ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்
ரஸூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றி ஒரே இறைவன்தான் எனும் தவ்ஹீதைப் போதித்தார்கள். சிலைகளெல்லாம் பரிபூரண இறையல்ல எனக் கூறி சிலை வணக்கத்தை ஒழித்தார்கள். இறை என்பது பலவற்றைக் குறிக்காது. இறையயன்பது ஒன்றேயயான்றுதான். லாயிலாஹ இல்லல்லாஹு என்பதனை அறிவுறுத்திக் காட்டவேதான் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோன்றினார்கள். இறை என்பது ஒன்று. அவே பரிபூரணம். எங்குமிருப்பது அந்த ஒன்றே. ஒன்று என்பது ஒருவர் ஒருவராய் இருப்பதில்லை. பரிபூரணமாக இருக்கக் கூடிய ஒன்று.
புதியதோர் உலகம் ...
நம்மைப்பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். நாம் நமக்குப் பொருத்தமற்றவற்றை மற்றவருக்குச் செய்வதோ செய்விப்பதோ கூடாது.
நாம் நமக்கு அருவருப்பாகக் கருதும் ஒன்றை, அல்லது மற்றவர்கள் அருவருப்பு எனக் கருதும் ஒன்றை மற்றவர்கள் முன்னில் செய்வதை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். மற்றவருக்காக, அவர் எம்மைக் கண்டு நல்லவர் எனக் கூறுவதற்காக நாம் நல்லவர்போல நடித்துக் கொள்ளல் கூடாது.
எம் மனச் சாட்சிக்கு நாம் நல்லவர்களாக நடந்துகொள்ளல் வேண்டும். ஒருவர் நம் நடத்தையில் அல்லது பேச்சில் பிழைகண்டு திருத்தின் அது உண்மையாக இருந்தால் ஒப்புக் கொண்டு திருந்திக் கொள்ளல் வேண்டும். ஒரு சிறு பிள்ளைசிறந்த அறிவுடையோராக இருந்தால் ஒரு முதியவரோ அல்லது அக்கலையில் தேர்ச்சி பெற்றவரோ, அச்சிறுவரிடம் போய்க் கற்றுக் கொள்ள வெட்கப்படக் கூடாது.
தற்பெருமை கொள்ளல் வேண்டாம். எல்லாம் கற்றோமென்றிருக்க வேண்டாம். நாம் கற்றதொன்றுமில்லை யயனக் கருதி, கண்டதெல்லாம் கற்கவும், பயனற்றதைஅலசி ஆராயவும். அவற்றிலும் முத்துக்கள் மறைந்திருக்கலாம். அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கெள்ளவும். அவசியமற்றது என நிச்சயம் கொண்டால் தள்ளிவிடவும்.
நம்மீது அயராத அன்பும் பக்தியும நம் உண்மைகளைப் பின்பற்றுதலும் தான் பெரும் தியாகமாகும்.
உள்ளும்புறத்தும் உணர்விலும் நன்மையே கருதி நம்மிலேயே அனைத்தையும் வீணாக்கி (அர்ப்பணித்து) வரும் பிள்ளைகளுக்கு நாமே கேள்விகளுக்கு பதிலாவோம். நாம் அவர்களின் ஒடுமிரத்தத்திலும் நெருங்கி, உடலமைந்துள்ள அணுக்கலங்களிலும் கலந்திருப்போம்.
தெளஹீது விளக்கங்கள் பெற்று வருவது அவசியமாகும். வாழ்வின் குறிக்கோள் அதுவேயாகும்.
யோசனைஇல்லாமல் எதையும் செய்யத் துணிந்தால் வந்து முடிவது இழிவாகும். பொறாமையும் பெருமையும் ஆசையும் அவாவும் ஏற்படும்போது மனக்கனமும் தலைக்கனமும் பிடித்துவிட்டால் குரோதமும் பகையும் ஏற்படுவதுண்டு.
நாம்விரும்புவதெல்லாம் ஒற்றுமையாகும். வேற்றுமையல்ல. நாம் விரும்புவது ஒர் ஒற்றுமையான சக்திவாய்ந்த உண்மையான சமூகத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்பதேயாகும்.
சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் மணிவிழா மலரிலிருந்து...