ஸலவாத்தின் மகிமை கேளீர்!
(தொகுப்பு: ஆஷிகுல் கலீல் B.Com. திருச்சி)
காரி ஆபூபக்கர் இப்னு முஜாஹிது (ரஹ்) அவர்களிடம் கல்வி கற்பதற்காக முஹம்மது இப்னு மாலிக் (ரஹ்) அவர்கள் பகுதாதுக்குச் சென்றார்கள். அவர்கள் கூறுவதாவது:
நானும் இதர மாணவர்களும் ஒரு கூட்டமாக அவரிடம் அமர்ந்து பாடங்கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்குள்ளாக வயோதிகர் ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார். அவர் தலையில் ஒரு பழைய தலைப்பாகையும் தேகத்தில் பழைய சட்டை யயான்றும் பழைய அங்கவஸ்திரம் ஒன்றும் கிடந்தன. அவரைக் கண்டதும் காரீ அபூபக்கர் எழுந்து நின்று வரவேற்றுத் தமது ஆசனத்தில் அமரச் செய்து விட்டுக் குடும்ப சேம லாபம் பற்றி விசாரித்தார்கள். அப்பொழுது அப்பெரியார் நேற்றிரவு என்வீட்டில் ஆண் குழந்தையயான்று பிறந்தது. வீட்டிலுள்ளவர்கள் நெய்யும் தேனும் வேண்டுமென்று சொன்னார்கள் என்றார். அவர் பேச்சைக் கேட்ட காரி சாகிப், அவர் நிலைக்கு இரங்கி வருத்தத்தோடு கண்களை மூடினார்கள். உடனே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்குக் காட்சியளித்து, நீர் ஏன் இத்துணை கவலைப்படுகிறீர்! மந்திரி அலி இப்னு ஈசாவிடம் சென்று எனது ஸலாமை அவருக்குச் சொல்லி, அவர் பிரதி வெள்ளியிரவிலும் என்மீது ஆயிரம் ஸலவாத்து ஓதாமல் தூங்குவதில்லை. இந்த வெள்ளியிரவில் அவர் எழு நூறு ஸலவாத்து ஓதினார். அதற்குள்ளாக அரசரிடமிருந்து அவரை அழைத்துச் செல்ல ஆள் வந்துவிட்டான். அவர் அங்கு சென்று விட்டுத் திரும்பி வந்து மீதத்தை ஓதி முடித்தார். இந்த அடையாளத்தைக் கூறிவிட்டு இப் பெரியாருக்கு நான் சொன்னதாகச் சொல்லி நூறு பொற்காசுகள் வாங்கிக் கொடும்! என்று கூறிவிட்டு மறைந்தனர். காரீ சாகிப் திடீரெனக் கண்விழித்து அப்பெரியாரை அழைத்துக் கொண்டு மந்திரியிடஞ் சென்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களை உம்மிடம் அனுப்பி வைத்தனர் எனக்கூறி நிகழ்ந்த விருத்தாந்தம் அனைத்தையும் ஆதியோடு அந்தமாகக் கூறினார்.
அதைக் கேட்ட அம்மந்திரி தனது வேலையாளை அழைத்து பையயான்று எடுத்து வரச் செய்தார். அதிலே ஆயிரம் பொற்காசுகள் இருந்தன. அதிலிருந்து நூறு பொற்காசுகளை எடுத்துப் பெரியாரிடம் கொடுத்துவிட்டு மேலும் நூறு பொற்காசுகள் எடுத்து காரீ சாகிபிடம் கொடுக்க அவர் அதை வாங்க மறுத்தார். மந்திரி இந்த ஆயிரம் ஸலவாத்தை ஓதும் வியம் எனக்கும் அல்லாஹு தஆலா விற்கும் மட்டும் தெரிந்த ஓர் இரகசியம். இதை நீர் வெளியிட்ட நன்றிக்காக இந்த நூறு காசுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார். மீண்டும் நூறு காசுகளை யயடுத்து நான் ஓதிவரும் ஸலவாத்து, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை போய் எட்டுகிறது என்னும் நற்செய்தி சொன்னமைக்காக இவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார். பின்னர் நூறு காசுகளை எடுத்து எனது இல்லம் வரை வரும் சிரமத்தை நீர் மேற்கொண்டதற்காக இவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். இவ்வாறு ஒவ்வொன்றாக சொல்லிச் சொல்லி அந்த ஆயிரம் பொற்காசுகளையும் அவருக்குக் கொடுக்க முன்வந்தார். எனினும் அவர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியருளிய நூறு காசுகளுக்கு அதிகமாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
அப்துர் ரஹீம் இப்னு அப்துர்ரஹ்மான் (ரஹ்) என்பவர் குளிக்கச் சென்றயிடத்தில் கால் வழுக்கி விழுந்து விட்டதால் கையில் அடிபட்டு வீங்கிவிட்டது. இரவெல்லாம் வாதையிற் கழிந்தது. கடைசி நேரத்தில் அவர் சிறிது கண் அயர்ந்ததும் அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர் கனவிற் காட்சி தரவே, அவர், யாரசூலல்லாஹ்! என்றார். அதற்குள்ளாக அன்னார் உமது ஸலவாத்தின் பெருக்கம் என்னைத் திடுக்கிடச் செய்துவிட்டது என்று கூறி மறைந்தனர். உடனே அவர் கண் விழித்துப் பார்க்கும் போது வீக்கமும், வேதனையும் காணப்படவில்லை
ஷைகு அஹ்மத் ரஸ்லான் (ரஹ்) நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவிற் கண்டார். அன்னார் மீது ஸலவாத்து சொல்வதிலுள்ள மகிமை பற்றி அல்லாமா ஸகாவீ (ரஹ்) என்பார் எழுதியுள்ள பதீஉ என்னும் நூல் அன்னார் முன் சமர்ப்பிக்கப்பட்டது. அதை அன்னார் ஏற்றுக் கொண்டனர். அல்லாமா ஸகாவீ (ரஹ்) கூறுகிறார்கள்: அது ஒரு நீண்ட கனவு. அதைக் கேள்விப்பட்டு எனக்கு அளவற்ற ஆனந்தம் உண்டாயிற்று. அல்லாஹு தஆலாவும் அவனது தூதரும் அந்த நூலை ஏற்றுக் கொண்டதாக நம்புகிறேன். ஈருலகிலும் எனக்குப் பெரிய பலன் கிடைக்கும் என ஆதரவு வைக்கிறேன்.
(வாசகர்களே! நீங்களும் உங்கள் நபியவர்களை அழகான முறையில் நினைவு கூறுக! வாயாலும் மனதாலும் அந்த நபியவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத்தை ஓதி வாருங்கள். உங்களுடைய ஸலவாத்து உங்கள் பெயருடன் அன்னார் திருச் சன்னதியிற் சேர்த்து வைக்கப்படுகிறது.)
அபூபக்கர் இப்னு முஹம்மது (ரஹ்) அவர்கள், அபூபக்கர் இப்னு முஜாஹிது (ரஹ்) என்பவரிடம் இருக்கும் போது ஷைகுல் மஷாயிகு ´ப்லி (ரஹ்) அவர்கள் அங்கு வந்தார். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் இப்னு முஜாஹிது எழுந்து நின்று வரவேற்றுக் கட்டித் தழுவி அவர்களுடைய நெற்றியை முத்தமிட்டு மரியாதை செய்தார். அதைக் கண்ட இப்னு முஹம்மதுஅவர்கள்,“இப்னு முஜாஹிதே, நீரும் பகுதாதின் இதர உலமாக்களும் இவர் பைத்தியக்காரர் என்று சொல்கிறீர்களே!” என்று கேட்டார். அதற்கு இப்னு முஜாஹிது,“நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன செய்தார்களோ அதையே நான் செய்தேன்” என்று கூறிவிட்டு, அவர் கண்ட கனவு ஒன்றைக் கூறலானார். அதாவது:
“நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவிற்கண்டேன். அன்னாரிடம் ´ப்லீ(ரஹ்)வந்தார்கள். உடனே அன்னார் எழுந்து அவர்கள் நெற்றியில் முத்தமிட்டனர். அந்த மரியாதை பற்றி அன்னாரிடம் வினவியதற்கு,‘இவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ‘லகத்ஜா அக்கும் ரசூலும் மின் அன்ஃபுஸிக்கும் ’என்னும் ஆயத்தைக் கடைசி சூரா வரை ஓதி ஸலவாத்தும் ஓதுகிறார். அதனாலே அவருக்கு நான் இவ்வாறு மரியாதை செய்கிறேன்” என்றனர். அவர் ஒவ்வொரு பர்லுத் தொழுகைக்குப் பிறகும் மேற்கண்ட ஆயத்தை கடைசி சூராவரை ஓதிய பின் ஸல்லல்லாஹு அலைக்க யாமுஹம்மது என்று மூன்று முறை கூறுவார் என அன்னார் கூறியதாக ஓர் அறிவிப்புக் கூறுகிறது.
அந்தக் கனவிற்குப் பின் ´ப்லீ (ரஹ்) அவர்கள் என்னிடம் வந்தபோது நீங்கள் தொழுகைக்குப் பின் என்ன ஓதுகிறீர்கள்? என்று கேட்டேன். அவர்களும் அதையே கூறினார்கள்.
(தொடரும்)