரிடம் கொடுப்பதும் கடமையாகிவிட்டது.

வினா: ஓர் ஆணும் ஒரு பெண்ணும் வெளியில் நடந்து சென்றபோது இரண்டு சிறு பிள்ளைகளைக் கண்டார்கள். உடனே அவ்விருவரும் அச்சிறு பிள்ளைகளை அன்புடன் முத்தமிட்டார்கள். பின்னர் அந்த ஆண்பிள்ளை,“என் தகப்பனையே அவர்களிருவர் பாட்டனுக்கும் என் உடன் பிறந்தவனை அவர்கள் சிறிய தகப்பனுக்கும் ஃபித்தியா வாக்கினேன். என் மனைவியை அவர்கள் தகப்பனுடைய மனைவிக்கு ஃபித்தியா வாக்கினேன்,” என்று சொன்னார்.

      அந்தப் பெண் பிள்ளை,“என் தாயை அவர்கள் பாட்டிக்கும் என் உடன் பிறந்தவளை அவர்களுடைய சாச்சிக்கும் ஃபித்தியா வாக்கினேன்.  இந்த உறவு முறைக்கு தங்களின் விளக்கம் என்ன?

இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்:

      அந்த ஆண் பிள்ளை அச்சிறுவர்களுக்கு தகப்பன். அந்தப் பெண் பிள்ளை அச்சிறுவர்களுக்கு தாய். (அதாவது : கணவன் - மனைவி)

 

(வினோதமும் தொடரும், வியப்பும் தொடரும்.)